ilakkiyainfo

புலிகளின் வெடிபொருட்களை கண்டுபிடிக்கவே சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி

புலிகளின் வெடிபொருட்களை கண்டுபிடிக்கவே சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி
April 16
21:32 2016

விடுதலைப் புலிகளால் குளங்களிலும், கடலேரிகளிலும், விட்டுச் செல்லப்பட்டுள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கே, அமெரிக்காவிடம் சி்றிலங்கா கடற்படையினர் பசுபிக் தீவில் பயிற்சி பெற்று வருவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் சுழியோடிகள் 20 பேருக்கு பசுபிக் தீவான குவாமில், அமெரிக்க கடற்படை பயிற்சிகளை அளித்து வருகிறது. கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்த இந்தப் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

இரண்டு நாட்டுப் படைகளுக்கும் இடையிலான நிபுணத்துவப் பரிமாற்றப் பயிற்சியாகவே, இந்தப் பயிற்சிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

sln-usn-guam-2

சுழியோடும் நடவடிக்கைகள் தொடர்பான இந்தப் பத்து நாள் பயிற்சியின் போது, குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படை, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள குளங்கள் மற்றும் கடலேரிகளில் விடுதலைப் புலிகளால் விட்டுச் செல்லப்பட்ட வெடிபொருட்கள் இருப்பதாகவும் அவற்றை அகற்றுவதற்கான நிபுணத்துவப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படையினரிடம் இருந்து பெறுவதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கம் என்றும் கூறியுள்ளது.

திருமலையில் கடற்புலிகளின் போர்த்தளபாடங்களையும் பார்வையிட்டார் இந்தியத் தளபதி

indian-navy-trinco-1

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா, நேற்றுமதியம் திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் டொக்யார்ட் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

indian-navy-trinco-2உலங்குவானூர்தி மூலம், திருகோணமலைக் கடற்படைத் தளத்தைச் சென்றடைந்த வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ராவுக்கு கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதையடுத்து சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதியும், கடற்படையின் பிரதி தலைமை அதிகாரியுமான ரியர் அட்மிரல் நீல் ரொசாரியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

indian-navy-trinco-3

இதையடுத்து, சிறிலங்கா கடற்படையின் பயிற்சி வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

குறிப்பாக நீருக்கடியிலான தாக்குதல்களை முறியடிக்கும் பயிற்சிகள் குறித்து அவர் ஆராய்ந்ததுடன், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், படகுகள் மற்றும் தளபாடங்களையும் பார்வையிட்டார்.

அதையடுத்து சிறிலங்கா கடற்படையின் நான்காவது அதிவேகத் தாக்குதல் அணியின் பீரங்கிப் படகின் மூலம், திருகோணமலைத் துறைமுகப் பகுதியையும் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com