ilakkiyainfo

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்! 31 அமைச்சர்களும் பதவியேற்பு!!

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்! 31 அமைச்சர்களும் பதவியேற்பு!!
December 05
21:57 2016

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக, தமிழக முதலமைச்சர்   ஜெயலலிதாவின் மறைவையொட்டி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக ஆளுநரைச் சந்தித்தனர். அதன்படி புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் உட்பட 31 அமைச்சர்கள் அப்போது பதவியேற்றனர்.

minisiw-06-1480975190

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்கள் வகித்த துறைகளே அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை ஒதுக்கீடு விவரம்:

1. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்,

2. திண்டுக்கல் சீனிவாசன் -வனத்துறை

3.எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்,

4.செல்லூர் ராஜூ- கூட்டுறவு துறை,

5. பி தங்கமணி- மின்சரத்துறை மற்றும் மதுவிலக்கு

6. எஸ்.பி வேலுமணி: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை,

7. டி. ஜெயக்குமார்- மீன் வளத்துறை அமைச்சர் 8. சிவி சண்முகம்- சட்டம் நீதி சிறைத்துறை

9. கேபி அன்பழகன்- உயர் கல்வித்துறை

10. சரோஜா- சமூக நலத்துறை, சத்துணவு திட்டடம்

11. எம்.சி சம்பத்- தொழில்துறை

12. கேசி கருப்பன் சுற்றுச்சூழல் துறை

13. பி.காமராஜ் – உணவுத்துறை, சிவில் சப்பிளைஸ்,

14. ஓ.எஸ் மணியன் -கைத்தறித்துறை,

15. உடுமைலை ராதாகிருஷ்ணன் -வீட்டு வசதி, ஊரக வளர்சித்துறை

16. வேளாண் துறை -துரைக்கண்ணன்

17. விஜய பாஸ்கர் – சுகாதாரத்துறை, குடும்ப நலம்

18. ஆர்.துரைக்கண்ணு- விவசாயம்,

19. கடம்பூர் ராஜு- தகவல் தொடர்பு துறை

20. ஆர்.பி உதயகுமார்- வருவாய்துறை அமைச்சர்

21. வெல்லமணி நடராஜன் -சுற்றுலாத்துறை

22. கேசி வீரமணி- வணிக வரித்துறை

23. கே பாண்டியராஜன் – பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன்

24. கேடி ராஜேந்திர பாலாஜி -பால் வளத்துறை

25. நிலோபர் கபில்-தொழிலாளர் நலதுறை

26. போக்குவரத்து துறை -எம்.ஆர் விஜயபாஸ்கர்

27. பாஸ்கரன் -கதர் துறை

28. எம்.மணிகண்டன் -தகவல் தொழில்நுட்ப துறை

29. ராஜலட்சுமி- ஆதிதிராவிட நலத்துறை

30. வளர்மதி -பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை

31. செவ்வூர் ராமச்சந்திரன்- இந்து சமய அற நிலையத்துறை

பதவிறே்பு நிகழ்சியை  நேரடியாக  பார்வையிட இங்கே அழுத்தவும்

நேரடி அஞ்சலி- ஒளிபரப்பு

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com