ilakkiyainfo

பிகாரில் லாலு- நிதிஷ் மெகா கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியது

பிகாரில் லாலு- நிதிஷ் மெகா கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியது
November 08
20:29 2015
பிகார் தேர்தலில் லாலு- நிதிஷ் கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. நிதிஷ் குமார் 3வது முறையாக முதல்வராகிறார்.

பெரிய எதிர்பார்ப்புக்கிடைய பிகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. இதில்,ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து களம் இறங்கின. ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பாரதிய ஜனதா கூட்டணி சார்பில், பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் இறங்கினர்.

ஆனால் தொடர்ந்து இந்த முன்னிலை நீடிக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. பாரதிய ஜனதா கூட்டணி பின் தங்கியது.

4.30 மணி நிலவரம்

இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு 55 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நிதிஷ்குமாரின் தலைமைலான மகா கூட்டணி 44 தொகுதிகளும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

5.00 மணி நிலவரம்

மாலை 5.00 மணிக்கு 77 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நிதிஷ்குமாரின் தலைமைலான மகா கூட்டணி 59 தொகுதிகளும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களிலும், ஒரு இடத்தில் மற்ற கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7 மணி நிலவரப்படி, பிகாரில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 122 இடங்கள் போதுமானது. தற்போது மெகா கூட்டணி 179 இடங்களை பெற்றிருப்பதால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகிறார்.

பீகார் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி- மீண்டும் முதல்வராக நிதிஷ்! பா.ஜ.க. படுதோல்வி!

பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

08-1446983576-bihar-results3

இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. இதில் பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன.
08-1446958020-lalu-rahul-600
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் இறங்கினர். ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு மணிநேரம் கூட நீடிக்கவில்லை.
ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 160க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 50க்கும் மேற்பட்ட இடங்களில்தான் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தொடருகிறார்.

bihar

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com