ilakkiyainfo

புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டுவன்புணர்வு, கொலை; இரு வருடங்கள் நிறைவுற்றும் தொடரும் விசாரணைகள்….

புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டுவன்புணர்வு, கொலை; இரு வருடங்கள் நிறைவுற்றும் தொடரும் விசாரணைகள்….
May 15
20:25 2017

 

13.05.2015 – காலை பாட­சா­லைக்குச் சென்ற மாணவி வித்யா மாலை வரை வீடு திரும்­ப­வில்லை. இர­வி­ர­வாக உற­வி­னர்கள் மாண­வியைத் தேடி­னார்கள்.

14.05.2015 – காலை­யிலும் வித்­தி­யாவின் சகோ­தரன், வித்யா வளர்த்த நாய் மற்றும் ஊர­வர்கள் தேடு­கின்­றார்கள். வித்யா பாட­சாலை செல்லும் பாதையில் உள்ள பாழ­டைந்த வீடொன்றின் பின்­பு­ற­மாக கைகள் கால்கள் கட்­டப்­பட்டு வாய்க்குள் துணி அடைக்­கப்­பட்ட நிலையில் வித்­யாவின் சடலம் மீட்­கப்­பட்­டது.

vidya14.05.2015 – புங்­கு­டு­தீவில் உள்ள 9 பாட­சா­லை­க­ளையும் சேர்ந்த அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள், கல்­வித்­துறை அதி­கா­ரிகள்,பிர­தேச சபை மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள், வர்த்­த­கர்கள், பொது­மக்கள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் புங்­கு­டு­தீவு மகா­வித்­தி­யா­லய மைதா­னத்தில் கூடி ஆர்ப்­பாட்டம்.

14.05.2015 – 9ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (40), பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார் (34), பூபா­ல­சிங்கம் தவக்­குமார் ( 32) ஆகியோர் சந்­தே­கத்தில் கைது.

15.05.2015 – வாய்க்குள் துணி அடைந்­த­மையால், மூச்சுத் திணறல் ஏற்­பட்டு, தலை கல்லில் அடி­பட்­டதில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்­பட்டு மாணவி வித்யா உயி­ரி­ழந்­துள்­ள­தாக பிரேத பரி­சோ­த­னை­களில் தெரி­விக்­கப்­பட்­டது.

கூட்டு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை உறுதி செய்­யப்­பட்­டது. வித்­தி­யாவின் உடற்­பாகம் பரி­சோ­த­னைக்­காக கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

15.05.2015 – வித்­யாவின் இறுதிக் கிரியை. புங்­கு­டு­தீவில் கடை­ய­டைப்பு. தீவ­கத்­துக்­கான போக்­கு­வ­ரத்தும் இடை­நி­றுத்தம்.

17.05.2015 – வித்­தியா கொலை தொடர்பில் மேலும் ஐவர் சந்­தே­கத்தில் கைது. சந்­தேக நபர்­களை தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரி குறி­கட்­டுவான் பகு­தியில் உள்ள ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் காவ­ல­ரணை முற்­று­கை­யிட்டு மக்கள் இர­வி­ர­வாகப் போராட்டம்.

சில மணி நேரத்தில் சந்­தேக நபர்­களை பொலிஸார் கடற்­ப­டையின் உத­வி­யுடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு கடல் வழி­யாக கொண்டு சென்­றனர்.

மக்கள் ஆத்­தி­ர­முற்று காவ­ல­ரணை தாக்­கி­னார்கள். கைது செய்­யப்­பட்ட 5 சந்­தேக நபர்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என சுவிஸ் குமார் என அழைக்­கப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் என்­ப­வரை பிடித்து மின் கம்­பத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்­கி­னார்கள்.

அவ்­வி­டத்­திற்கு சென்ற இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் குறித்த நபரை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு அங்­கி­ருந்­த­வர்­க­ளிடம் கூறி­ய­தை­ய­டுத்து அவர் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

18.05.2015 – கைதான 5 சந்­தேக நபர்­க­ளையும் மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற போது பொது­மக்கள் வைத்­தி­ய­சா­லையை முற்­று­கை­யிட்டு அவர்­களைத் தாக்­கி­னார்கள்.

pungudutivu-1119.05.2015 – சுவிஸ் குமார் என அழைக்­கப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் எனும் நபர் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ராக கொழும்பு வெள்­ள­வத்­தையில் வைத்து கைது.

(குறித்த நபர் பொது மக்­களால் பிடிக்­கப்­பட்டு யாழ்ப்­பாண பொலிஸில் 17 ஆம் திகதி ஒப்­ப­டைக்­கப்­பட்டு, யாழ்ப்­பாண பொலி­ஸாரால் விடு­விக்­கப்­பட்ட பின்னர் 19 ஆம் திகதி வெள்­ள­வத்­தையில் மீண்டும் கைது செய்­யப்­பட்டார்)

மாலை. புங்­கு­டு­தீ­வுக்கு சென்ற கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­டத்­துறை விரி­வு­ரை­யாளர் வி.ரி.தமிழ்­மா­றனே, சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உத­வினார் எனக் கூறி ஊர­வர்கள், அவரை சுமார் 5 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக பொலிஸ் வாக­னத்­திற்குள் முடக்­கினர். பின்னர் கடற்­ப­டையின் உத­வி­யுடன் பொலிஸார் தமிழ்­மா­றனை ஊர­வர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­பாக மீட்­டனர்.

20.05.2015 – மாண­விக்கு நீதி கோரி ஹர்த்தால். அன்­றைய தினம் சந்­தேக நபர்­களை யாழ்.நீதிவான் நீதி­மன்றில் முற்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை.நீதி­மன்ற கட்­டடத் தொகு­தியைச் சுற்றி பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் கூடி நின்­றனர்.

மதியம் 11. 30 மணி. மக்கள் திடீ­ரென வன்­மு­றையில் இறங்­கினர். நீதி­மன்றக் கட்­டடத் தொகுதி மீது கல் வீசி தாக்­குதல். சட்­டத்­த­ர­ணி­களின் வாக­னங்கள், சிறைச்­சாலை வாகனம் மற்றும் அங்­கி­ருந்த ஏனைய வாக­னங்கள் மீதும் தாக்­குதல்.

கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் குண்டு வீசி போராட்­டக்­கா­ரர்­களை கலைத்தனர். மேல­தி­க­மாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் களம் இறக்­கப்­பட்­டனர்.வன்­மு­றையில் ஈடு­பட்­டனர் எனக்­கூறி 132 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

20.05.2015 – மாண­வியின் குடும்­பத்தின் சார்பில் இல­வ­ச­மாக முன்­னிலை ஆவோம் என்றும் சந்­தேக நபர்கள் சார்பில் முன்­னி­லை­யாக மாட்டோம் எனவும் யாழ். சட்­டத்­த­ர­ணிகள் கூட்­டாக அறி­விப்பு.

26.05.2016 – வித்­யாவின் தாய்,  சகோ­த­ரனை சந்­தித்து ஜனா­தி­பதி ஆறுதல்.  “ விசேட நீதி­மன்றம் மூலம் விரை­வான விசா­ரணை, வித்யா குடும்­பத்­துக்கு வீடு ” என்னும் வாக்­கு­று­தி­களை வழங்­கினார்.

(இன்னும் விசா­ரணை முடி­ய­வில்லை. வீடும் ஒன்­றரை  வரு­டங்­களின் பின்னர் வவு­னியா இரா­ணுவக் குடி­யி­ருப்பில் வழங்­கப்­பட்­டது)

15.12.2016 – பத்­தா­வது சந்­தேக நப­ராக ஜெய­வர்­தன ராஜ்­குமார் (26) எனும் நபரை ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் முற்­ப­டுத்­தி­னார்கள். குறித்த சந்­தேக நபர்  மாணவி உயி­ரி­ழந்து 7 மாதங்­களின் பின்னர் மாண­வியின் வீட்டு சென்று அஞ்­சலி செலுத்தி விட்டுக்குச் செல்லும் போது பொலிஸார் கைது செய்­தனர்.

25.01.2016 –  மகளின் கிரி­யை­களை செய்­வ­தற்­காக வழக்­கை துரித கதியில் முன்­னெ­டுக்­கு­மாறு புங்­கு­டு­தீவு மாண­வியின் தாயார் சட்­டத்­த­ரணி ஊடாக நீதி­மன்றில் கோரிக்கை. உடல் புதைக்­கப்­பட்­ட­தனால் இந்து சமய முறைப்­ப­டி­யான கிரி­யை­களை முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை எனத் தெரி­வித்தார்.

25.01.2016 –  “விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி குற்­ற­வா­ளிகள் என இனம் கண்டால் எம்மை தூக்­கி­லி­டுங்கள்” என புங்­கு­டு­தீவு மாணவி கொலை வழக்கின் சந்­தேக நபர்கள் கூட்­டாகக் கோரிக்கை.

19.02.2016 – குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை­யி­னரால் மர­பணு சோதனை அறிக்கை உட்­பட எந்த அறிக்­கையும் மன்றில் சமர்ப்­பிக்­க­வில்லை.

அறிக்­கை­களை விரைவில்  சமர்ப்­பிக்க வேண்டும் என கடும் தொனியில் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ்  உத்­த­ரவு (வழக்கு தொடர்­பான சான்றுப் பொருட்­களின் அறிக்­கைகள் டீ.என்.ஏ பரி­சோ­தனை அறிக்­கைகள் என 12 அறிக்­கை­களில் எவையும்  எட்டு  மாதங்­களில் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை)

04.03.2016 – வித்­யாவின் கொலைக்­கான கார­ணத்தை குற்­றப்­ பு­ல­னாய்வுத் துறை­யினர்  ஊர்­கா­வற்­துறை நீதி­மன்றில் வெளி­யிட்­டனர்.

“வித்­யாவை புங்­கு­டு­தீவைச் சேர்ந்த சிவ­தேவன் துஷாந்த்  ஒரு தலை­யாகக் காத­லித்தார். ஆனால், வித்யா சம்­ம­திக்­க­வில்லை. வித்­யாவைப் பழி­வாங்க  தன்  நண்­ப­ரான தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹா­ச­னுடன் கூட்டுச் சேர்ந்து மாண­வியை கடத்த திட்­ட­மிட்டார். திட்­டத்தின் சூத்­தி­ர­தா­ரி­யாக மாறினார் சுவிஸ் குமார்.

இன்னும் இருவர் துணைக்கு சேர்க்­கப்­பட்­டனர். அப்­படிச் சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் வித்­தியா குடும்­பத்­துக்கும் முன்­பகை இருந்­தது. அவர்­க­ளுக்கு எதி­ராக திருட்டு வழக்கில் வித்­யாவின் தாயார் சாட்சி சொல்லி இருந்தார்.

திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. வித்யா கடத்­தப்­பட்டு கோர­மாக கூட்டு வன்­பு­ணர்வின் பின்னர் கொல்­லப்­பட்டார். துசாந்த், சந்­தி­ர­ஹாசன் ஆகிய இரு­வ­ருமே கொலை செய்­த­வர்கள்” -இதுவே குற்­றப்­பு­ல­னாய்­வா­ளர்­களின் அறிக்கை.மார்ச் 11ஆவது சந்­தேக நப­ரான உத­ய­சூ­ரியன் சுரேஷ் கரன் கைது.

maithree18.03.2016 – வழக்கு ஒரு சில மாதங்­களில் யாழ்.மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்றம் செய்­யப்­படும் என ஊர்­கா­வற்­துறை நீதி­மன்று அறி­விப்பு.

18.03.2016  – புங்­கு­டு­தீவு மற்றும் ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சங்­களில் காணப்­படும் பாழ­டைந்த வீடுகள் பற்­றை­களை அழிக்­கு­மாறு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்று உத்­த­ரவு.

01.04.2016 – பன்­னி­ரண்­டா­வது சந்­தேக நப­ராக தர்­ம­லிங்கம் ரவீந்­திரன் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

20.04.2016 – மர­பணு பரி­சோ­தனை அறிக்­கையை ஜின்டேக் நிறு­வனம் இது­வரை தம்­மிடம் கைய­ளிக்­க­வில்லை என பொலிஸார் மன்றில் தெரி­விப்பு.  ஜின்ரேக் நிறு­வன அதி­கா­ரியை நீதி­மன்றில் முன்­னிலை ஆகு­மாறு உத்­த­ரவு.

20.04.2016 – பொது­மக்­களால் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட சுவிஸ் குமார்  எவ்­வாறு பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து தப்பிச் சென்றார் என்­பது தொடர்­பான அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு.

04.05.2016 – வித்யா கொலை வழக்கின் மர­பணு பரி­சோ­தனை அறிக்கை தாம­த­மாக கராணம் பணம் செலுத்­தப்­ப­டா­மையே என ஜின்டேக் நிறு­வனம் நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பிப்பு.

04.05.2016 – ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றுக்கு வெளியில் வைத்து  சுவிஸ் குமாரின் தாய் மற்றும் துஷாந்­தனின் தாய் ஆகிய இரு­வரும் தன்னை மிரட்­டி­ய­தாக வித்­யாவின் தாய் ஊர்­கா­வற்­றுறை பொலிஸில் முறைப்­பாடு.

09.05.2016 – வித்­தியா  கொலை வழக்கின் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சுவிஸ் குமா­ருடன் தொடர்­பு­களை பேணி­ய­வர்கள்,  தப்பிச் செல்­வ­தற்கு உத­வி­ய­வர்கள், போன்­ற­வர்கள் தொடர்பில் விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரிவு பணிப்­பா­ள­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்­த­ரவு.

17.05.2016 – வித்­யாவின் தாயாரை மிரட்­டிய  இரு­வ­ரி­டமும் பொலிஸார் வாக்­கு­மூலம் பெற்­றனர்.

18.05.2016 – வித்யா கொலை வழக்கின் மர­பணு பரி­சோ­தனை அறிக்­கையை குற்­றத்­த­டுப்பு புல­னாய்வுப் பிரிவு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் சமர்ப்­பித்­தனர்.(சம்­பவம் நடந்து ஒரு வரு­டத்தின் பின்னர். )

18.07.2016 – வித்­யாவின் தாயை மிரட்­டிய குற்­றத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயா­ரான மகா­லிங்கம் தயா­நிதி சிறைச்­சா­லையில் சுக­வீனம் கார­ண­மாக உயி­ரி­ழப்பு.

18.07.2016 – வித்யா கொலை வழக்கில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சுவிஸ் குமாரும்  அவ­ரது தம்பி மகா­லிங்கம் சசீந்­திரன் ஆகிய இரு­வரும் தாயாரின் இறு­திக்­கி­ரி­யை­களில் கலந்து கொள்ள ஊர்­கா­வற்­துறை நீதிவான் நீதி­மன்ற பதில் நீதவான் இ.சபேசன் அனு­மதி.

13.07.2016 – வித்யா கொலை வழக்கு தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­களை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் பாரப்­ப­டுத்தி உள்­ள­தாக குற்றத் தடுப்பு புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்­கா­வற்­றுறை நீதவான் நீதி­மன்றில் தெரி­விப்பு.

10.08.2016  – வித்யா கொலை வழக்கின் குற்றத் தடுப்பு புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் அனைத்தும் முடி­வ­டைந்து விசா­ரணை அறிக்­கைகள் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்­கப்­பட்டு உள்­ள­தாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சார்பில் முன்­னி­லை­யான அரச சட்­ட­வாதி யாழ்.மேல் நீதி­மன்றில் தெரி­விப்பு.

20.09.2016. – வித்யா கொலை வழக்கின் குற்­ற­வா­ளிகள் இனம் காணப்­படக் கூடிய நிலையில் குற்றப் புல­னாய்வு பிரிவின் விசா­ரணை அறிக்கை உள்­ள­தாக ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் மன்றில் தெரி­விப்பு.

09.11.2016 – வித்யா கொலை வழக்கு தொடர்பில் மிக விரைவில்  குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்யக் கோரி யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன்   சட்­டமா அதி­ப­ருக்கு பணிப்­புரை.

02.02.2017 –  வித்யா கொலை வழக்கின் விசா­ர­ணைகள் முடி­வுறும் தறு­வாயில் உள்­ள­தா­கவும் விரைவில் நீதி­மன்றில் குற்­றப்­ப­கிர்வு பத்­திரம் தாக்கல் செய்­யப்­படும் என யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா. இளஞ்­செ­ழியன் தெரி­விப்பு.

22.02.2017 – வித்யா கொலை வழக்கின் 11 ஆவது சந்­தேக நபர் அரச தரப்பு சாட்­சி­ய­மாக மாறு­வ­தற்கு ஊர்­கா­வற்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஒப்­புதல்.

22.02.2017 – வித்­தியா கொலை வழக்கு 98 சத­வீத விசா­ர­ணைகள் முடி­வ­டைந்து விட்­ட­தாக ஊர்­கா­வற்­றுறை நீதிவான் .எம்.எம். றியாழ் தெரி­விப்பு.

28.04.2017 – வித்யா வழக்கின் 10 ஆவது சந்­தே­க­ ந­ப­ரான ஜெய­வர்­தனா ராஜ்­குமார் மற்றும் 12 ஆவது சந்­தே­க­ந­ப­ரான ரவீந்­திரன் ஆகியோர் சாட்­சி­யங்கள் இல்­லா­மையால் வழக்கிலிருந்து விடு­தலை.

vidya-protest

04.04.2017 – வித்யா கொலை வழக்கின் ஆவ­ணங்கள் அனைத்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் பரி­சீ­ல­னையில் உள்­ளது. இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிப்பு.

05.05.2017 – வித்யா கொலை வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதிமன்றில் தெரிவிப்பு.

10.05.2017 புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கை கொழும்பில்  மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

11.05.2017 – வித்யா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றிலேயே நடைபெற வேண்டும் என கோரி மாணவியின் தாய் உட்பட புங்குடுதீவு மக்கள் போராட்டம்.

12.05.2017 – வித்யா கொலை வழக்கு குற்றபகிர்வு பத்திர வழக்கு ஆவணங்கள் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது. அதனை அடுத்து குறித்த வழக்கு ஆவணங்களை  இரும்புப் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பதிவாளருக்கு பணிப்புரை.

13.05.2017 – வித்யா கொலையுண்டு இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com