ilakkiyainfo

பிஞ்சுக்கு நஞ்சை ஊட்டி ..மகனுக்கு இமயனாக மாறிய தந்தை!! -வசந்தா அருள்ரட்ணம்

பிஞ்சுக்கு நஞ்சை ஊட்டி ..மகனுக்கு இமயனாக மாறிய தந்தை!! -வசந்தா அருள்ரட்ணம்
December 08
21:37 2014

 

தித்­திக்கும் மழலை மொழியில், தேன் சிந்தும் எச்சில் துளிகள்… ஆயுள் ஒன்றும் போதாது அந்த அழகை ரசிப்­ப­தற்கு…..”

திகட்­டாத புன்­ன­கை­யுடன் தன் பிஞ்­சுக்­க­ரங்­களை பற்­றி­ய­வாறு நடை பழகும் குழந்­தையின் குறும்பில் ஆறாத காயங்­களும் ஆறும். கட­வுளின் திரு உரு­வங்கள் குழந்­தைகள்.

இதனால் தான் குழந்தை வரம் கேட்டு எத்­த­னையோ கோவில் மரங்­களில் தொட்­டில்கள் தொங்­கு­கின்­றன, கோடிக்­க­ணக்கில் செல­வ­ழித்து மருத்­துவ வசதிகளை நாடு­கின்­றனர். ஏனெனில், ஒரு பெண்­ணுக்கு தாய்­மை­யையும், ஆணுக்கு தந்தை என்ற அடை­யா­ளத்­தையும் தரு­வது குழந்தைப் பாக்கியம்தான்.

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் உரு­வான நாள் முதல் அன்­பையும் பாது­காப்­பையும் வழங்கும் கடப்­பாடு அதன் பெற்­றோ­ரையே சாரும். ஆனால் இன்று  பாலூட்டி சீராட்டி வளர்க்கும் பெற்றோர் சிலர் இறு­தியில் பெற்ற பிள்­ளை­க­ளுக்கே இய­ம­னாக மாறு­கின்­றார்கள்.

அதுவும் மூன்று வேளை தவ­றாமல் உண­வூட்­டிய கைக­ளி­னா­லேயே உண­வோடு சேர்த்து நஞ்­சி­னையும் கலந்து ஊட்ட எப்­படி மனம் வரு­கின்­றதோ…. தெரி­ய­வில்லை.

நினைக்­கவே வேதனை நெஞ்சை இறுக்­கு­கின்­றது… தாங்கள் செய்த தவ­றுக்­காக மட்­டு­மன்றி, தாங்கள் பெற்ற கடன் சுமை, குடும்ப வறுமை அதுமாத்திரமின்றி பல்­வேறு மன அழுத்தங்கள் கார­ண­மாக பெற்ற பிள்ளை என்று கூடப் பார்க்­காமல் பாலூட்­டிய கைக­ளி­னா­லேயே நஞ்­சூட்டும் காரி­யங்கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில் தந்தை ஒரு­வ­ரினால் பச்­சிளம் குழந்தை ஒன்று நஞ்­சூட்­டப்­பட்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் மனதை வெகு­வாக உலுக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

மன்னார் மடு, பாலம்­பிட்டி பிர­தே­சத்தைச் சேர்ந்த நவ­ரத்­தினம் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) உயி­ருக்குப் போரா­டிய நிலையில் பெரி­ய­பண்­டி­ வி­ரிச்சான் வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அதே வேளை அவ­ரது ஒன்­றரை வயது பச்­சிளம் குழந்தை உயி­ரி­ழந்த நிலையில் வீட்டில் சட­ல­மாகக் கிடப்­பதும் தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து இச்­சம்­பவம் தொடர்­பாக வைத்­தி­ய­சா­லையின் மூலம் மடு, பொலிஸ் பிரி­வுக்கு தெரியவந்­த­தை­ய­டுத்து, இக்­கு­ழந்­தையின் மர­ணத்தில் சந்­தேகம் கொண்ட பொலிஸார் அந்தக் குழந்­தையின் மரணம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து (கடந்த மாதம் 26 ஆம் திகதி) மன்னார், பாலம்­பிட்­டிய என்ற அழ­கிய கிரா­மத்தை நோக்கி மடு பொலிஸார் தமது விசா­ர­ணை­க­ளுக் ­காக பயணத்தை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

அவர்கள் அங்கு செல்­லும்­போதே இதற்கு முன்­னரும் இதே கிரா­மத்­துக்கு ஒரு விசா­ர­ணைக்­காக வந்­தி­ருந்­தது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு நினை­வுக்கு வந்­தி­ருக்­கின்­றது.

எனினும் அது யாரைப்­பற்­றி­யது, எதைப்பற்­றி­யது என்ற விட­யங்கள் உடன் நினை­வுக்கு வர­வில்லை. விட­யங்­களை நினை­வு­ப­டுத்த முயற்­சித்­த­வாறே பாலம்­பிட்­டிய கிரா­மத்தை நோக்கிச் சென்­றி­ருக்­கின்­றனர்.

குறிப்­பிட்ட சம்­பவம் நடை­பெற்ற இடத்தை அடைந்­ததும் அங்கு காணப்­பட்ட சிறிய சில்­லறைக் கடை ஒன்­றுடன் கூடிய வீடு  நவ­ரத்­தி­னு­டை­யது என்­பதை இனங்­கண்ட பொலி­ஸா­ருக்கு நவ­ரத்­தி­னத்தின் முகமும், அவ­ரது அந்த கடைத் தொகு­தியும் உடனே நினை­வுக்கு வந்­தது.

அதற்கு காரணம் ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன் இதே இடத்தில் தான் தீபா என்ற (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) பெண்ணின் திடீர் மரணம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வந்­தி­ருக்­கின்­றனர்.

தீபா என்­பது வேறு யாரு­மல்ல. இன்று வைத்­தி­ய­சா­லையில் உயி­ருக்குப் போராடும் நவ­ரத்­தி­னத்தின் ஆசை மனை­வியும் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ள ஒன்­றரை வயது குழந்­தையின் தாயு­மாவார்.

கடந்த மாதத்­துக்கு முன் தான் பால் மணம் மாறாத அந்தப் பச்­சிளம் பால­கனை அவள் தவிக்க விட்­டுச்­சென்று விட்டாள். தீபா நஞ்­ச­ருந்­தியே தற்­கொலை செய்து உயி­ரி­ழந்து விட்­ட­தாக தகவல் கிடைத்­ததை அடுத்தே இவ­ளது மரணம் தொடர்­பாக விசா­ரிக்­கவே பொலிஸார் முதல் முதல் இங்கு வந்து சென்றிருக்­கின்­றனர்.

எனினும் தீபாவின் மரணம் குடும்­பத்தில் ஏற்­பட்ட மனஸ்­தாபம் கார­ண­மா­கவே நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்­துள்ளார் என்று முடி­வா­னதால் பொலிஸார் விசா­ர­ணை­களை கைவிட்­டி­ருந்­தனர்.

இத­னி­டையே இரண்­டா­வது தட­வையும் இதே வீட்டில் ஒன்­றரை வயது குழந்தை உயி­ரி­ழந்­துள்­ள­மையே பொலி­ஸாரின் சந்­தே­கத்­துக்கு மேலும் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

ஒன்­றரை வயது குழந்­தைக்கு எப்­படி தெரியும் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்ய? ஆக நவ­ரத்­தினம் தான் உண­வோடு நஞ்­சினை கலந்து குழந்­தைக்கும் ஊட்டி தானும் தற்­கொலை செய்ய முயற்­சித்­தி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்க ஆரம்­பித்­தனர்.

பொலிஸார் விசா­ர­ணைக்­காக சென்­றி­ருந்த போது நவ­ரத்­தி­னத்தின் வீட்டில் உயி­ரி­ழந்த அந்த ஒன்­றரை வயது குழந்­தையின் உட­லைத்­த­விர வேறு யாரும் இருக்­க­வில்லை.

நீல நிறத்­தி­லான பிளாஸ்டிக் பாயின் மீது ஒரு சிறிய மொட்டு மடிந்து கிடந்­தது. ஒரு நிமிடம் கல்­லையும் கரையச் செய்யும் காட்சி அது. பல­வி­த­மான குற்ற செயல்­களைப் பார்த்து பக்­கு­வப்­பட்ட பொலி­ஸா­ருக்குக் கூட அந்த குழந்­தையின் மரணம் கண்­களை கலங்கச் செய்­தது.

குழந்தை இறந்து கிடந்த பாய்க்கு அருகில் ஒன்­றரை மாதத்­துக்கு முன் இறந்த தீபாவின் புகைப்­ப­டமும், வைத்­தி­ய­சா­லையில் உயி­ருக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருக்கும் நவ­ரத்­தி­னத்தின் புகைப்­ப­டமும் காணப்­பட்­டது.

மடு பொலிஸார் இது தொடர்­பாக வலு­வான கார­ணங்­களை ஆராய்­வ­தற்­காக யாழ்ப்­பாணம், வவு­னியா பொலி­ஸா­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­துடன் ஆதா­ரங்­க­ளையும் சேக­ரித்­தனர்.

அவர்­களின் விசா­ர­ணையின் மூலம் கிடைத்த தக­வல்­களின் படி வசதி வாய்ப்­புகள் குறைந்த ஏழை மக்கள் வாழும் ஒரு கிரா­ம­மாக அது இருந்த போதிலும் நவ­ரத்­தி­னத்தின் குடும்­பத்­துக்கு வசதி வாய்ப்பில் எந்­தக்­கு­றையும் இருக்­க­வில்லை. ஓர­ளவு  வச­தி­யா­ன­வர்கள் தான்.

நவ­ரத்­தினம் வீட்­டோடு சேர்ந்து ஒரு சில்­லறைக் கடையை நடத்­தி­ய­துடன், தனியார் நிறு­வ­ன­மொன்றில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரா­கவும் கட­மை­யாற்றி வந்­துள்ளார். நவ­ரத்­தினம், தீபா தம்­ப­தி­க­ளுக்கு தர்ஷன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற ஒன்­றரை வயது குழந்தை இருந்­துள்­ளது.

திரு­மணம் முடித்து அமை­தி­யா­கவும் அழ­கா­கவும் சென்று கொண்­டி­ருந்த அவர்­களின் திரு­மண வாழ்வில் யார் கண்­பட்­டதோ கடந்த மூன்று மாதங்­க­ளா­கவே சிறு சிறு மனஸ்­தா­பங்கள் இருந்து கொண்டே வந்திருக்­கின்­றன.

இந்த மனஸ்­தா­பத்தின் கார­ண­மாக தான் ஒன்­றரை மாதத்­துக்கு முன் நவ­ரத்­தி­னத்தின் மனைவி தீபா நஞ்சருந்தி தன் கண­வ­னையும், பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்­தை­யையும் விட்டு  நிரந்­தர பய­ணத்­துக்கு சென்று விட்டாள்.

திடீ­ரென ஏற்­பட்ட மனை­வியின் மர­ணத்­தினால் நவ­ரத்­தினம் கலங்கிப் போனான் “தங்­க­ளுக்குள் ஏற்­பட்ட மனஸ்­தா­பத்­தினால் தானே அவள் இந்த முடி­வினை எடுத்தாள்.

அவளை நானே கொன்று விட்டேன்” என்ற உறுத்­த­லி­னாலும் மனநிலை பாதிக்­கப்­பட்­ட­வரைப் போல் உளறிக்கொண்டே இருந்­தி­ருக்­கின்றார். ஏதோ தான் தனித்து விட்­டதைப் போன்ற உணர்வு, வாழ்க்கை மீதான விரக்தி போன்­றன அவர் இந்த முடி­வினை எடுக்க கார­ணங்­க­ளாக இருந்­தி­ருக்­கின்­றன.

நவ­ரத்­தி­னத்தின் தாய் அவ­ரு­டனே இருந்தபோது மனை­வியின் திடீர் மர­ணத்­தினால் இப்­படி இருக்­கின்றார். நாள­டைவில் சரி­யாகி விடுவார் என தாயும் தன் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டார்.

பொலி­ஸாரின் விசா­ர­ணையில் நவ­ரத்­தி­னத்தின் நாட்­கு­றிப்பு கிடைக்கப் பெற்­றி­ருக்­கின்­றது. இதன் மூலம் தற்­கொலை செய்து கொள்­வ­தற்­கான முடிவு நவரத்­தி­னத்­திடம் இருந்­தி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கி­யுள்­ளது. இதில் நவ­ரத்­தினம் “தனக்கு இந்த வாழ்க்­கையை வாழவே பிடிக்­க­வில்லை.

மகனை நினைத்தால் தான் கவ­லை­யாக இருக்­கின்­றது. நான் தற்­கொலை செய்­யப்­போ­கின்றேன் என்­னு­டைய தற்­கொ­லைக்கு யாரும் காரணம் இல்லை. போன்ற விட­யங்­களை குறிப்­பிட்டு வைத்­துள்­ள­துடன், தான் கடன் கொடுத்­த­வர்­களின் விப­ரங்­களும், வர வேண்­டிய கணக்கு விப­ரங்­களும் குறிப்­பிட்டு வைத்­துள்ளார்.

எனவே இந்த நாட்­கு­றிப்பும் நவ­ரத்­தி­னத்தின் ஒன்­றரை வயது குழந்தை தர்­ஷனின் மர­ணத்­திலும் அவ­ரது தற்­கொலை முயற்­சி­யிலும் முக்­கிய ஆதா­ர­மாக இருக்­கின்­றது.

அடுத்­தது, மேசையின் மேல் இருந்த முத்­தி­ரை­யி­டப்­பட்ட நஞ்சுப் போத்­தலும், அதில் அரை­வா­சிக்கு மேல் இல்­லாமல் இருந்­த­மையும் நவ­ரத்­தினம் தான் குழந்­தைக்கு உண­வுடன் நஞ்­சினை கலந்து கொடுத்து தானும் நஞ்­ச­ருந்­தி­யி­ருக்­கின்றார். என்ற முடி­வுக்குப் பொலிஸார் வந்­தனர்.

எது எவ்­வா­றா­யினும் நவ­ரத்­தினம் பலத்த பொலிஸ் காவ­லுக்கு மத்­தியில் வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கின்றார். அவர் ஆபத்­தான கட்­டத்தை கடந்­த­வு­ட­னேயே இது பற்­றிய சரி­யான தக­வல்­களை தெளி­வா­கக் கூறமுடியும் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி எந்த ஒரு மனி­தனும் தனித்து வாழ முடி­யாது. இதனால் தான் ஒவ்­வாரு மனி­தனும் குடும்பம், பந்தம், பாசம் என்ற கட்­டுக்குள் கட்­டுப்­பட்­ட­வ­னா­க­வுள்ளான்.

எனவே உற­வு­க­ளுக்கு இடையில் மனஸ்­தா­பங்கள் ஏற்­ப­டு­வதை பெரி­து­ப­டுத்­தாது எத்­த­கைய பிரச்­சினை என் றாலும் சமரசமாகப்பேசி ஒருவரின் நிலைமையை இன்னொருவர் புரிந்து கொள்வோமானால் உறவுகளில் பிரிவுகள் நிரந்தரமாக அமையாது.

அப்படி பேசித் தீர்ந்திருந்தால் இன்று நவரத்தினத்தின் அழகிய குடும்பம் சிதைந்திருக்காது. நவரத்தினத்தின் மனைவியின் இழப்பானது அவனுக்கு பெரிய இழப்பு, வேதனை தான்.

ஆனால் காலத்தால் ஆற்ற முடியாத காயங்கள் என்று ஒன்றுமில்லையல்லவா? அந்த வகையில் நவரத்தினம் தன் குழந்தைக் காகவாவது வாழ நினைத்திருக்கலாம்…

 -வசந்தா அருள்ரட்ணம்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com