பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு பிறந்த இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.

இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளார்.

புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் வில்லியம் – கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு “லூயிஸ் ஆர்தர் சார்லஸ்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லூயிஸ் என்பது இளவரசர் வில்லியம்சின் தந்தை வழி உறவினரான லுாயிஸ் மவுண்ட் பேட்டன் பெயரையும், சார்லஸ் என்பது வில்லியம்சின் தந்தை இளவரசர் சார்லசின் பெயரையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

ஆர்தர் என்ற பெயர் வில்லியம் – கேத் தம்பதியின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன