ilakkiyainfo

பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்!! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்!! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
April 02
14:33 2017

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது.

158338_2மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம்.

ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது.

இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது.

இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட)நம்பிக்கையாக உள்ளது.

201704021057094789_20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah-in_SECVPF.gifஇந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது.

இந்த போட்டியின் விளைவாக நேற்று பின்னிரவு நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.

158338_4அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர்.

அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

158338_1இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள காவற்துறையினர் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com