ilakkiyainfo

பிள்ளையார் ஆலய அத்திபாரத்தை உடைத்து புத்தர் சிலை வைக்க முயற்சி

பிள்ளையார் ஆலய அத்திபாரத்தை உடைத்து புத்தர் சிலை வைக்க முயற்சி
May 23
11:19 2019

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திபாரம்  உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை புத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான சிலர் கடந்த ஒருவார காலமாக  மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் அவ்விடத்தில் எவ்வாறு புத்தர் சிலை வைக்க முடியும் எனத் தென்கயிலை ஆதின குரு முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியதனூடக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் பிள்ளையார் இருந்த இடத்தில் அத்திவாரம் உடைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கும் பணிகள் தொடர்வதாகவும் தென்கயிலை ஆதீனம் குருமார்கள் தெரிவித்தனர்.

IMG-20190523-WA0003இந்நிலையில் மீண்டும் குறித்த விடயம் தொடர்பாக இன்று திருமலை மாவட்டச் செயலருக்கும் பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளனுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெறுவது கவலையளிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com