ilakkiyainfo

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைக்க பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை – தடுக்க முன்வருமாறு அழைப்பு

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைக்க பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை – தடுக்க முன்வருமாறு அழைப்பு
December 04
12:47 2019

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

01புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.

14 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

02காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின் விபரம்:

குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்லம்மா, கந்தையா தியாகராசா, இராசையா கோணேசலிங்கம், பஞ்சாசரம் தயாபரன, செல்வராசு அம்பிகா.

04கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாகக் கடமையாற்றியவர்களும் இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

05எனினும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com