ilakkiyainfo

‘நான் உனக்கு அக்காவும் இல்ல.. நீ எனக்கு தங்கச்சியும் இல்ல..’ – அஞ்சலி அதிரடி!

‘நான் உனக்கு அக்காவும் இல்ல.. நீ எனக்கு தங்கச்சியும் இல்ல..’ – அஞ்சலி அதிரடி!
September 27
21:57 2017

சென்னை : நடிகை அஞ்சலி தமிழில் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘தரமணி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.

பல வருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி மற்றும் அவரது சித்தி பாரதி தேவி இடையே சண்டை வெளிப்படையாகவே நடந்தது. அவரின் உறவை முறித்து தற்போது அஞ்சலி தனியாக இருந்துவருகிறார்.

இந்நிலையில்,நடிகை அஞ்சலியின் தங்கையும், பாரதி தேவியின் மகளுமான ஆராத்யா தற்போது தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

201709271435368644_1_Anjali-Sis-Arathya2t._L_styvpfஆராத்யா அறிமுகமாகும் தெலுங்குப் படத்திற்கான பிரஸ்மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆராத்யா, அஞ்சலி தன் சகோதரி எனப் பேசினார்.

இதற்கு கோபமாக மறுப்பு தெரிவித்த அஞ்சலி தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே இருக்கிறார் எனவும், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது எனவும் கூறியிருந்தார். மேலும் வேறு யாரும் எனக்கு சகோதரி இல்லை எனவும் கூறினார்.

அஞ்சலி இப்படிக் கூறியது பற்றி தற்போது பேசியுள்ள ஆராத்யா, ‘அவர் மறுக்கிறார் என்பதற்காக உண்மை மாறிவிடுமா’ எனக் கேட்டுள்ளார்.
அஞ்சலி இப்படிக் கூறியது பற்றி தற்போது பேசியுள்ள ஆராத்யா, ‘அவர் மறுக்கிறார் என்பதற்காக உண்மை மாறிவிடுமா’ எனக் கேட்டுள்ளார்.

நடிகை அஞ்சலிதான் தனது தங்கை ஆராத்யாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படிப் பேசியிருப்பது அவர்களது குடும்பத்தில் மீண்டும் விவகாரம் ஏற்பட்டதெனத் தெரிகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com