ilakkiyainfo

நம்ம சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்

நம்ம சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
June 29
14:58 2017
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை அவர் வேலை செய்யும் கிளினிக்கில் வைத்து மிரட்டியுள்ளனர்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

 இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் மருந்து பரிந்துரை செய்வது தொடர்பாக திவ்யாவை சந்தித்துள்ளனர். இது குறித்து திவ்யா கூறியிருப்பதாவது,

அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் மற்றும் இந்தியர் ஒருவர் என் கிளினிக்கிற்கு வந்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறினார்கள்.

மல்டிவைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகளை கொண்டு வந்தனர்.

sathiyarajhas

அவர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஓவர் டோஸாக வைட்டமின் இருந்தது. அதனால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் அவற்றை பரிந்துரைக்க மறுத்துவிட்டேன்.

எங்களை நம்பி வருபவர்களுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றேன். அதற்கு அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.

இந்தியாவில் உள்ளவர்கள் எப்பொழுது இதுபோன்று அக்கறையுடன் நடக்கத் துவங்கினீர்கள்.

23-1498209769-21-1495348263-divya-sathyaraj-560x420

எங்களுக்கு இந்தியாவில் பல அரசியல்வாதிகளை தெரியும். வெளிநாட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட இந்தியர்களுக்கு தெரியவில்லை என்றனர்.

இந்தியாவுக்கே வந்து அவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது என்றார் திவ்யா.

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. Arya
    Arya June 30, 23:37

    அமெரிக்கர்கள் இந்த இந்தியர்களை தங்கள் அடிமைகளாகவும், எடு பிடிகளாகவும் , பிச்சைக்காரர்களாகவும் தான் பார்க்கின்றனர் , மரியாதை கொடுப்பதே இல்லை, சென்னை என்ற படியால் மிரடடலுடன் விடடார்கள், அமெரிக்கா என்றால் சுட்டு கொன்றே இருப்பார்கள். சீனாவில் இப்படி மிரட்டி பார்ப்பார்களா ? பல வருடங்கள் கம்பி என்ன வேண்டி வரும்.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com