ilakkiyainfo

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுமா?- வி.சிவலிங்கம் (சிறப்பு கட்டுரை)

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுமா?- வி.சிவலிங்கம் (சிறப்பு கட்டுரை)
June 18
00:25 2016

• வாக்கெடுப்பு யூன் 23ம் திகதி.
நிலமை மிகவும் நெருக்கடியில்?
இலங்கை அமைச்சர்கள் பிரித்தானியாவில் ஆதரவுப் பிரச்சாரம்.
பிரித்தானிய இலங்கையர்கள் எதற்கு வாக்களிப்பது?

faaaaaaaa

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா? அல்லது இணைந்திருப்பதா? எனக் கin or outுறித்த வாக்கெடுப்பு இம் மாதம் 23ம் திகதி இடம்பெறவுள்ளது. அபிப்பிராய வாக்கெடுப்பு நிலவரங்கள் விலகுவதற்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக கூறுகிறது.

இந் நிலமை நீடிக்குமானல் பல எதிர்பாராத விளைவுகள் ஏற்படுமென பிரித்தானிய பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமருக்கு ஆதரவாக இலங்கை அமைச்சர்கள் சிலர் தற்போது பிரித்தானியாவில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியா வெளியேறுமானால் அது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பாக அமையுமென இலங்கை பிரதி வெளிநாட்டமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவிக்கிறார்.

பிரித்தானிய தற்போதைய கன்சவேட்டிவ் அரசு தனது கட்சிக்குள் காணப்பட்ட நீண்ட கால வாதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இவ் வாக்கெடுப்பை நடத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு எதிராக மிகவும் கடுமையான எதிர்ப்பு ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்குள் காணப்படுகிறது.

இதனால் அக் கட்சியின் சார்பில் பிரதமராக வருபவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட முடியாத நிலையில் உள்ளனர்.

உதாரணமாக முன்னாள் பிரதமர்கள் மாக்கரட் தச்சர், ஜோன் மேஜர் போன்றோர் கட்சிக்குள் பெரும் எதிர்ப்புகளை எதிர் நோக்கினர். தற்போதைய பிரதமர் டேவிட் கமரோன் அவர்கள் தான் அடுத்த தடவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்த பின்னர்.

இவ் வாக்கெடுப்பினை அறிவித்துள்ளார். இவ் வாக்கெடுப்பு தற்போது ஆளும் கட்சிக்குள் பெரும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்துள்ள போதும் அதன் நாணய இணைப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் 500 மில்லியன் மக்களைக்கொண்ட ஓர் பாரிய சந்தை என்பதால் அதில் இணைந்து அச் சந்தை வசதிகளை அனுபவித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்கள் எவ்வாறு தடையின்றி ஒன்றித்திற்குள் எடுத்துச் செல்லப்படுகிறதோ அவ்வாறு அதன் பிரஜைகளும் தடையின்றி எல்லைகளைக் கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் பிரஜைகள் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் பிரஜைகள் சில கட்டுப்பாடுகளுடன் உள்ளே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

Lesbos02_3433280bஇதனால் கடந்த பத்து ஆண்டுகளுள் பல லட்சம் ஐரோப்பியர்கள் பிரித்தானியாவிற்குள் வந்துள்ளனர். மிகக் குறுகிய கால எல்லைக்குள் மிகப் பெருந்தொகையானோர் வந்துள்ளதால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதராக என நடத்திய போர்கள் காரணமாக குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் போரினால் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் பெருமளவில் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வந்துள்ளனர்.

குறிப்பாக சிரியாவிலிருந்து பல அகதிகள் காற்றடைக்கப்பட்ட வள்ளங்கள் மூலம் கடல் வழியாக வருவதால் பலர் இறக்க நேர்ந்துள்ளது.

இதில் பெண்கள், சிறுவர்கள் பெருந்தொகையாகும். இதனால் மனித நேயப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ன. இவர்களில் பலர் பிரித்தானியா நோக்கி வருவதால் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், மற்றம் ஏனைய நாடுகளிலிருந்தும் மிகவும் குறுகிய காலத்தில் பெருந்தொகையான மக்கள் பிரித்தானியா வந்துள்ளதால் பிரித்தானியாவில் பல சமூக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

தொழிலுக்கான போட்டிகள் சம்பளத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பல முதலாளிகள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால்  அதிக சம்பளம் கோருவோரது விண்ணப்பங்களை நிராகரிக்க அல்லது ஏற்கெனவே அதிக சம்பளம் பெறுவோரை வேலையிலிருந்து நீக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வேலையில் சேருவதற்கான ஒப்பந்தம் எதுவும் இல்லை. வேலை தருனர் எவ்வேளையிலும் வேலையிலிருந்து நீக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

எனவே வேலை என்பது எதுவும் உத்தரவாதமுள்ளதாக இல்லை. இதனால் பிரித்தானிய பிரஜைகளின் வரமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வருமான வீழ்ச்சியுடன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் காணப்படுவதால் வாழ்க்கைத் தரம் குறைந்து மக்கள் மனதில் பெரும் விரக்தி காணப்படுகிறது.

குடும்பங்களில் பல்வேறு நெருக்கடிகள். குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் குறைந்த உற்பத்திச் செலவுடன் உற்பத்தி அதிகரிப்பு காணப்பட்ட போதும் இன்னொரு நெருக்கடி உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்தள்ளது.

அதாவது சீனா, இந்தியா, பங்களாதேஷ், பிறேசில், தென் கொரியா போன்ற நாடுகளின் உற்பத்திகள் மேற்குலக சந்தைகளை நிரப்பி உள்ளதால் சந்தை நெருக்கடிகள் உள்ளுர் உற்பத்தியைப் பாதித்துள்ளன. இதனால் உற்பத்தித் துறைகள் ஆட்குறைப்புச் செய்து, பதிலாக தன்னியக்கி யந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

இதனால் பிரித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் பெரும் வளர்ச்சி ஏற்படவில்லை. தற்போதைய பிரித்தானிய அரசு வரவு செலவில் பெரும் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதால் மேலும் மக்கள் மேல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது

• எந்தவித புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை.
• மக்களின் பொதுத் தேவைக்கான செலவினங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
• பாடசாலைகளில் இடப் பற்றாக்குறை.
• வைத்தியசாலைகளில் படுக்கை வசதிகள் இல்லை.
• சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் காத்திருப்பு.
• மக்கள் தொகை அதிகரித்து போக்குவரத்தும் அதிகரித்துள்ள அளவிற்கு வீதி அபிவிருத்தி இல்லை.
• புதிய வைத்தியசாலைகள் கட்டப்படவில்லை.
• புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படவில்லை.

britain-euஇவ் வாக்கெடுப்பில் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கான நியாயங்கள் என்ன?

ஏற்கெனவே குறிப்பிட்டது போல இவ் வாக்கெடுப்பும், அதற்காக நிகழ்ந்து வரும் பிரச்சாரங்களும் இனவாத, தீவிரவாத சக்திகளின் ஆதிக்கத்தை வளர்த்துள்ளன. பிரச்சாரங்கள் முஸ்லீம்களுக்கு எதிரானதாக, கிழக்கு ஐரோப்பியர்களுக்கு எதிரானதாக, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க பிரஜைகளுக்கு எதிரானதாக மாற்றமடைந்துள்ளன.sayno

• வெளிநாட்டவர்களின் வருகை பிரச்சனையா?

• இம் மக்கள் இங்கு பட்டினியாக வாழ வரவில்லை.
• தாமே உழைத்து வாழ்கிறார்கள்.
• அரச கொடுப்பனவுகளை நம்பி அவர்கள் வரவில்லை.
• வருமான வரியை சட்டப்படி செலுத்தியே வாழ்கிறார்கள்.
• தமது வருமானத்தில் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக இந் நாட்டில் செலவு செய்கிறார்கள்.
• தமக்கென சொந்த வீடுகள் இல்லாத போதும் வாடகை வீடுகளில் வாடகை செலுத்தியே வாழ்கிறார்கள்.
• தாம் வாழும் உள்ளுர் சபையின் வரியினையும் செலுத்துகிறார்கள்.

பிரித்தானியாவிற்கு வருகை தருபவர்களின் பிரச்சனையாக மாற்றுவதன் பின்னணி என்ன?

• அரசாங்கம் புதிய பாடசாலைகளைக் கட்டவில்லை.
• புதிய வைத்தியசாலைகளைக் கட்டவில்லை.
• ஏற்கெனவே இயங்கும் பாடசாலைகளின் இட வசதிகளைப் பெருக்கவில்லை.
• வைத்தியசாலைகளில் படுக்கைகளைக் கூட்டவில்லை.
• தாதிகள், வைத்தியர்கள் தொகையைக் கூட்டவில்லை.

gettyimages-522180230

இதன் உண்மைப் பின்னணி என்ன?

தனியார் மயமாக்குவதே.

தனியார் பாடசாலைகளை நோக்கித் தள்ளுகிறார்கள். தனியார் வைத்தியசாலைகளை நோக்கித் தள்ளுகிறார்கள். பண வசதி அற்றவர்கள் நோயைக் குணப்படுத்த வைத்தியத்திற்குப் பணமில்லாமல் அநியாயமாக குறுகிய காலத்தில் மரணிக்கிறார்கள்.

பணக்காரர்களால் இவற்றைப் பெற முடிகிறது. ஆனால் உழைப்பாளிகளால் முடியவில்லை. ஊடகங்கள், தொலைக் காட்சிகள் மற்றும் ஊடகங்கள் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து குடியேறுபவர்களே பிரச்சனைக்குரியவர்கள் என காட்ட முனைகிறது. ஊடகங்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் வலதுசாரி தீவிரவாத சக்திகளின் கரத்தைப் பலப்படுத்தி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி மிகவும் தீவிர வலதுசாரி ஒருவரை தனது வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் மெக்சிகோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்பப் போவதாக கூறி வருகிறார்.

பிரான்ஸ் நாட்டில் மேரி லி பென் என்ற வலதுசாரி தீவிரவாத கருத்துள்ள பெண்மணி தற்போது மிகவும் செல்வாக்குப் பெற்றவராக உள்ளார்.

ஜேர்மனி நாட்டில் மீண்டும் நாக்ஸிகள் பலம் உள்ளவர்களாக மாறி வருகின்றனர். அங்குள்ள துருக்கியர்கள், ஈராக்கியர்கள், சிரியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உள்ளுராட்சி தேர்தல்களில் அதிக வாக்குகளைப் பெற்று வருகின்றனர்.

ஓஸ்ரியா நாட்டின் தலைவராக தீவிர வலதுசாரி ஒருவர் அதிக ஆதரவைப் பெற்று வருகிறார். இவர் தனது நாட்டின் எல்லைகளில் சுவர் எழுப்பப் போவதாக கூறுகிறார்.

இத்தகைய பின்னணியில் பிரித்தானிய இலங்கையர்கள் என்ன முடிவை மேற்கொள்வது?

பிரித்தானியாவில் பலமடைந்து வரும் அதி தீவிரவாத சக்திகளுக்கு இந்த வாய்ப்பை அளிப்பதா? இவர்களின் கனவு நனவாகுமானால் அதன் விளைவுகள் பாரதூரமானவை.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள மனித உரிமைச் சட்ட பாதுகாப்புகள் குப்பைத் தொட்டிக்குள்.

குறைந்த பட்ச சம்பளம் என விதிக்கப்பட்டுள்ள சட்டம் கைவிடப்படும்.

பாடசாலைகளும், வைத்தியசாலைகளும் பணம் செலுத்தும் சேவை நிலையங்களாக மாற்றம் பெறும்.

அரச கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்.

வேலை வாய்ப்புகளில் இனவாதம் பெரும் இடத்தைப் பெற்றுக் கொள்ளும்.

வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு கௌரவமான உத்தியோகம் கிடைப்பது முயற்கொம்பாகிவிடும்.

பிரித்தானிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயம் எழுதப்படும் இவ் வேளையில் இலங்கையர்கள் தமது அபிப்பிராயத்தை தமது எதிர்காலச் சந்ததியைக் கவனத்தில் கொண்டு எடுக்க வேண்டும். இலங்கை ஐரோப்பிய சந்தையில் தமது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு பிரித்தானியாவின் வரலாற்றுத் தொடர்புகளும் உதவுவதாக இலங்கை அமைச்சர்கள் குறிப்பிடுகின்றனர்.

விவேகமான முடிவை யூன் 23ம் திகதி எடுக்கும்படி வினயமாக வேண்டுகிறோம்.

– வி.சிவலிங்கம்
நன்றி.தேனிஇணையதளம்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com