ilakkiyainfo

நான் கடவுள் அல்ல: நீச்சலுடை விமர்சனங்களால் நடிகை சோனாரிக்கா அதிருப்தி

நான் கடவுள் அல்ல: நீச்சலுடை விமர்சனங்களால் நடிகை சோனாரிக்கா அதிருப்தி
June 05
20:24 2016

 

நீச்­ச­லு­டையில் தான் காணப்­படும் புகைப்­படம் தொடர்­பாக சிலர் அதி­ருப்­தி­யான கருத்­துக்­களை வெளி­யிட்­டதால் கடுப்­பா­கி­யி­ருக்­கிறார் நடிகை சோனா­ரிக்கா பதோ­ரியா.

சுற்­றுலா செல்லும் பலர் தமது புகைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வதைப் போல், தனது மொரீ­ஷியஸ் சுற்­று­லா­வின்­போது பிடித்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­களை தனது இன்ஸ்­ட­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் சோனா­ரிக்கா பதோ­ரியா வெளி­யிட்­டி­ருந்தார்.

பிகி­னிக்கள் மற்றும் கவர்ச்­சி­யான ஆடை­க­ளுடன் தோன்றும் புகைப்­ப­டங்­களும் இவற்றில் அடங்கும்.

17087Sonarika-3இந்த நீச்­ச­லுடை படத்தைப் பார்த்த பலர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். ஏனெனில் சிவ­பெ­ருமான், பார்­வதி தேவியின் கதை­யம்சம் கொண்ட “தேவ் கே தேவ் மாதேவ்” எனும் தொலைக்­காட்சித் தொடரில் பார்­வதி வேடத்தில் நடித்­தவர் சோனா­ரிக்கா.

இந்­தியில் தயா­ரிக்­கப்­பட்டு 2011 முதல் 2014 வரை 820 அத்­தி­யாயங்கள் ஒளி­ப­ரப்­பான இத்­தொடர் பின்னர் தமிழ், தெலுங்கு, மலை­யாளம், இந்­தோ­னே­ஷியன், ஒரியா உட்­பட பல மொழி­களில் டப் செய்­யப்­பட்­டது.

இத்­தொ­டரில் பார்­வதி வேடத்தில் மூலம் மிகப் பிர­ப­ல­மா­கி­யி­ருந்தார் சோனா­ரிக்கா. சிலர் அவரை பார்­வதி என்றே அழைக்­கின்­றனர்.

இவ்­வாறு “பார்­வதி” வேடத்தில் தாம் பார்த்த சோனா­ரிக்கா, பிகினி உடையில் தோன்­றி­யமை பல­ருக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

raina-serial-devon-sonarika-bhadoria-mahadev-mohit_6235b264-2634-11e6-a44e-cf92da887fb1

(Actor Mohit Raina as Lord Shiva and Sonarika Bhadoria as Goddess Parvati in the show Devon Ke Dev Mahadev.)

இது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட விமர்­ச­னங்­களால் சோனா­ரிக்கா பதோ­ரியா விச­ன­ம­டைந்­துள்ளார். இது குறித்தும் சமூக வலைத்­த­ளங்­களில் அவர் தனது கருத்தை பகிர்ந்­துள்ளார்.

“நடிக நடி­கை­யரின் சொந்த வாழ்க்­கை­யையும் தொழிற்சார் வாழ்க்­கை­யையும் வித்­தி­யா­சப்­ப­டுத்திக் கொள்ளும் அள­வுக்கு இன்­றைய தலை­முறை ரசி­கர்கள் முதிர்ச்­சி­ய­டைந்­த­வர்­க­ளாக இருப்பர் எனவும் எமக்கும் ஒரு சொந்த வாழ்க்கை இருக்­கி­றது என்­பதை புரிந்­து­கொண்­ட­வர்கள் எனவும் நான் எண்­ணினேன்.

ஆனால், அது நடக்­க­வில்லை. நான் ஒரு யுவதி, கடவுள் வேடத்தில் நடித்த ஒருவர் என்­பதால், நீங்கள் தொலைக்­காட்சித் திரையின் பின்னால் ஒளிந்­து­கொண்டு கருத்துச் சுதந்­திரம் என்ற பெயரில் நினைத்­ததை எல்லாம் எழுத முடி­யாது.

இது பிர­ப­லங்­களின் வாழ்க்­கையின் ஒரு பகுதி என சிலர் கூறு­கின்­றனர்.

ஆனால், எல்­லா­வற்­றுக்கும் ஒரு வரை­யறை உள்­ளது. நான் கடவுள் அல்ல. எனக்கும் உணர்­வுகள் உள்­ளன. நான் கவ­லை­ய­டை­கிறேன்” என சோனா­ரிக்கா தெரி­வித்­துள்ளார்.

Sonarika-2அதே­வேளை அவர் தனது கவர்ச்சிப் புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் தொடர்ந்து வெளி­யிட்டும் வரு­கிறார்.

23 வய­தான சோனா­ரிக்கா பதோ­ரியா கடந்த வருடம் வெளி­யான “ஜடு­குடு” எனும் தெலுங்குத் திரைப்­ப­டத்தின் மூலம் சினி­மா­விலும் அறி­மு­க­மானார்.

இப்­ப­டத்­திலும் அவர் பார்­வதி (கடவுள் பாத்­தி­ர­மல்ல) எனும் பாத்­தி­ரத்­தி­லேயே நடித்­தி­ருந்தார்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வெளி­யா­க­வுள்ள கௌதம் கார்த்­திக்கின் “இந்­தி­ரஜித்” தமிழ் திரைப்­ப­டத்­திலும் சோனா­ரிக்கா நடித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
sonarika-8sonarika-4sonaricaa 17087Sonarika-3

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com