ilakkiyainfo

நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது
March 02
17:24 2019

நீண்ட காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கும்பலொன்றை தாம் கைது செய்துள்ளதாகவும், கொள்ளைச் சம்பவம்  இடம்பெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராக்கள்  குறித்த கும்பல் கைது செய்யப்படுவதற்கு உதவி புரிந்தன எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கும்பல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நெல் மூட்டைகளை களவாடிய சம்பவத்துடன் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் நெல் அறுவடையின்போது வீடுகளிலும், வீதியோரங்களிலும், வயல் நிலங்களிலும். ஆரிசி ஆலைகளிலும் வைக்கப்பட்டிருந்த சுமார் 300 க்கு மேற்பட்ட நெல் மூட்டைகளை இக்கும்பல் திருடியுள்ளது.

Photos__3_அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிபில, அக்கரைப்பற்று, காத்தான்குடி, மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இக்கும்பல் சம்மாந்துறை, பாலமுனை, அக்கரைப்பற்று, இலுக்குச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும், வயல் நிலங்கள், வீதியோரங்கள் போன்றவற்றில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் களவாடியுள்ளனர்.

Photos__1_சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட நெல் மூட்டைகள் தரகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலும், தூர பிரதேசத்திற்கு விற்பனைக்காக நெல்மூட்டைகளுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் லொறியொன்று நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேச நபர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவததோடு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com