ilakkiyainfo

பிரேரணையை நிராகரித்து விட்டோம் இனிமேல் எதற்கும் நாம் பொறுப்பல்ல இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியமான விடயம்; அரசாங்கம் அறிவிப்பு

பிரேரணையை நிராகரித்து விட்டோம் இனிமேல் எதற்கும் நாம் பொறுப்பல்ல இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியமான விடயம்; அரசாங்கம் அறிவிப்பு
April 08
09:09 2014

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் கடந்த மாதம் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரேரணையை இலங்கை முழு­மை­யாக நிரா­க­ரித்­து­விட்­டது.

எனவே  இதற்கு அப்பால் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் ஏதா­வது நட­வடிக்­கை­களை மேற்­கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று  ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

அத்­துடன் இலங்கை குறித்த பிரே­ர­ணையை நாங்கள் ஏற்­க­மாட்டோம் என்றும் அறி­வித்­து­விட்டோம். எனவே அது தொடர்­பான அடுத்தக் கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றும் அமைச்சர் குறிப்­பி­ட்டார்.

இல­ங்கை குறித்து ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அடுத்­த­கட்­ட­மாக ஐக்­கிய நாடு­கள் ­ம­னித உரிமை

ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை விவா­ர­ணையை முன்­னெ­டுப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கன்­றமை குறித்து கருத்து வௌியி­டு­கை­யி­லேயே அவர் மேற­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

இல­ஙகை குறித்து  ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில்  நிறை­வேற்­றப்­பட்ட   பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யக நிராகரித்து­விட்­டது. அத்­துடன் அதனை ஏற­றுக்­கொள்­ள­மாட்டோம் என்றும் நாங்கள் கூறி­விட்டோம்.

பிரே­ரணை வாக்­கெ­டு­ப­புக்கு விடப்­ப­டு­வற்கு முன்­னரே அதனை ஏற்­க­மாட்டோம் என்றும் தெளி­வான முறையில் அறி­வித்­து­விட்டோம். நாடுகள் ஆத­ரித்­தன மற்றும் எதிர்த்­தன என்­ப­த­றகு அப்பால் பிரே­ர­ணையை நாங்கள் நிரா­க­ரித்­து­விட்டோம் என்­பது முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

இந்­நி­லை­யில்­  எ­மது இந்த நிலைப்­பாட்­டுக்கு அப்பால் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணையம்  ஏ­தா­வது நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்­பாக மாட்டொம். அது தொடர்­பான அடுத்தக் கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாங்கள் கடம்­பை­ட­வு­மில்லை.

இலங்கை இறை­மையை கொண்ட தேசிய ஒரு­மைப்­பாட்­டைக்­கொண்ட நாடாகும். எனவே நாட்டின் இறை­மையை மீறுகின் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் இட­ம­ளிக்க முடி­யாது.

மேலும் இந்தப் பிரே­ரணை ஐக்­கிய நாடு­களின் விதி­மு­றை­களை மீறு­வ­தாக அமைந்­துள்­ள­தாக இந்­தியா தௌிவாக குறிப்­பிட்­டுள்­ளது. இதுவும் முக்­கிய விட­ய­மாகும்.

இலங்­கையில் உள்ள எமது பிர­ஜை­க­ளுக்கு எதனை வழங்­க­வேண்டும் என்று எம்­மை­விட யாரும் திட்­ட­மிட முடி­யாது. வேறு யாரை­வி­டவும் எம­ககே அநத பொறுப்பும் அக்­க­றை­யும்­உள்­ளது.

எந்­த­வொரு தீர்­வா­னலும் அது எமது நாட்டின் இறை­மையை மீறாத வகையில் இருக்­க­வேண்டும். எமது நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பொருத்தமான­தாக இருக்­க­வெண்டும்.

மீண்­டும்  ­இந்த நாட்டில் பிரச்­சினை வராமல் இருக்­க­வேண்டும் என­பதே எமது நோக­க­மாகும். எனவே இருக்­கின்ற பிரச்­சி­னைளை தீர்த்து ஒரு இணக்கப்பாட்டை அடையவேண்டும் என்பதனை நாங்கள் உண்ந்துள்ளோம்.

ஆனால் அந்த இணக்கப்பாடுடனான தீர்வு எமது நாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். எமது மக்கள் குறித்து எம்மைவிட அக்கறைகொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com