ilakkiyainfo

நான் எதிர்பார்க்காத ஒன்று சினிமா- த்ரிஷா­ பேட்டி

நான் எதிர்பார்க்காத ஒன்று சினிமா- த்ரிஷா­ பேட்டி
February 05
20:16 2016

தமிழ் சினி­மாவில், 30 வயதை கடந்தால், ஹீரோ­யின்கள், அக்கா, அண்ணி வேடங்­களில் தான் நடிக்க வேண்டும் என்­பது எழு­தப்­ப­டாத விதி. இந்த விதியை தகர்­தெ­றிந்த பெருமை, த்ரிஷா­வுக்கு உண்டு. அவ­ருடன் ஒரு சந்­திப்பு:

உங்­க­ளுக்கும் பேய் ஆசை வந்­தி­டுச்சு போலி­ருக்கே?

முதன் முறை­யாக, பேய் படத்தில் நடிக்­கிறேன். ‘அரண்­மனை 1’ படம், எனக்கு மிகவும் பிடித்­தி­ருந்­தது.

அதனால், இயக்­குநர் சுந்தர். சி, இரண்டாம் பாகத்தின் கதையை கூறி­ய­துமே நடிக்க சம்­மதம் தெரி­வித்தேன். குஷ்பு, எனக்கு நல்ல தோழி என்­பதும் இந்த படத்தில் நடிப்­ப­தற்கு முக்­கிய காரணம்.

இந்த வாய்ப்பு கிடைத்தை பெரு­மை­யாக கரு­து­கிறேன். சித்தார்த், ஹன்­சிகா, சூரி என புது டீமில் இணைந்து நடித்­தி­ருக்­கிறேன். ரொம்ப சந்­தோ­ஷ­மாக உள்­ளது.

14676aranmanai-2-2365827bfb4dc6a8eedae87269a810331சினி­மா­வுக்கு நீங்க வந்­தது விபத்தா.?

ஸ்கூல் படிக்கும் போதே ெமாடலிங் துறையில் நிறைய விளம்­ப­ரங்­களில் நடித்தேன், பிறகு சினி­மாவில் நடிக்க வந்தேன்.

வாழ்க்­கை­யில அடுத்து என்ன நடக்­கும்னு தெரி­யாது. 15 ,- 16 வய­சுல எந்த கேள்­விக்கு எப்­படி பதில் பேச­ணும்னு தெரி­யாமல் தான் சினி­மா­வுக்கு வந்தேன்.

உண்­மை­யா­கவே இது விபத்து தான். நானும் என் தோழி­களும் எத்­திராஜ் கல்­லூ­ரியில் படிக்கும் போது அவுஸ்­தி­ரே­லியா போய் எம்­.சி.ஏ., படிக்க ஆசை, ஆனால் எல்­லாமே மாறி போனது. நான் எதிர் பார்க்­காத ஒன்று சினிமா.

இரண்­டா­வது இன்­னிங்­சிலும் பிஸியாக இருப்­பது குறித்து…?

நான், சினி­மாக்கு வந்து, 13 ஆண்­டுகள் ஆகி­விட்­டன என்­பதை நம்ப முடி­ய­வில்லை. அதிக படங்­களில் நடிக்க வேண்டும், முன்­னணி ஹீரோக்­க­ளுடன் நடிக்க வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன்.

ஆனால், எனக்கு கிடை த்த அனு­ப­வத்தின் கார­ண­மாக, இப்­போ­தெல்லாம் கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன். குறிப்­பிட்ட படங்­களில் மட்­டுமே நடிக்­கிறேன். ராசி­யான நடி­கை­யாக இருக்­கிறேன்.

அப்­பாவின் மறைவு, திரு­மணம் நின்று போனது என, சோக­மான நிகழ்­வு­க­ளிலும் துவண்டு போகாமல் இருப்­பது பற்றி…?

என் குடும்­பத்தில், எல்­லா­ருமே தைரி­ய­சா­லிகள் தான். எந்த ஒரு விட­யத்­தையும் எளி­தாக எடுத்துக் கொள்வர்.

என்னை வழி நடத்த அம்மா இருக்­கிறார். கசப்­பான சம்­ப­வங்கள் நடந்தால், ஒரு சில நாட்கள் அமை­தி­யாக, தனி­மையில் இருப்பேன். அடுத்த நாள், வேலையை துவங்கி விடுவேன் இதுதான் என் கேரக்டர்.

கொடி படத்தில் தனு­ஷுடன் நடிப்­பது குறித்து…?

உண்­மையை சொல்ல வேண்­டு­மானால், ‘ஆடு­களம்’ படத்­துக்­காக, தனுஷ் கூட சில நாட்கள் நடித்தேன்.

இந்தி படத்தில் நடிக்க வேண்டி வந்­ததால், கால்ஷீட் பிரச்சினை கார­ண­மாக ஆடு­க­ளத்தில் நடிக்க முடி­யாமல் போய்விட்டது.

இப்­போது, ‘கொடி’ படத்­துக்­காக அவ­ருடன் ஜோடி சேர்ந்­துள்­ளது சந்­தோ­ஷ­மாக உள்­ளது. என்­னுடன், ஷாமி­லியும் இந்த படத்தில் நடிக்­கி­றாங்க.

14676Siddharth-Trisha-in-Aranmanai-2-Movie-New-Stills-6புது­முக இயக்­கு­நர்­களின் படங்­களில் நடிக்க மறுப்­பது ஏன்.?

நிச்­ச­ய­மாக அப்­படி இல்லை. முன்பு அப்­படி ஒரு வாய்ப்பு எனக்கு அமை­ய­வில்லை.

இப்­போது என் மெயிலில் 10 புது இயக்­கு­நர்­களின் கதை இருக்கு, எல்­லாமே என்னை வைத்து எழு­திய கதைகள், கூடிய சீக்­கிரம் புது இயக்­கு­நர்கள் படத்தில் நடிப்பேன்.

13 வரு­டத்தில் சினி­மாவில் நடந்­ததும், நடக்­கா­ததும் என்ன.?

மணி சார், கமல் சார் , கெளதம் சார், படங்­களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு நான் எதிர் பார்க்­காத ஒன்று. ஆனால் ஷங்கர், ரஜினி சார் படங்­களில் இன்னும் நடிக்­கா­தது நடக்­காத ஒன்­றாக உள்­ளது. விரைவில் இது நடக்கும் என்ற நம்­பிக்கை இருக்கு.

கதைக்­காக சம்­ப­ளத்தை விட்டு கொடுத்த அனு­பவம் உண்டா?

அதெல்லாம், பல­முறை நடந்­தி­ருக்­கி­றது. முதலில், சம்­பளம் பற்றி பேச மாட்டேன். கதை தான் முக்­கியம். கதை, மிகவும் பிடித்­தி­ருந்­ததால் சம்­ப­ளத்தை குறைத்த அனு­ப­வமும் உண்டு.

இள­மையின் ரக­சியம் என்ன?

எல்­லாமே சாப்­பி­டுவேன். ஆர்யா கூறி­யது போல், இரண்டு பிளேட் பிரி­யாணி கூட சாப்­பி­டுவேன். எந்த அளவு சாப்­பி­டு­கி­றேனோ அந்த அளவு, அடுத்த சில நாட்கள் பட்­டினி கிடப்பேன். பழ­ர­சங்கள் மட்டும் சாப்­பி­டுவேன்.

ஆர்யா, உங்­களை தங்­கச்சி மாதி­ரின்னு சொன்­னாரே?

அப்­ப­டியா சொன்னார். ஆர்யா, உண்­மை­யா­கவே ரொம்ப நல்ல மனிதர். அவ­ரிடம் எந்த விட­யத்­தையும் பகிர்ந்து கொள்­ளலாம்.

ஹீரோ­யின்­க­ளுக்கு நல்ல நண்பர். அவர் வீட்­டுக்கு எப்­போது சென்­றாலும் சாப்­பி­டலாம்.

எங்கு வேண்­டு­மா­னாலும் அவரை அழைத்துச் செல்­லலாம். ஆனால், என்னை அவர் தங்­கச்­சின்னு சொன்­னது, நல்ல கொமடி. இது­கு­றித்து, அவ­ரி­டமே கேட்டு விடு­கிறேன்.

பார்ட்­டிக்கு போறதை குறைச்­சிட்­டீங்க போல…?

நெருக்­க­மான யாருக்­கா­வது பிறந்த நாள் பார்ட்டி நடந்தால் தான் போவேன். ஆனால் நான், அடிக்­கடி பார்ட்டி போவது போல் வெளியில் செய்தி பரவி விட்­டது. நண்­பர்­களை ஒரே இடத்தில் சந்­திக்­கிறோம்.

அவ்­வ­ளவு தான். சாதா­ர­ண­மாக எல்­லாரும் செய்­வது தான். ஆனால், சினி­மாவில் மட்டும் இதை வேறு ஏதோ பெரிய விஷ­ய­மாக கரு­து­கின்­றனர்.

திரும்­பவும் ராணா­வுடன் காதலா…?

எல்­லா­ரி­டமும் பேசு­வது போல் தான், ராணா­வி­டமும் பேசு­கிறேன். நட்பை தவிர வேறு எது­வுமே இல்லை. பத்திரிகைகாரர்­களே இதைப் பற்றி எழு­து­கி­றீர்கள்; பின், நீங்­களே, காதலா என கேள்வி கேட்­கி­றீர்கள்.

எப்­போது தான் திரு­மணம்?

பிஸியா இருக்­குற நேரத்­தில நான் மட்டும் இல்ல வேற யாருமே கல்­யாணம் பற்றி முடி­வெ­டுக்க மாட்­டாங்க. இப்­போ­தெல்லாம், 30 அல்­லது 40 வயது, பெரிய விடயம் இல்லை.

எனக்கு எப்­போது திரு­மணம் நடக்கும் என தெரி­யாது. மன­துக்கு பிடித்த ஆள் கிடைக்க வேண்டும். ராணி முகர்ஜி, ஐஸ்வர்யா எல்லாம், லேட்­டாகத் தானே கல்­யாணம் செய்­தாங்க. பிரி­யங்கா, இப்­போது கூட கலக்­கு­றாங்க. வாழ்க்கை துணை கிடைப்­பது அவ்­வ­ளவு எளி­தான விடயம் அல்ல. சந்­தர்ப்பம் வரும் போது பார்த்துக் கொள்­ளலாம்.

எதிர்­கா­லத்தில் அர­சி­ய­லுக்கு வரு­வீர்­களா.?

மொடலிங் பண்ணும் போது சினிமா எனக்கு சரி வரா­துன்னு இருந்தேன், வர மாட்டேன் என்று சொல்­லி­கிட்டு இருந்தேன்.

ஆனால் சினி­மா­விற்கு வந்து 13 வருஷம் ஆகி­விட்­டது. இன்னும் 10,- 15 வரு­டத்­தில என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரி­யாது. எனக்கு அர­சி­யலில் ‘ஏபி­சிடி’ கூட தெரி­யாது.

தெரி­யாத விடயத்தை நான் கையில் எடுக்க மாட்டேன். சந்தர்ப்பம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com