ilakkiyainfo

புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் நற்செய்தி!! : நாட்டில் உள்ள உங்கள் சொத்துக்கள் உங்களுக்கே!

புலம்பெயர்  தமிழர்களுக்கு  ஓர் நற்செய்தி!! : நாட்டில் உள்ள  உங்கள்  சொத்துக்கள் உங்களுக்கே!
April 06
16:04 2016

வன்முறைகளால் தமது அசையா சொத்துக்களின் உரிமைகள் தொடர்பில் அநீதிக்கு உள்ளானவர்களுக்கு மீண்டும் அவர்களின் சொத்துக்களை பெற்று கொள்வதற்கான சட்டமூலம் காரணமாக பலர் நன்மை பெறுவர் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியுரிமை விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,

1983 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் 2009 மே 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் அசையா சொத்துக்களின்  உரிமையாளர்கள்  நாட்டில்   நிலவிய போர் சூழ்நிலைக்காரணமாக  தமது சொத்துக்களை பலாத்காரமாக பறிகொடுத்திருந்தால்   அவற்றை மீண்டும் உண்மையான உரிமையாளர்கள் பெற்று கொள்ளும் வகையில் இந்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நடைமுறை சட்டத்தின்படி, காணி உட்பட்ட அசையா சொத்துக்களின் உரிமையாளர்கள் இருக்கின்ற போது போர் சூழ்நிலை காரணமாக  வேறு தரப்பினர் அந்த அசையா சொத்துக்களின் உரிமையை கொண்டிருந்தால் அவற்றை உண்மையான உரிமையாளர்கள் பெற்று கொள்ள முடியாதுள்ளது.

ஒரு அசையா சொத்தின் உரிமையை ஒருவர் பலாத்காரமாக 10 வருடங்கள் கொண்டிருந்தால், அந்த சொத்தின் உரிமை அவருக்கே செல்லும் என்பது நடைமுறையில் உள்ள சட்டமாகும்.

இதன்கீழ் பரம்பரை பரம்பரையாக காணிகளை கொண்டிருந்தவர்கள் போர் காரணமாக அவற்றை மாற்று தரப்பினரிடம் பறிகொடுத்திருந்தால் நீதிமன்றம் சென்று நியாயத்தை தேட முடியாது.

இதனை நிவர்தித்து முக்கியமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கடந்த 30 வருட காலமாக அசையா சொத்துக்களின் உரிமைகளை பறிகொடுத்தவர்கள் மீண்டும் அவற்றை பெற்று கொள்ளும் வகையிலே இந்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்துரைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இந்த சட்டமூலத்தில் சில இடங்களை சுட்டிக்காட்டி சரியான வரைவிலக்கணங்கள் இல்லை என குறிப்பிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறித்த விடயங்களை குழு விவாதத்தின் போது தீர்த்து கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய, ஜே.வீ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நீதியமைச்சரால் கொண்டு வரப்பட்ட இந்த யோசனை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.

எனினும், இந்த யோசனையில் அசையா சொத்துக்களின் உரிமையை உண்மையான உரிமையாளர்கள் ஒரு வருடத்திற்குள் நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பது பெரும்பாலானோருக்கு சாத்தியமற்றதாக இருக்கும்.

எனவே அந்த கால நிர்ணயத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜித்த ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்ற அனுமதியுடன் குறித்த கால நிர்ணயத்தை நீடித்து கொள்ள முடியும் என பதிலளித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா, யோசனையில் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விவாதத்தில் பங்கேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் எந்த அரசாங்கமும் நட்ட ஈட்டை வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்களால் நடுவீதிக்கு தள்ளப்படுவர் வடக்கு வாழ் தமிழ் மக்கள்!! : நாமல் எச்சரிக்கை

Namal_Rajapaksa-720x480-720x480வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து  வாழும்  தமிழர்களால் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் ஆதிக்கத்தை அரசின் ஆட்சியுரிமைச் சட்டமூலம் ஏற்படுத்தும் என இன்று சபையில் எச்சரிக்கை விடுத்த ஐ.ம.சு. முன்னணி எம்.பி. நாமல் ராஜபக் ஷ. வடக்கில் 65,000 வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக எப்போதோ இந்தியா உறுதியளித்தது.

அதனை இன்றாவது நிறைவேற்ற முயற்சிப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகளை) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முப்பது வருட பயங்கரவாத யுத்தத்தால் இடம்பெயர்ந்து நெருக்கடிகளை சந்தித்த தமிழ் மக்கள் இன்று வடக்கில் கைவிடப்பட்ட வீடுகள் காணிகளில் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீதியமைச்சர் கொண்டுவந்துள்ள ஆட்சியுரிமை சட்ட மூலத்தினால் யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்களான தமிழர்கள் மீண்டும் இங்கு வந்து இம் மக்கள் வாழும் வீடுகளின் ஆரம்பகால உரிமையாளர்கள் தாம் என்பதை வெளிப்படுத்தி நீதிமன்றம் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பல வருட காலம் வாழும் குடும்பங்களை வெளியேற்றும் நிலை உருவாகும்.

அம் மக்கள் மீண்டும்  நடுவீதிக்கு தள்ளப்படுவார்கள் இடம்பெயர்ந்தவர்களாவார்கள் இது அநீதியாகும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com