ilakkiyainfo

நிலங்களை இழக்கும் ஐ. எஸ் – தலைவர் தப்பியோடிக்கொண்டிருக்கிறார்

நிலங்களை இழக்கும் ஐ. எஸ் – தலைவர் தப்பியோடிக்கொண்டிருக்கிறார்
June 13
16:41 2017

ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி தனது கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய பிரதேசங்களை இழக்கும் நிலையிலுள்ள போதிலும் அவரை கொல்வற்கு பல வருடங்கள் பிடிக்கலாம் என அதிகாரிகளும் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பு ஈராக்கில் உள்ள மொசூலையும் சிரியாவில் ரக்காவையும் இழக்கும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் ஐஎஸ் தலைவர் இந்த இரு பிரதேசங்களிலும் இருந்து வெகு தொலைவில் மலைப்பகுதியொன்றில் பதுங்கியுள்ளார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவரால் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு பதுங்குழிக்குள் இருக்க முடியாது அவர் கைதுசெய்யப்பட்டுவார் அல்லது கொல்லப்படுவார் என தெரிவிக்கும் அதிகாரிகள் எனினும் அதற்கு சில வருடங்கள் எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பக்தாதி தன்னை சுற்றியிருப்பவர்கள் தனக்கு துரோகமிழைப்பதை தவிர்ப்பது குறித்து மிகுந்த அக்கறையுடன் உள்ளார் என தெரிவிக்கின்றார். ஐஎஸ் அமைப்பு குறித்து அராபிய அரசாங்கங்களிற்கு ஆலோசனை வழங்கி வரும் கிசாம் அல் கஸ்மி.

பக்தாதியின் தலைக்கு அமெரிக்கா 2 5மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆட்சி புரிவதற்கு நிலம் இல்லாத நிலையில் பக்தாதியால் தன்னை அனைத்து முஸ்லீம்களிற்கான தலைவர் என அழைக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் ஓடிக்கொண்டிருக்கிறார் ஐஎஸ் தனது கட்டுப்பாட்டுப்பிரதேசங்களை இழப்பதால் அவர்களிற்கான ஆதரவு குறைந்து வருகின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

2014 ம் ஆண்டு மௌசூல் பகுதியிலேயே பக்தாதி தன்னை அனைத்து முஸ்லீம்களிற்குமான தலைவராக அறிவித்திருந்தார்.

அந்த நகரின் பெரும்பகுதியை தற்போது ஈராக்கிய படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

பக்தாதி இறுதியாக 2014 ம் ஆண்டிலேயே வீடியோ ஓன்றில் தோன்றினார்.அவ்வேளை அவர் கறுப்பு உடை அணிந்திருந்தார்.

பக்தாத்தில் பிறந்த 46 வயது பக்தாதி 2013 இல் அல்ஹைதா இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

567effe1c46188132a8b4574-e1497281181811

ஓசாமா கொல்லப்பட்டு இரண்டு வருடங்களிற்கு பின்னர்). மத பின்னணியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த பக்தாதி பக்தாத்தில் இஸ்லாமிய மத கோட்பாடுகள் குறித்து கற்றவர் 2003 ம் ஆண்டு முதன்முதலில் சலாபி ஜிகாத் கிளர்ச்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவரை ஓரு முறை கைதுசெய்திருந்த அமெரிக்க படையினர் பின்னர் விடுதலை செய்திருந்தனர்.

அமெரிக்க அறிவித்துள்ள சன்மானம் கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அது அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளது மெய்ப்பாதுகாவலர்களை குறைத்துள்ளது.

பக்தாத்தை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் குறித்த நிபுணர் ஓருவர். ஐஎஸ் தலைவர் ஓரு இடத்தில் 72 மணித்தியாலத்திற்கு மேல் தங்கியிருப்பதில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

be306afe-4f8d-40ff-a7bd-6cb1d3160aaa_16x9_600x338

பக்தாதி பதட்டமானவராக மாறியுள்ளார் தன்னுடைய நடமாட்டங்கள் குறித்து அவதானமாகவுள்ளார் என்கிறார் இன்னொரு நிபுணர் அவர் நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

பக்தாதி தற்போது தான் உயிர்தப்புவது குறித்தே அதிக கவனம் செலுத்துகின்றார் என அமெரிக்க ஈராக் அதிகாரிகள் கருதுகின்றனர்.

எனினும் அவர் இருக்கும் இடம் இன்னமும் தெரியாமலேயே உள்ளது.

பத்தாதி தொலைபேசிகளை பயன்படுத்துவதில்லை அவரது இரு மிக நெருங்கியசகாக்களான இருவரிடம் ஓரு சிலரே தொடர்புகொள்ள முடியும்.

பக்தாதி சாதரண கார்களிலேயே நடமாடுகின்றார் அல்லது விவசாயிகளின் வாகனங்களை பயன்படுத்துகின்றார்.

ஈராக் சிரியா எல்லையிலுள்ள தனது இரு மறைவிடங்களிற்கும் செல்லும்வேளை அவருடன் வாகனச்சாரதியும் இரு மெய்ப்பாதுகாவலர்களும் மாத்திரம் இருப்பது வழமை.
ஐஎஸ் தலைவர் பக்தாதியை கண்டுபிடிப்பதற்கா அமெரிக்கா கூட்டு செயலணியொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலணியில் விசேட படைப்பிரிவுகள் சிஐஏ மற்றும் அமெரிக்காவின் ஏனைய புலனாய்வு பிரிவினர் அங்கம் வகிக்கின்றனர்.

3500-1024x614

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com