ilakkiyainfo

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது??

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு  மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது??
March 09
09:05 2016

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன

* புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு முன்னர் வாக்குறுதியளித்த வகையில் திட்டமேதும் வகுக்கப்பட்டுள்ளதா? புனர்வாழ்வு பெற்ற 35 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?

தற்போது இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சுயதொழில் திட்டமொன்று ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, யுத்தத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 35 பட்டதாரிகள் இருக்கின்றனர். இந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்பட்டதாரிகள் அரச உத்தியோகத்தர்களாக வெகுவிரைவில் உள்வாங்கப்படுவர். இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையும் அனுமதியளித்துள்ளது.

* சுயதொழில் கடன் வழங்கவும் 3000 ரூபா மாதாமாதம் வழங்கவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்கத்தினருக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

இதுவரையில் வழங்கப்படவில்லை. அவர்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்கு புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் தாங்கள் நடவடிக்கையேதும் மேற்கொள்வீர்களா?

இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று மூன்று மாதங்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தோம். எனினும் சமூக சேவை திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டோருக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னர் கொடுக்கப்பட்ட 3000 ரூபா வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யும் உலக வங்கிச் செயற்றிட்டமொன்று காணப்பட்டது.

தற்போது அந்த செயற்றிட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலாளர் மூலம் 3000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சமூக சேவை திணைக்களம் மாவட்ட செயலாளர் மூலம் மாதாந்தம் 3000 ரூபா அனுப்பி வைக்கின்றது.

* வடக்கில் காணிவிடுவிப்பு தொடர்பில் உண்மை நிலைவரம் என்ன? ஜனாதிபதி யாழ்ப்பாண அகதி முகாமிற்கு சென்றிருந்த வேளை அங்கிருந்த அகதிகளிடம் ஆறு மாதத்தில் நீங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவீர்கள் என்று வாக்குறுதியளித்திருந்தார். இந்த வாக்குறுதி குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படுமா?

உண்மையில் தற்போது 3000 ஹெக்டெயர் காணி மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. படையினர் வசமுள்ள ஏனைய காணிகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு செயலாளரிடமும் கேட்டுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பில் நாம் முழுமூச்சாக இயங்கி வருகிறோம். நான் மாத்திரமின்றி ஜனாதிபதியும் பிரதமரும் காணி விடுவிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

ஆம். அகதிகளிடம் ஆறு மாதத்தில் நீங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவீர்கள் என்று ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். உண்மை தான்.

இது தொடர்பில் கூட்டமொன்றையும் ஒழுங்கு செய்திருந்தார். ஜனாதிபதியும் அவரால் முடிந்தளவு முயற்சித்து வருகின்றார்.

இவ்விடயத்தில் பாதுகாப்பு அமைச்சும் ஒத்துழைக்க வேண்டும். காணிவிடுவிப்பு வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காணிகள் விடுவிக்கப்படுமென்று நான் உறுதியாகக் கூறுகின்றேன். அதிகளவான காணிகள் எமக்கு தேவைப்படுகின்றன. வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கூட்டமொன்றை பிரதமர் ஒழுங்கு செய்துள்ளார்.

* வடக்கில் வீடமைப்புத் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படவுள்ளது இத்திட்டம் தொடர் பில் நிதி வழங்க எந்த நாடு முன்வந்துள்ளது? இத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் எல்லாமாக எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றது?

மொத்தமாக 65,000 வீடுகள் முதல் வருடத்தில் 11,000வீடுகள், அதற்கு பிறகு வருடத்திற்கு 18,000 வீடுகள் என்ற ரீதியில் மூன்று வருடங்களில் 54,000 வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும்.

இந்த வீடமைப்பு திட்டத்திற்கு பிரான்ஸ் நிறுவனமொன்று நிதியுதவி வழங்கவுள்ளது. நாம் எமது கடமைகளை ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்து ஆறு மாத காலத்தில் விலைமனுக்களை கோரி அதை நிறைவு செய்துள்ளோம்.

இந்த வீடமைப்பு திட்டத்திற்காக பெற்றுக்கொண்ட பணத்தை பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தவுள்ளோம். அடுத்த மாதம் இரண்டு மாதிரி வீடுகள் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இதை மக்கள் சென்று பார்வையிட முடியும். இதன் மூலம் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதனை மக்கள் உணர வேண்டும்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வீடுகளுக்கு தளபாடங்கள் உட்பட சோலார் மின்விளக்குகள் மற்றும் தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்கின்றேன்.

* இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் இந்தியாவிலேயே பிறந்து அங்கேயே வளர்ந்தவர்கள் தற்போது சிறந்த கல்வித் தகைமைகளுடன் காணப்படுகின்றார்கள். அவர்கள் இலங்கைக்கு திரும்பிவரும் போது அவர்களது கல்வித் தகைமைகளுக்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படுமா?

ஆம். வேலை வெற்றிடங்களுக்கேற்ற தகைமைகள் காணப்படின் நிச்சயமாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இது தொடர்பில் பிரதமரிடமும் கல்வி அமைச்சிடமும் பேசத் தயாராகவுள்ளேன். 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து 530 பேர் மாத்திரமே இலங்கை திரும்பியுள்ளனர். மற்றைய அனைவரும் திரும்ப வேண்டும்.

* இந்தியாவிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதிலும் சிக்கல் நிலை இருக்கின்றது. இந்தியாவில் பிறந்தவர்களுக்கும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் இங்கு அடையாள அட்டை பெற கிராம சேவையாளரிடமிருந்து கடிதமொன்றை பெற ஒரு வருடம் இலங்கையில் தங்கியிருக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுமா?

இதற்கு ஒரு தற்காலிக நடவடிக்கையொன்று எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இலங்கையில் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள ஒரு வருடம் கிராம சேவகர் பிரிவில் வசித்திருக்க வேண்டும். குறித்த விடயம் தொடர்பாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com