ilakkiyainfo

பிக் போஸ் 66 ஆம் நாள்: மீண்டும் ஜூலி, ஆரத்தி அலப்பறை – (வீடியோ)

பிக் போஸ் 66 ஆம் நாள்: மீண்டும் ஜூலி, ஆரத்தி அலப்பறை – (வீடியோ)
September 06
02:29 2017

‘ஐ’ திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலித்தது. ‘லேடியோ’.

காலையில் எழுந்தவுடனேயே தன் அலப்பறையை ஆரம்பித்தார் ஆரத்தி. ‘வேலை செய்யப் போற மதுரை டீமிற்கு எதுக்கு இவ்ள மேக்கப். எனக்கு பசிக்குது. டிபன் செய்யுங்க’ என்று உத்தரவுகள் அதிகாரத்துடன் காற்றில் பறந்தன.

ஏதோ பிறந்ததில் இருந்தே NRI என்பது போல ஆரத்தியின் அதிகார தர்பார் கொடி கட்டிப் பறக்கிறது.

ஜூலி மதுரை பாணியில் ஒரு பாட்டு பாட, ஆரவ்வும் பிந்துவும் நடனமாடினர். ‘நாம் ஆட வைக்க வேண்டிய அணி. நாம் ஆடக்கூடாது’ என்று NRI ஜபர்தஸ்தை நிலைநிறுத்த முயன்றார் ஆரத்தி. என்றாலும் அவர்களின் நடனத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆரத்தி, trigger ஆரத்தியாக மாறி ஓவியா விஷயம் தொடர்பாக ஆரவ்வை கேள்விக் கணைகளால் துளைத்தார். “நீங்க ஜெயிச்சு வரும் போது ஓவியா வெளில இருந்தா என்ன பண்ணுவீங்க? அவங்க ப்ரபோஸ் செஞ்சா உங்க ரியாக்ஷன் என்ன? அவங்களை மிஸ் பண்றீங்களா? ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்ககூடாது என்றெல்லாம் ஆரவ்வை சங்கடத்தில் ஆழ்த்தினார். விவஸ்தையற்ற கேள்விகள். இந்த நோக்கத்தில்தான் ஆரத்தியை பிக்பாஸ் உள்ளே விட்டிருக்கிறார் போலிருக்கிறது.

66_2_09392

ஆரத்தியின் அதிகப்பிரசங்கித்தனத்தை சாமர்த்தியமாக சமாளித்து வெளியேறினார் ஆரவ். ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசினால் மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதுதான் ஆரத்தியின் கணக்காக இருக்குமே தவிர, ஓவியாவின் மீதுள்ள உண்மையான அன்பாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

ஆரத்தி வெளியேறாமல் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருந்திருந்தால் காயத்ரி குழுவுடன் இணைந்து ஓவியாவை நிச்சயம் நோகடித்திருப்பார் என்று உறுதியாக தோன்றுகிறது.

ஆரவ்வை சங்கடப்படுத்தி முடிந்ததும் அடுத்து ஜூலிக்கு நகர்ந்தார் ஆரத்தி. “ஆரவ்வைப் பார்த்தா ஒரு மாதிரி இருக்கு” என்று ஜூலி காயத்ரியை தனிமையில் அழைத்து முன்பு சொல்லியிருந்தார். அதை விவஸ்தையே இல்லாமல் காயத்ரி பொதுவில் சொல்லி ஜூலியை கிண்டலடித்தார்.

இப்போது ஆரத்தியும் அதே விஷயத்தை செய்கிறார். முன்பு நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி “ஆரவ்வைப் பார்த்தா இப்பவும் ஒரு மாதிரி இருக்கா?” என்று ஆரத்தி கேட்டதற்கு ஜூலி மட்டுமல்லாமல் ஆரவ்வும் சங்கடமடைந்தார்.

66_July_09364
“ஏன் இப்ப பழைய விஷயங்களை கிளர்றீங்க?” என்று கோபமடைந்தார். “ஆரவ்வை முதல்ல இருந்தே ‘அண்ணா’ ன்னுதான் கூப்பிடறேன். அவர் கண்களை பார்த்தா, சிகரெட் பிடிக்கற ஸ்டைலைப் பார்த்தா எங்க அப்பா ஞாபகம் வருது’ன்னு சொன்னேன்” என்று ஜூலி விளக்கமளித்தாலும் ஆரத்தி அந்த பஞ்சாயத்தை முடிப்பதாக தெரியவில்லை. ஒருவரை வெறுப்பேற்றுவதில் ஆரத்தி கில்லாடியாக இருக்கிறார்.

இதற்காக 12.07.2017 அன்று நடந்த நிகழ்வை தேடிப் பார்த்தேன். ‘படையப்பா’ ரஜினி மாதிரி உடையணிந்த தினம் அன்று. தனக்கான பாடல் வந்ததும் அதற்கு  ஆடி முடித்து விட்டு காயத்ரியை தனிமையில் அழைத்த ஜூலி, ‘என்னமோ தெரியலைக்கா.. ஆரவ்வை பார்த்துக்கிட்டே இருக்கணும் மாதிரி இருக்கு.

என்னன்னு சொல்லத் தெரியலை’ என்றுதான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறார். இதை நமீதாவிடம் சொல்லிச் சிரித்த காயத்ரி, வீடெங்கும் பரப்பி விட சக்தியும் ஆரவ்வை வைத்துக் கொண்டே கிண்டலடிக்கிறார். சுற்றி அமர்ந்திருந்த சிநேகன் உள்ளிட்டோர் சிரித்து மகிழ்கின்றனர்.

66_6_09534

பொதுப்பார்வைக்கு ஜூலி ஆரவ்வின் மீது இனக்கவர்ச்சி கொண்டிருப்பது போலத்தான் ஜூலியின் அந்த உடல்மொழியை வைத்து இந்த நிகழ்வை புரிந்து கொள்ள முடியும். ஆனால் ‘அவர் எனது தந்தையை நினைவுப்படுத்தினார்’ என்று சம்பந்தப்பட்டவரே விளக்கம் அளிக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே முறை. ‘அப்பாவை போய் யாராவது குறுகுறுன்னு பார்ப்பாங்களா?’ என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது ஆபாசமானது.

இதைத்தான் ஆரத்தி செய்து கொண்டிருக்கிறார். மேலும், ஒருவருக்கு சங்கடமளிக்கும் பழைய விஷயங்களை அவரிடமே கிளறிக் கொண்டிருப்பதும் நாகரிகம் ஆகாது.

கோபத்துடன் தனிமையில் சென்று அமர்ந்து விட்ட ஜூலியிடம் விடாப்பிடியாக சென்று பேசிக் கொண்டிருந்தார் ஆரத்தி. “ஜூலி இப்படிக் கிடையாதே” என்று ஆரத்தி கேட்ட போது ‘இப்படி கேட்காம விட்டு விட்டுதான் நிறைய விஷயங்கள் தப்பாயிடுச்சு’ என்றார் ஜூலி. “லவ்வா இருந்ததுன்னா சொல்லப் போறேன். நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று அவர் கேட்பது ஒருவகையில் நியாயமானது.

Part 01

Part 02

Part 03

Part 04

Part 05

காணாத காட்சி

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com