ilakkiyainfo

‘நள்ளிரவில் யூடியூப்க்காக’… ‘மாணவர்கள் செய்த காரியம்’… ‘பீதியில் ஓடிய மக்கள்’… வீடியோ!

‘நள்ளிரவில் யூடியூப்க்காக’… ‘மாணவர்கள் செய்த காரியம்’… ‘பீதியில் ஓடிய மக்கள்’… வீடியோ!
November 13
05:05 2019

யூடியூப் சேனலுக்காக பேய் போன்று உடைகள் அணிந்து, நள்ளிரவில் பிராங்க் (Prank) செய்து மக்களை, பயமுறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்வென்சர் என்ற பெயரிலும், லைக்ஸ் மற்றும் வைரலுக்காக தற்போது, சமூக வலைத்தளங்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூரில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சிலர், ‘பிராங்க் ஷோ’ என்ற பெயரில் தங்களது யூடியூப் சேனலுக்காக , நள்ளிரவில் மக்களை பயமுறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யஷ்வந்த்பூர் ஷரிப் நகரில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஆட்டோ ஒன்று வந்துள்ளது.

அதில் வந்த ஆட்டோ ஓட்டுநரை பயமுறுத்த எண்ணிய மாணவர்கள் சிலர், வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்காக ஒளிந்துகொள்ள, ஒரு சிலர் பேய் போன்று உடை அணிந்து, விக் வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட வருவதுபோல், சென்று அவரை பயமுறுத்தியுள்ளனர்.

ஆள் அரவம் இல்லாத அந்த சாலையில், தனியாக மாட்டிக்கொண்டதால், பேய் தான் என்று நம்பி பின்னாடியே ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர்தான் இது பிராங்க் ஷோ என தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன அவர், காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார்.

இதேபோல், அந்த வீதியில் நடந்துசென்ற பலரையும், அந்த மாணவர்கள் பயமுறுத்தியதால், அவர்களும் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 7 மாணவர்கள் சேர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கொண்டிருந்ததைக் கண்டு, அவர்களை கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அதில் ஒரு மாணவனிடம், பேய் பிராங்க் வீடியோக்கள் ஏராளமாக பதிவுசெய்து, செல்ஃபோனில் வைத்திருந்ததை கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவர்களை எச்சரித்து பெயிலில் விடுவித்தனர். அவர்கள் பல நாட்களாக இதுபோன்று ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com