ilakkiyainfo

நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ.100 நோட்டுக்கு ஏற்பட்ட கிராக்கி!

நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ.100 நோட்டுக்கு ஏற்பட்ட கிராக்கி!
November 10
03:45 2016

பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் நேற்று திடீரென ரூ.100 நோட்டுகளுக்கு மவுசு அதிகமாகி விட்டது. ஏற்கனவே ரூ.100 நோட்டுகளை பத்திரமாக சேகரித்து வைத்திருந்தவர்கள் தங்களை பணக்காரர்கள் போல் உணர்ந்தனர்.

இதுபற்றி டெல்லியைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர் கூறுகையில், “அறிவிப்பு வெளியானதும் எங்கு சென்றால் 100 ரூபாய் நோட்டு கிடைக்குமோ அங்கு சென்று சேகரிப்பதில் இறங்கினோம். அந்த நேரத்தில் இந்த ரூபாய் நோட்டு எங்களுக்கு தங்கம் போல்தான் தெரிந்தது” என்றார்.

முதல் நாள் மாலையில் ரெயில் ஏறி நீண்டதூர பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் மறுநாள் காலை ரெயிலில் இருந்து இறங்கிய பின்புதான் 100 ரூபாய் நோட்டின் அருமையை உணர்ந்தனர். 500, 1,000 ரூபாய் நோட்டு வைத்திருந்தவர்கள் அவற்றை மாற்ற முடியாமல் திண்டாடினர். இதனால் டாக்சி, ஆட்டோவை பிடித்து அவர்களால் குறித்த நேரத்தில் தாங்கள் செல்லவேண்டிய இடத்தை அடைய முடியவில்லை. டெல்லியில் எந்த சில்லரை வியாபாரியும் இந்த நோட்டுகளை வாங்க மறுத்தனர்.

ஆஸ்பத்திரி, மருந்து கடைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட அதை எந்த டாக்டரும், மருந்து கடைக்காரரும் வாங்கிக்கொள்வதற்கு முன்வரவில்லை.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com