ilakkiyainfo

பிரபல நடிகர் கொடூரமாக வெட்டி படு கொலை!! சினிமாவில் பரபரப்பு – காணொளி

பிரபல நடிகர் கொடூரமாக வெட்டி படு கொலை!! சினிமாவில் பரபரப்பு – காணொளி
January 04
10:53 2017

காமெடி நடிகர் வடிவேலுடன் சேர்ந்து நடித்த துணை நடிகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.

இவர் சாமி, ஐயா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக ‘கிணற்றை காணோம்’ காமெடி காட்சியில் நடிகர் வடிவேலுவுடன், வழக்கறிஞராக இவர் நடித்துள்ளார்.

இவர் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று இரவு, இவர் தன்னுடைய கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படு கொலை செய்துள்ளது.

அதில் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கொலை செய்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மோகன்ராஜும் அவரும் தம்பியும் சேர்ந்து 1991ம் ஆண்டு சிவலார்குலத்தைச் சேர்ந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இவரின் தம்பியை ஒரு மர்ம கும்பல் 1997ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தனர். தற்போது அவர்கள்தான் மோகன்ராஜையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மோகன்ராஜின் கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நடித்த காமெடி காணொளி இணைப்பு…

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com