புதிய blonde ஸ்டைல் சிகையலங்காரத்துக்கு மாறிய திருமதி ஒபாமா. புதிய blonde ஸ்டைல் சிகையலங்காரத்துக்கு மாறிய திருமதி ஒபாமா.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா நேற்று முதல் புதிய honey blonde சிகையலங்காரத்திற்கு மாறியுள்ளார். இவருடைய புதிய தோற்றத்தை அமெரிக்க ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து தங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின்றன.
மிச்சேல் ஒபாமா நேற்று மியாமியில் உள்ள Jessie Trice Community Health Care Center என்ற தனியார் நிறுவன அழகு நிலையத்திற்கு சென்று தன்னுடைய முகத்தின் வடிவத்திற்கு ஏற்றப்டி எவ்வாறு சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆலோசித்து honey blonde ஸ்டைலை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை மாலையில் தனது சிகையலங்காரத்தை மாற்றிய மிச்சேல் ஒபாமா மாலையில் தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் வெளியே வந்தார். அவருடைய புதிய ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக கவனித்த ஊடகங்கள் உடனடியாக புகைப்படங்கள் எடுத்து தள்ளின.
கருப்பு மற்றும் பர்ப்பிள் நிறத்தில் முடியின் வண்ணத்தை மாற்றியுள்ள மிச்சேல், சிகையலங்காரத்திற்கு ஏற்ற உடையணிந்து வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை வாஷிங்டன் நகரில் நடந்த Yu Yung Public Charter School என்ற பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்கு இதே ஹேர்ஸ்டைலுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.