ilakkiyainfo

நம்பக தகவல்களின் அடிப்படையிலேயே விபரங்களை வெளியிட்டேன்- (சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பேட்டி)

February 23
16:45 2015

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் இர­க­சிய முகாம் ஒன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு, அந்த முகா­முக்கு “கோத்தா முகாம்” என்று பெய­ரி­டப்­பட்­டி­ருந்­த­தாக பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பர­ப­ரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டி­ருந்­தது.

இங்கு 35க்கும் மேற்­பட்ட குடும்­பங்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டிந்­த­தா­கவும், பாரா­ளு­மன்­றத்தில் தகவல் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தக­வல்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், கூட்­ட­மைப்பின் பேச்­சாளருமான­ சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அங்கு வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்த விடயம் குறித்து உரிய விசா­ரணை நடத்தி உண்மை என்ன என்­பதைக் கண்­ட­றிந்து பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­விக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது பற்­றிய மேல­திக விப­ரங்கள் என்ன என்­பதை அவ­ரு­ட­னான நேர்­மு­கத்­தின்­போது அவர் விளக்கிக் கூறினார்.

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்: இரு­ப­தி­னா­யி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் ஏற்­க­னவே காணாமல் போயி­ருப்­ப­தாக காணாமல் போனோரைக் கண்டறியும் குழு­வுக்கு முறைப்­பாடு செய்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்த நாட்டில் யுத்தம் நடை­பெற்ற காலத்தில் பல ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள். அது வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மல்­லாமல் தென்­ப­கு­தி­யி­லி­ருந்­தும்­கூட பலபேர் காணாமல் போயி­ருக்கின்றார்கள்.

வெள்ளை வான்­களில் கடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். யுத்த காலத்தில் சர­ண­டைந்த பலர் இப்­போது இல்லாமலிருக்கின்றார்கள்.

அக­தி­க­ளாகத் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த முகாம்­களில் இருந்து தூக்கிச் செல்­லப்­பட்டு காணாமல் போயி­ருக்­கின்­றார்கள். இப்­படி, பல­வி­த­மான வகையில் ஆட்கள் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள்.

இதில் நம்­ப­கத்­த­குந்­த­வர்கள் சில­ரிடம் இருந்து எனக்கு சில செய்­திகள் கிடைத்­தன. அந்த செய்­தி­களை நான் பாராளுமன்றத்தில் குறிப்­பிட்­டி­ருக்­கின்றேன்.

அதில் முக்­கி­ய­மாக திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் ஏறத்­தாழ 35க்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த குடும்­பங்­க­ளுக்­கி­டையில் எது­வி­த­மான தொடர்­பு­களும் இருக்­க­வில்லை, அதே­போன்று அவர்­க­ளுக்கு வெளியுல­கத்­து­டனும் எந்­த­விதத் தொடர்­பு­களும் இல்­லா­தி­ருந்­த­தா­கவும் எனக்கு சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.

அவ்­வாறு வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களில் சிலர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் அல்­லது அவ­ர்­களில் சிலர் விடு­தலை செய்யப்­ப­டா­தி­ருக்­கலாம்.

ஆனால், அவர்கள் இருக்கிறார்­களா இல்­லையா, அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது போன்ற விப­ரங்கள் எதுவும் தெரி­யாது.

ஆனால், அங்கு தொடர்ச்­சி­யாக நீண்­ட­கா­ல­மாக அவர்கள் வைக்­கப்­பட்­டி­ருந்­ததன் கார­ண­மாக, உள்­ளுக்குள் இருந்து அறியக்கூ­டிய அல்­லது, அங்கு பேசப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில், 35க்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் அங்கு இருந்திருக்கின்­றன.

அவர்­க­ளுக்கு நாளாந்தம் சாப்­பாடு மற்றும் பாது­காப்பு என்­பன வேறி­டத்தில் இருந்து போயி­ருக்­கின்­றன என்­பது போன்ற செய்தி­களை எங்­களால் அறியக் கூடி­ய­தாக இருந்­தது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், அங்கு பெரி­ய­தொரு முகாம் இருந்­த­தா­க­வும், அந்த முகாம் “கோத்தா முகாம்” என்று அங்கிருந்தவர்களால் அழைக்­கப்­பட்­டி­ருந்ததாக நான் அறிந்­தி­ருக்­கின்றேன்.

அங்கு 700க்கும் மேற்­பட்­ட­வர்கள் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அவர்­க­ளுக்­கான சாப்­பாடு “ட்ரக்” போன்ற வாக­னங்­களில் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­கவும் நாங்கள் அறிந்­தி­ருக்கிறோம்.

ஆகவே, இந்தச் செய்­தி­களை நான் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தி­ருக்­கின்றேன். நாட்டின் சட்டம், ஒழுங்குக்குப் பொறுப்­பான அமைச்­ச­ருக்கும் நான் பாரா­ளு­மன்­றத்தில் இந்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றேன். இது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அவ­ரிடம் நான் கேட்­டி­ருக்­கின்றேன்.

இதில் உண்மை இருக்­கின்­றது என்­பது எனக்கு நிச்­ச­ய­மாகத் தெரியும். ஏனென்றால், இதில் சம்­பந்­தப்­பட்ட ஒரு சில­ரிடம் நான் நேர­டி­யாகப் பேசி­யி­ருக்­கின்றேன்.

இது தொடர்­பாக நான் விசா­ரிக்­கப்­ப­டு­வே­னாக இருந்தால், என்னை விசா­ரிப்­ப­வர்­க­ளுக்கும் உண்­மை­களைச் சொல்­வ­தற்கும் நான் தயா­ராக இருக்­கின்றேன்.

இவர்கள் இன்னும் இருக்­கி­றார்­களா இல்­லையா, அந்த முகாம்கள் இன்னும் இருக்­கின்­ற­னவா இல்­லையா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கா­கவே நான் இந்த விட­யங்­களைப் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்தேன்.

இர­க­சிய முகாம்கள் இருப்­ப­தாக மக்கள் நம்பிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பதி­னைந்து இரு­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் பிடிபட்­ட­வர்கள், மீண்டு வந்த ஒரு­சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

ஆகவே, அந்த வகையில் மக்­க­ளுக்கு நம்­பிக்கை இருக்­கின்­றது, காணாமல் போன சர­ண­டைந்து காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள், கண­வன்மார், உற­வி­னர்கள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள், வரு­வார்கள் என்ற நம்­பிக்கை அவர்­க­ளிடம் இருக்­கின்­றது.

அது நூற்­றுக்கு நூறு வீதம் பிழை­யான, பொய்­யான என்று நான் சொல்­ல­மாட்டேன். ஆகவே, இது மிகுந்த கவ­னத்­திற்கு எடுக்கப்­பட்டு, விசா­ரிக்­கப்­பட்டு, உண்மை நிலை­மைகள் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். அந்த முகாம் ஏற்­க­னவே இருந்திருக்கின்­றது என்று நாங்கள் நம்­பு­கின்றோம்.

அந்த முகாம்கள் இன்னும் இருக்­கின்­ற­னவா இல்­லையா என்­ப­து­பற்றி எங்­க­ளுக்குத் தெரி­யாது. அதில் இவ்­வ­ளவு பேர் இருந்தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தையும் நாங்கள் நம்­பு­கின்றோம்.

அவர்கள் இப்­போது இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­பது தெரி­யாது. ஆகவே முழு­மை­யான விசா­ர­ணை­ ஒன்று தேவை. சட்டம் ஒழுங்கு அமைச்சு, பொலிஸார் அந்த விசா­ர­ணையை நடத்த வேண்டும். விசா­ரணை நடத்தி அவர்கள் உண்மை நிலையைக் கண்­ட­றிய வேண்டும்.

மக்­களை ஏமாற்­று­வ­தாக இந்த விசா­ர­ணைகள் இருக்கக் கூடாது. அர­சாங்கம் உரிய முக்­கி­யத்துவம் கொடுத்து, உரிய முறையில் இந்த விசா­ர­ணை­களை மேற்­கொள்­வதன் மூலம் பல உண்­மைகள் தெரியவரும் என்று நாங்கள் நம்­பு­கின்றோம். அந்த வகையில் நான் இந்த விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றேன்.

கேள்வி: அரச படை­களை அல்­லது அர­சாங்­கத்தைக் குற்றம் சுமத்தும் வகையில் நீங்கள் தெரி­வித்­தி­ருக்­கின்ற இந்த விடயங்களின் நம்­பகத் தன்மை, இந்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வதன் பார­தூ­ர­மான நிலைமை, அதன் பின்­வி­ளைவு என்­ப­வற்றைப் பற்றி நீங்கள் என்ன சொல்­கின்­றீர்கள்?

பதில் : சட்­ட­ரீ­தி­யாகப் பொது­மக்கள் கொடுத்­துள்ள மனுக்­களின் அடிப்­ப­டையில் 20 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடத்­தப்­பட்­ட­வர்கள், கைது செய்­யப்­பட்­ட­வர்கள், இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து காணாமல் போனவர்கள் என பல­த­ரப்­பட்டவர்­களும் இதில் அடங்­கு­வார்கள்.

எனவே, 700 பேர் ஒரு முகாமில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பது நம்­பக்­கூ­டாத ஒரு விட­ய­மல்ல. அது நம்­பக்­கூ­டி­யது என்றே நான் கரு­து­கின்றேன். ஏனென்றால், இரு­ப­தி­னா­யிரம் பேர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள்.

அவர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இது ஒரு சிறிய எண்­ணிக்­கையே. அது மட்­டு­மல்ல. நான் அறிந்து கொண்­டுள்ள எல்லா விடயங்­க­ளையும் ஊட­கங்கள் மூல­மாக வெளி­யிட முடி­யாது.

ஆகவே, நான் அறிந்த வரையில், நான் பாரா­ளு­மன்­றத்தில் கூறிய விட­யங்­களில் உண்­மைத்­தன்மை இருக்­கின்­றது, என்று நம்­பி­யதன் அடிப்­ப­டை­யி­லேயே நான் அவற்றை பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளேன்.

நான் கூறிய விட­யங்கள் பிழை­யென்று சொன்னால், இலங்கை அர­சாங்கம் அது­கு­றித்து விசா­ரணை செய்ய வேண்டும். விசா­ரணை செய்து அங்கு கடந்த காலங்­களில் எவ்­வ­ளவு பேர் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள், யார் யார் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள், அங்கு குடும்­பங்­க­ளாக ஆட்கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்­களா   இல்­லையா, நான் கூறி­யது போன்று அங்கு முகாம் இருந்­ததா இல்­லையா என்­பதைக் கண்­டு­பி­டித்து பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­விக்க வேண்­டும்.

அது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில், நான் அறிந்தவைகள் உண்­மை­யா­னது என்ற அடிப்­ப­டையில் இந்த விட­யங்­களை நான் தெரி­வித்­தி­ருக்­கின்றேன்.

அது மட்­டு­மல்­லாமல், இத­னு­டைய பார­தூரத் தன்­மை­யையும் நான் உணர்ந்­தி­ருக்­கின்றேன். அதே சமயம் மக்­க­ளு­டைய தேவை­க­ளையும் நான் உணர்ந்­தி­ருக்­கின்றேன்.

மக்கள் ஏமாற்­றப்­பட்டுக் கொண்டு வரு­கின்­றார்கள் என்­ப­தையும் நான் பார்த்திருக்­கின்றேன். அதே­ச­மயம் பல்­வே­று­பட்ட மறை­மு­க­மான முகாம்கள் இருக்­கின்­றன என்று தமிழ் மக்கள் மத்­தியில் உள்ள பர­வ­லான கதை­க­ளையும் நான் கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றேன்.

ஒரு­சிலர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தையும் நான் அறிந்­தி­ருக்­கின்றேன். இப்­ப­டிப்­பட்­ட­வர்கள் சில­ருடன் நான் பேசியும் இருக்­கின்றேன்.

அதே­நே­ரத்தில் யுத்தம் நடை­பெற்­ற­போது, வன்­னிப்­பி­ர­தே­சத்தில் இருந்­த­வர்­களில் ஒரு லட்­சத்து நாற்­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது அவர்கள் எங்கு சென்­றார்கள் என்­பது குறித்து மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­விடம் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

அது குறித்து முறை­யான விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இத்­த­கையசூழலில் திரு­கோ­ண­மலை ‘கோத்தா’ முகாமில் 700 பேர் இர­க­சி­ய­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை உண்­மை­யென்றே நாங்கள் நம்­பு­கின்றோம்.

கேள்வி: திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் இர­க­சிய முகாம் இருந்­த­தாகக் கூறு­கின்­றீர்கள். காணாமல் போயுள்­ள­வர்கள் பற்­றிய விசா­ரணை நடத்தி வரு­கின்ற ஜனா­தி­பதி ஆணைக்­குழு திரு­கோ­ண­ம­லையில் தனது அடுத்த அமர்வை நடத்தவுள்ளது.

அந்த அமர்­வின்­போது இந்த விடயம் குறித்து சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு அல்­லது அந்தக் குழுவின் கவ­னத்­திற்கு இதனைக் கொண்டு வரு­வ­தற்கு நீங்கள் நட­வ­டிக்கை எத­னையும் எடுப்­பீர்­களா?

பதில்: நாட்டின் உயர் பீட­மா­கிய பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வரும் வகையில் அங்கு இந்த விட­யங்கள் பற்றி சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.

சட்டம் ஒழுங்­குக்குப் பொறுப்­பான அமைச்சர் இதனை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்து இது­பற்றி விசா­ரிப்­ப­தாகக் கூறி­யி­ருக்­கின்றார்.

அது­பற்­றிய முழு விப­ரங்­களும் ஊட­கங்­களில் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. சட்­டம் ஒழுங்­குக்குப் பொறுப்­பான அமைச்சர் ஜோன் அம­ர­துங்க அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்பார் என்று நாங்கள் நம்­பு­கின்றோம். எனவே, காணாமல் போனோர் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­து­கின்ற குழு­வி­ன­ரு­டைய கவ­னத்­திற்கு இது நிச்­ச­ய­மாகப் போகும் என்று நான் நம்­பு­கின்றேன்.

ஆகவே, அவர்கள், காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் நேர்­மை­யான முறையில் விசா­ரணை செய்­ப­வர்­க­ளாக இருந்தால், பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த விட­யத்தைக் கவ­னத்தில் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்­பது எனது கோரிக்கை மட்­டு­மல்ல. அதனை அவர்கள் செய்ய வேண்டும் என்றும் நான் எதிர்­பார்க்­கின்றேன்.

அத்­துடன் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக அந்த ஆணைக்­கு­ழு­வினர் விசா­ர­ணை­களை நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள். பலதரப்பட்டவர்­களின் சாட்­சி­யங்­க­ளையும் அவர்கள் பதிவு செய்­தி­ருக்­கின்­றார்கள்.

அந்த சாட்­சி­யங்­களில் பெயர் குறிப்­பிட்டு குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருப்­ப­வர்­களை அழைத்து இந்த ஆணைக்­குழு விசா­ரணை செய்­தி­ருக்­கின்­றதா, அவ்­வா­றான விசா­ர­ணை­களில் ஏதேனும் நிலை­மைகள் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றதா அல்­லது அவர்கள் தொடர்­பாக நீதி­மன்ற விசா­ர­ணைக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா என்று எது­வுமே தெரி­யாது.

அதே­நேரம், காணாமல் போயுள்­ள­வர்­களில் ஒரு­வ­ரைக்­கூட அவர்கள், இது­வ­ரையில் கண்டு பிடிக்­க­வில்லை. எனவே. அவர்கள் தங்­க­ளு­டைய விசா­ரணை காலத்தில் எதனைக் கண்­டு­பி­டித்­தி­ருக்­கின்­றார்கள், என்ன செய்­தி­ருக்­கின்­றார்கள் என்­பது பற்­றிய இடைக்­கால அறிக்­கை­யொன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் கோரி­யி­ருக்­கின்றேன்.

அவ்­வா­றான இடைக்­கால அறிக்­கை­யொன்றை அவர்கள் தாக்கல் செய்­வார்­களா இல்­லையா என்­பது தெரி­ய­வில்லை.

கேள்வி: திரு­கோ­ண­மலை கடற்­ப­டையின் இர­க­சிய முகாம் குறித்து நீங்கள் பாரா­ளு­மன்­றத்தில் தகவல் வெளி­யிட்­டதன் பின்னர், அன்­றைய தினமே, தமிழ்த்­தே­சிய கூட்டமைப்பினருக்கும் அரச உயர் மட்டத்தினருக்கும்  இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

இந்தச் சந்திப்பில் இந்த விடயம் பற்றி நீங்கள் கலந்துரையாடினீர்களா, அரச தரப்பினர் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு என்ன கூறினார்?

பதில்: ஆம். பிரதமருடனான சந்திப்பின்போது திருகோணமலை கடற்படை முகாமின் இரகசிய கோத்தா முகாம் குறித்த தகவல்களையும், எடுத்துக் கூறி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம். அதேநேரம், ஹம்பாந்தோட்டையில்  இருந்தும் இரகசிய முறையில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, பிரதமர் எங்களிடம் தெரிவித்தார்.

இதுபற்றிய விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இந்தச் சந்திப்பின்போது எமக்கு உறுதியளித்திருக்கின்றார்.

அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து நாங்கள் விடுத்த கோரிக்கை பற்றியும் அவருக்கு நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

அவர் இவற்றுக்குரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். மொத்ததில் காணாமல் போயிருப்பவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை நிலைமை, திருகோணமலை இரகசிய கோத்தா முகாம் பற்றிய உண்மை நிலைமை என்பவைகள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி நடந்தது என்ன என்பதை வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

-பி.மாணிக்­க­வா­சகம.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com