ilakkiyainfo

பிணவறையாக மாறும் உலகின் மிகப்பெரிய சந்தையொன்றின் ஒருபகுதி !

பிணவறையாக மாறும் உலகின் மிகப்பெரிய சந்தையொன்றின் ஒருபகுதி !
April 04
09:32 2020

பிரான்ஸ், பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சந்தைகளிலொன்றான ருங்கிஸ் இன்டர்நேஷனல், பிணவறையா மாற்றமடையவுள்ளது.

இவ்வாறு மாற்றமடையும் போது அங்கு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் 1,000 சவப்பெட்டிகளை குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Death_franceதனது சந்தை கட்டிடத்தின் ஒரு பகுதியை பாரிஸ் பொலிஸாரின் ஒப்புதலுடன் அதற்கு பொறுப்பான நிறுவனம் வழங்கியுள்ளது.

575 ஏக்கர் நிலப் பரப்பில் 15,000 பேர் வரை பணியாற்றும் ருங்கிஸ் இன்டர்நேஷனலின் சந்தை தொகுதியின் ஒரு பகுதிய இவ்வாறு  வழங்கப்பட்ட போதிலும்  அங்கு தொடர்ந்து உணவு விற்பனை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

w1240-p16x9-marche_rungis_denavit1_ok_0பிரான்ஸில் கொவிட்19 காரணமாக இறப்பு எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவில் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அதிக இடப்பரப்பை கொண்ட பிணவறைக்கான தேவை ஏற்பட்டது.

இதனையடுத்து  குறித்த நிறுவனம் தமது கட்டிடத்தின் ஒருபகுதியை தற்காலிக பிணவறையாக வழங்கியுள்ளது.

12403441lpw-12403436-article-jpg_4842650இப்  பிணவறை பகுதி சந்தை தொகுதியில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுமெனவும், மீதமுள்ள சந்தை தொகுதி வணிகத்திற்காக திறந்திருக்கும், எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெள்ளிக்கிழமை முதல் சவப்பெட்டிகள் ருங்கிஸுக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் திங்களன்று குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மரியாதை செலுத்த கடுமையான நிபந்தனைகளின் கீழ் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் எனவும்  சவப்பெட்டிகள் இறுதியில் சந்தை மண்டபத்திலிருந்து பிரான்ஸ் அல்லது வெளிஇடங்களில் உள்ள கல்லறைகள் அல்லது தகனங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

runzhi-market

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com