நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 319 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தலில் 83 பேருக்கும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 236 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று இதுவரை 633 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,424 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 6,123 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,282ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 444 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment