இந்தியாவில் ராஜஸ்தானின்  மாநிலத்தில் நான்கு கால்கள், மூன்று கைகள் மற்றும் இரண்டு பாலுறுப்புகளுடன்  குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

18760578-7489383-image-a-155_1569081620516ராஜஸ்தானின் டோங்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில்  கடந்த வெள்ளியன்று 24 வயதுடைய ராஜு என்ற பெண்ணே ஒட்டிப்பிறந்த இரட்டையரை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இவ்வாறு ஒட்டிப்பிறந்துள்ளன.

18760582-7489383-image-a-153_1569081608782ஆண்குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், பெண்குழந்தையின் கால்கள், ஒரு கை மார்பு மற்றும் அடிவயிறு  ஆண்குழந்தையின் உடலுடன் ஒட்டியநிலையில் உள்ளது.

இதன் காரணமாக ஆண் குழந்தைக்குச் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம்  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நான்கு கால்கள் மற்றும் இரண்டு பாலுறுப்புகள் கொண்ட குழந்தை ஒன்று பிறந்து இரண்டு நாட்களின் பின்பு  இறந்தமை குறிப்பிடத்தக்கது.