பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய் கைது !

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த 19 வயதான ஜென்னா போல்வெல் என்ற யுவதி புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி தாய் கொன்றுள்ளார்.
இதனையடுத்து ஜென்னா போல்வெல் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வீட்டில் உறங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்துள்ளார்.
அதை உண்மை என நம்பிய பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய உறையில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஜென்னாவை பொலிஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment