ilakkiyainfo

பெரியபாண்டி கொலையில் திடீர் திருப்பம் தமிழக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு: ராஜஸ்தான் போலீசார் நடவடிக்கை

பெரியபாண்டி கொலையில் திடீர் திருப்பம் தமிழக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு: ராஜஸ்தான் போலீசார் நடவடிக்கை
December 18
04:58 2017

சென்னை: இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பமாக கொள்ளையனை துப்பாக்கியால் சுடும் போது, குறி தவறி பெரியபாண்டியை நான்தான் சுட்டேன் என்று இன்ஸ்பெக்டர் முனிசேகர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லரி கடையின் மேல் தளத்தில் ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணம் கொள்ளைபோனது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த நாதுராம் (28) மற்றும் ஜோத்பூர் மாவட்டம் பிலாரா கிராமத்தை சேர்ந்த தினேஷ் சவுத்ரி (20) ஆகியோரை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

அப்போது பாலி மாவட்டம் ஜெய்தரன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்புரா கலான் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, கடந்த 12ம் தேதி நள்ளிரவு நாதுராமை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் ஏற்பட்ட மோதலில் நாதுராம் மற்றும் அவரது உறவினர்கள் தனிப்படையினரை தாக்கினர்.

இந்த சம்பவத்தில் கீழே விழுந்த இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து நாதுராம், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்று விட்டாதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பாலி மாவட்ட ஜெய்தரன் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல்சூளை உரிமையாளர் தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுணா, ராஜல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், நகைக்கடை கொள்ளையில் இரண்டாவது முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரியையும் ஜோத்பூர் போலீசார் கடந்த 13ம் தேதி இரவு கைது செய்தனர்.

இந்த வழக்கு இரண்டு மாநிலம் தொடர்புடையதாக இருந்ததால் பாலி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கோவ் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு அன்று அதிகாலையே தனிப்படை இன்ஸ்பெக்டர் முனிசேகர், தலைமை காவலர்கள் குருமூர்த்தி, எம்புரோஸ், காவலர் சுதர்சன் ஆகியோரை அழைத்து சென்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கோவ் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி பிரேத பரிசோதனை அறிக்கையை ஜோத்பூர் அரசு மருத்துவமனை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பெரியபாண்டி உடலில் பாய்ந்த குண்டு 10 முதல் 15 அடி தூரத்தில் இருந்து தான் பாய்ந்திருக்க வேண்டும்.

அருகில் இருந்து யாரும் சுட்டு இருக்க வாய்ப்பில்லை. அருகில் இருந்து சுட்டிருந்தால், பெரியபாண்டி உடலில் அதிக சேதம் ஏற்பட்டிருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கீழே விழுந்த துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை நாதுராம் அருகில் இருந்து சுட்டதாக தமிழக தனிப்படையினர் கூறியதால், ராஜஸ்தான் போலீசாருக்கு பல சந்தேகங்களை எழுப்பியது.

இதனால், 4 பேரிடம் தனித்தனியாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தையும் பதிவு செய்தார்.

இதுகுறித்து  ராஜஸ்தான் மாநில போலீசார் கூறியதாவது: துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கி கீழே விழுந்ததை எடுத்து கொள்ளையன் நாதுராம், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டதாக தனிப்படையினர் எங்களிடம் கூறினர்.

ஆனால் பெரியபாண்டி பிரேத பரிசோதனையில் துப்பாக்கி குண்டு தொலைவில் இருந்து பாய்ந்ததாகவும், தனிப்படையினரின் துப்பாக்கி குண்டு என்றும் அறிக்கை வந்துள்ளது.

இதனால் தனிப்படையினர் கூறியதும், பிரேத பரிசோதனை அறிக்கையும் முரண்பாடாக இருந்தது. எனவே, துப்பாக்கி சூட்டின் போது வேறு ஏதோ சம்பவம் நடந்துள்ளது.

இதை தமிழக தனிப்படையினர் மூடி மறைப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சம்பவத்தின் போது உடன் இருந்த முனிசேகர் உட்பட 4 பேரிடம் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி விசாரணை நடத்தினோம்.

அப்போது முனிசேகர் மட்டும் ஒரு வித பதற்றத்துடன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் எங்களுக்கு முனிசேகர் மீது சந்தேகம் வலுத்தது.

உடனே அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினோம். அப்போது பெரியபாண்டியை சுட்டு கொன்ற கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

கடந்த 12ம் தேதி நள்ளிரவு செங்கல் சூளையை சுற்றி வளைத்து நாதுராமை பிடித்துள்ளனர். அப்போது நாதுராம் உறவினர்கள் அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்து பெரியபாண்டியை தவிர மற்ற அனைவரும் பின் வாங்கி காரின் அருகே சென்றுள்ளனர். ஆனால் பெரியபாண்டி மட்டும் நாதுராமை விடாமல் இழுந்து கொண்டு செங்கல் சூளைகேட்டின் அருகே வந்துள்ளார்.

அப்போது பெரியபாண்டியை அனைவரும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் வேறு வழியின்றி முனிசேகர் தனது துப்பாக்கியை எடுத்து பெரியபாண்டியை மீட்கும் நோக்கில் நாதுராமை நோக்கி சுட்டார்.

அப்போது குறி தவறி அந்த குண்டு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மீது பாய்ந்தது என்றார். உடனே சம்பவ இடத்தில் இருந்த நாதுராம் மற்றும் அவனின் உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத  அனைவரும் செய்வது அறியாமல் தவித்ததாகவும், உடனே இதில் இருந்து தப்பிக்க தனிப்படையினர் 4 பேரும் கூட்டாக சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர்.

அதன்படி கொள்ளையர்களை பிடிக்கும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக முனிசேகர் துப்பாக்கி கீழே விழுந்தது. அந்த துப்பாக்கியை எடுத்து நாதுராம் சுட்டுவிட்டு தப்பி சென்றதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.

அதை உறுதி செய்யும் வகையில் முனிசேகர் தலைமையிலான தனிப்படையினர் தமிழக உயர் போலீசாரிடம் தவறாக தகவல் தெரிவித்துள்ளனர்.

முனிசேகர் காவல் துறையில் பணியில் சேரும் போது தான் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றதாவும், பல ஆண்டுகள் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யாததால் என்னால் குற்றவாளியை குறிவைத்து சுட முடியவில்லை.

இதனாலேயே குறி தவறி பெரியபாண்டி மீது குண்டு பாய்ந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து முனிசேகர் மீது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது ஜெய்தரன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கொலையை மறைத்ததால் 3 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தற்போது தலைமறைவாக இருக்கும் நாதுராமை பிடித்து விசாரணை நடத்தினால் இந்த வழக்கில் முழு விபரமும் தெரியவரும். இதனால் நாதுராமை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவனை பிடித்து விடுவோம்.

இவ்வாறு ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

நாதுராம் மனைவி கைது

ராஜஸ்தானில் பதுங்கி இருந்த நகை கொள்ளையன் நாதுராமை பிடிக்க தமிழகத்தில் இருந்து தனிப் படையினர் சென்றனர். அப்போது நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந் நிலையில் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுைவ ராஜஸ்தான் மாநில போலீசார் கைது ெசய்துள்ளதாக அறிவித்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com