ரெட் பெட்ரூமில், தேவதைகளான சிநேகன், கணேஷ், சுஜா பாதுகாத்துவரும் லாக்கரை, பேய்களான ஆரவ், ஹரீஷ், பிந்து அணியினர் தங்களிடம் உள்ள சாவியால் திறக்க வேண்டும் என்கிற ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’ டாஸ்க் தொடர்கிறது.
நள்ளிரவு 2:30 மணிக்கு எழுந்து ஆரவ் இப்போது லாக்கரைத் திறப்பதற்கான சூழல் இருக்கிறதா என்று சுற்றி சுற்றி வந்தார். ஆனால் தேவதைகள் அணியினர் பெட்டை கொஞ்சம் இழுத்துப்போட்டு லாக்கரை மறைத்தாற்போல் படுத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டம் என்பது அவருக்கு புரிந்தது.
ஆனால், இப்படி டாஸ்க் என்னும் பெயரில் அங்கேயே பாயப்போட்டு படுத்துக்கொள்வதெல்லா, மிகவும் மோசம்.
நேற்று ஆரவ் சொன்னது போல், கணேஷ், சிநேகன் என இரு டாஸ்க் வெறியர்களுடன் போட்டி போட்டதற்காகவே, பேய்கள் அணியினருக்கு பாயின்ட் கொடுத்து விடலாம் என்று தான் தோன்றியது.
விடிந்திருந்தது. டாஸ்க்கின் காரணமாக வேக்கப் சாங்கிற்கு முன்பே எல்லாரும் எழுந்திருந்தார்கள். ஆரவும் ஹரீஷூம் சுஜாவின் கைகளை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இழுத்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள்.
பக்கத்தில் நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிநேகனுக்கும் கணேஷூக்கும் பொறாமையாக இருந்தது போல. கணேஷ் தன் வாயாலேயே அதைச் சொன்னார்.
‘இப்படியெல்லாம் பண்ணா தேவதைகளுக்கு ஜெலஸ்ஸா இருக்கும்’ என்றார். சார் உங்க ஒயிஃப் பாத்திட்டு இருப்பாங்க… ஜாக்கிரதை. கோலம் போடவிடுங்கடா என்று சிணுங்கினார் சுஜா.
கோலம் போட்டு லவ் யூ எழுதிட்டு வர்றேன் என்று அவர் குழந்தைத்தனமாக சொன்னது கவிதையாக இருந்தது. சுஜா வழக்கம்போல் சிணுங்கிக்கொண்டே ஏதோ சொல்ல ஆரவ், சுஜாவை எட்டி உதைத்தார்.
அன்பாகத்தான் செய்தார் அவ்வளவு ஃபோர்ஸாக இல்லையென்றாலும் இதெல்லாம் நல்ல பழக்கமாக தெரியவில்லை.இதற்கு முன்னரும் இப்படித்தான் ஓவியாவை செல்லமாக உதைக்கிறேன் என உதைத்து, ஓவியா ஆர்மியின் வசவுகளை வாங்கிக் கொண்டார் ஆரவ்.
சுஜாவிற்கு ஆர்மி இல்லை என்கிற வரை சந்தோஷம்.(இல்ல ஆரம்பிச்சுட்டாங்களா?) ‘நீ நாட்டி பாய் இல்ல நாட்டி பேய்’ என்று கலாய்த்தார் கணேஷ்
Part 02
Part 03
Part 04
Part 05