பெற்ற தாயை வல்லுறவுக்குட்படுத்தியவனுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனை விதித்தது

தனது தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத்தண்டனை விதித்துத்துள்ளது.
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தைச் சேர்ந்த இந்நபர், தனது தாயை மூன்று தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என குற்றம்சுமத்தப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம்., மெத் எனும் மெதிலம்பெத்தமைன் (methylamphetamine எனும் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு, 56 வயதான தனது தாயின் இடுப்பில் பிவிசி குழாயினால் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலினால் கீழே வீழ்ந்த தாயை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று 3 தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இடுப்பில் முறிவு ஏற்பட்ட அப்பெண், வலியால் துடித்த நிலையில் மறுநாள் காலை தொலைபேசி இரக்கும் இடத்துக்கு தவந்து சென்று தொலைபேசி மூலம் தனது மகளுக்கு விடயத்தைக் கூறினார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் மாவட்ட நீதிமன்றமொன்றில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
தனது கட்சிக்காரர் போதையில் செய்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு நினைவில்லை என குற்றம்சுமத்தப்பட்ட நபரின் சட்டத்தரணி கூறினார்.
ஆனால், அந்நபருக்கு 17 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் இந்நபரின் தாய் என்ற விடயமானது, தனது தொழிற்சார் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட வேறு எதையும் விட இவ்வழக்கை வேறுபடுத்தியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
மெத் போதைப்பொருளை பயன்படுத்தி, அதனால் பாரதூரமான குற்றங்களை மேற்கொள்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்ற செய்தியை வழங்க வேண்டியுள்ளது என நீதிபதி கூறினார்.
‘உமது தாயை மெதிலம்பெத்தமைன் போதைப்பொருள் வல்லுறவுக்குபடுத்தவில்லை. நீயே அதைச் செய்தீர்’ என நீதிபதி கூறியமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment