ilakkiyainfo

பாகிஸ்தானில் பெண்கள் நால்வர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பெண்கள் நால்வர் சுட்டுக் கொலை
February 23
16:12 2021

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் குறைந்தது நான்கு பெண் அபிவிருத்திப் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதி முன்னர் பாகிஸ்தான் தலிபான்களின் தலைமையகமாக இருந்த இடமாகும்.

இப்பி என்ற கிராமத்திற்கு அருகில் நேற்றுக் காலை 9.30 மணி அளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக மூத்த பொலிஸ் அதிகாரியான சபியுல்லா கண்டபுர் தெரிவித்துள்ளார்.

இந்த பணியாளர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தின் மீது அங்கு வந்த தாக்குதல்தாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழங்குடி கலாசாரம் இருக்கும் இந்தப் பகுதியில் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவது ஏற்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல்தாரிகள் அருகில் இருக்கும் மலைப் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com