இரண்டு மனித குரங்குகள் நாயை குளிப்பாட்டும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பல பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளனர்.

தென் கரோலினாவில் உள்ள மார்டில் பீச் சஃபாரி என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த காணொளி வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்த காணொளியில் பாத்டப்பில் ஒரு நாயினை இரண்டு சிம்பன்ஸியும் ஒரு மனிதனும் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள்.

அதன் பின் 3 பாத் டப்பில் தனித்தனியாக மனிதனுடன் குரங்குகளும் குளிக்கின்றன. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகியுள்ளது.

இந்த காணொளி டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டு பலர் இதை பார்த்துள்ளனர்.

பார்த்த அனைவரும் விதவிதமான கமெண்டுகளை செய்துள்ளனர்.

ஒருவர் சிம்பன்ஸி ஒருபோதும் வளர்ப்பு பிராணியாக வைத்திருக்க கூடாது என்று கூறியுள்ளார். பலர் “இந்த வீடியோவை மிகவும் விரும்புவதாக” கூறியுள்ளனர்.