ilakkiyainfo

பெற்ற குழந்தையை மரக்கறி தோட்டத்தில் தூக்கி வீசிய தாய்!

பெற்ற குழந்தையை மரக்கறி தோட்டத்தில் தூக்கி வீசிய தாய்!
December 09
13:03 2014

 

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 4ம் பிரிவு தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மரக்கறி தோட்டமொன்றிலிருந்து சிசு ஒன்றை டயகம பொலிஸாரும் பொது மக்களும் நேற்று மீட்டுள்ளனர்.

குறித்த சிசு நேற்று மாலை 6 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சிசு டயகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட போதும், சிசுவின் நிலைமையும் தாயின் நிலைமையும் மிக கவலைக்கிடமாக இருந்ததால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் சிசுவின் தாய் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட தாயை பொலிஸார் பாதுகாப்புடன் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

இதன் போது தாயாரை விசாரித்த போது இன்னும் திருமணம் முடிக்காதவர் எனவும் 19 வயது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் சிசுக்களை கழுத்தை முறித்து கொன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிக்கின்றனர்.

அத்தோடு பொது மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்ககூடாது என்பதற்காக டயகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக டயகம பொலிஸ் அதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com