பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு முயற்சி?

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் எனதெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் உத்தியோகப்பற்றற்ற தடையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து விசாரணைகள் முடிவடையும் வரை அவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதை தடை செய்வதற்கான உத்தியோகப்பற்றற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பணியாளரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அவரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானநிலைய ஊழியர்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம், நடந்தது என்னவென்பதை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளிப்பது அவசியம் என முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட பணியாளரிடமிருந்து இதுவரை சிஐடியினர் வாக்குலம் பெறவில்லை என்;பதையும் அரசவட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை பாதிக்கப்பட்டவரின் அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என சிஐடியினர் தெரிவிப்பதாக டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment