ilakkiyainfo

புர்கினி அணிந்திருந்த முஸ்லீம் பெண்ணை கட்டாயப்படுத்தி கழட்டவைத்த ஆயுதம் தாங்கிய பொலிசார்!! (படங்கள், வீடியோ)

புர்கினி  அணிந்திருந்த  முஸ்லீம் பெண்ணை   கட்டாயப்படுத்தி  கழட்டவைத்த ஆயுதம் தாங்கிய பொலிசார்!! (படங்கள், வீடியோ)
August 24
17:22 2016

பிரான்ஸ் நாட்டில் உள்ள கடற்கரை ஒன்றில் பெண் அணிந்திருந்த புர்கினி ஆடையை கட்டாயப்படுத்தி நீக்கியதுடன் அவருக்கு பொலிசார் அபராதமும் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள சில நகரங்களில் இஸ்லாமியர்கள் அணியும் புர்கினி ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு முதல் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்து வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயான சியாம் என்பவர் நேற்று நைஸ் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது, இஸ்லாமிய பெண்கள் அணியும் புரிகினி ஆடையை அவர் உடுத்திக்கொண்டு கடற்கரையில் படுத்திருந்துள்ளார்.

378A3FAF00000578-3754395-image-a-22_1472053368854சில நிமிடங்களில் அங்கு வந்த 4 பொலிசார் சியாமை எழுப்ப வைத்து அவர் அணிந்திருந்த புர்கினி ஆடையை நீக்க வலியுறுத்தியுள்ளனர்.

சியாம் சில காரணங்களை கூறியபோது பொலிசார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழி இல்லாத காரணத்தினால் அதே இடத்தில் சியாம் தனது புர்கினி ஆடையை நீக்கியுள்ளார்.

இது மட்டுமில்லாமல், புர்கினி ஆடையை அணிந்த குற்றத்திற்காக அவருக்கு 32 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.

பொது இடத்தில் தாயார் ஒருவரிடம் பொலிசார் இவ்வாறு நடந்துக்கொண்டது மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

3785A72A00000578-3754395-image-a-35_1471979224583policee3785A7CA00000578-3754395-image-a-39_1471979587008378582D900000578-3754395-image-a-24_14719751685953782488700000578-3754395-image-m-2_14719732024513782480800000578-3754395-image-m-4_1471973221813

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. Arya
    Arya August 25, 02:02

    Nice striping , better than Night Clubs and free , Keep it up.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com