ilakkiyainfo

பிச்சை எடுப்­ப­தை­விட விடு­தி­களில் நடனம் ஆடு­வது மேல்: இந்திய உயர் நீதி­மன்றம் தெரி­விப்பு

பிச்சை எடுப்­ப­தை­விட விடு­தி­களில் நடனம் ஆடு­வது மேல்: இந்திய உயர் நீதி­மன்றம் தெரி­விப்பு
April 27
18:47 2016

 

பொது இடங்­களில் பிச்சை எடுப்­ப­தை­விட மது­பான விடு­தி­களில் நடனம் ஆடு­வது எவ்­வ­ளவோ மேல் என இந்திய உயர் நீதி­மன்றம் தெரிவித்துள்ளது.

மஹ­ராஷ்­டிரா மாநி­லத்தில், மது­பான விடு­தி­களில் அழ­கிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்­டு­க­ளாக நடந்து வந்­தது.

இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்­மா­நில அரசு சட்­டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்­ட­மன்­றத்தில் மசோ­தா­வாக நிறை­வேற்­றி­யது.

இதன்­படி நட்­சத்­திர ஹோட்­டல்கள், நாடக அரங்­குகள், கலை­ய­ரங்கம், விளை­யாட்டு கிளப்­புகள் போன்­ற­வற்­றிலும் அழ­கிகள் நட­னத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டது.

இதனை எதிர்த்து இந்­திய ஹோட்­டல்கள் மற்றும் ‘ரெஸ்­டாரண்ட்’ சங்கம் உள்­ளிட்­ட­வர்கள் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர்.

மது­பான விடு­தி­களில் பெண்கள் நட­ன­மாடும் போது, அவர்­களை பார்­வை­யா­ளர்கள் தொடக்­கூ­டாது. மேலும் அவர்கள் மீது ரூபா நோட்­டு­களை அள்ளி வீசக்­கூ­டாது.

மீறி செயற்­பட்டால், 6 மாதம் சிறைத் தண்­டனை அல்­லது 50 ஆயிரம் ரூபா அப­ராதம் விதிக்­கப்­படும் அல்­லது இரண்டும் சேர்த்து விதிக்­கப்­படும்.- இரவு 11.30 மணி வரை மட்­டுமே அழ­கிகள் நட­னத்­துக்கு அனு­மதி அளிக்­கப்­படும்.

– மது­பான விடு­தி­களின் நுழைவு வாயிலில் கண்­கா­ணிப்பு கெமரா பொருத்­தப்­பட வேண்டும். 30 நாளுக்கு ஒரு­முறை கெமரா பதிவை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்டும்.

– அழ­கி­களை தவ­றாக பயன்­ப­டுத்தி பணம் சம்­பா­தித்­ததால் விடுதி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு 10 இலட்சம் அப­ராதம் மற்றும் சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும்.

-அழ­கிகள் நட­னத்­தின்­போது விடு­தி­களில் மது­பா­னத்­துக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் போதை பொருட்­களை பயன்­ப­டுத்த தடை.- 25 வய­துக்கு உட்­பட்ட பெண்­களை நடன அழ­கி­க­ளாக பயன்­ப­டுத்த தடை.

– 25 வயதை தாண்­டிய பார்­வை­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி. -லைசென்ஸ் இல்­லாமல் விடு­தி­களை நடத்­தினால் 25 இலட்சம் அப­ராதம் விதிக்­கப்­படும். அல்­லது 5 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என்று குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

இம்­ம­னுவை விசா­ரித்த உச்ச நீதி­மன்றம், “ஆடு­வது ஒரு தொழில், ஆட்­ட­மா­னது ஆபா­ச­மாக இருக்­கக்­கூ­டாது.

அப்­படி இருந்தால் அரசின் ஒழுங்­கு­ப­டுத்தும் நடவடிக்கைக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது.

பிச்சை எடுப்பதை விட ஆடுவது சிறந்தது, வறுமையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெண்களே இந்த தொழிலை தெரிவு செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com