ilakkiyainfo

பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை: நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு

March 17
15:57 2016

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும்  பொட்டு அம்மான் உள்­ளிட்ட  சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது  நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச் சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார்.

அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த ­தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.   பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்று நான் நினைக்­கின்றேன் என்று  முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா  தெரிவித்தார்.

 பிர­பா­க­ரனை கொழும்­புக்கு அழைத்து வந்­தி­ருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்­ம­னையில் வைத்­தி­ருந்­ததைப் போன்று அவ­ரையும் பாது­காப்­பாக வைத்­தி­ருந்­தி­ருப்­பார்கள்.

அத்­துடன் அவ­ருக்கு வட­கி­ழக்கு முத­ல­மைச்சர் பதவியும் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதில் எனக்கு எந்த சந்­தே­க­மு­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை மன்றக் கல்­லூ­ரியல் இன்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் பொன்­சேகா கலந்து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

 யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்­தவின் பிள்­ளைகள் சுக­போ­க­மாக காலத்தை கழித்­தார்கள். காலை­முதல் மாலை­வரை ரகர் விளை­யா­டினர்.

போட்­டியில் தோல்­வி­ய­டை­யும்­போது நடு­வர்­களை தாக்­கினர். ரசி­கர்­களை தாக்­கினர்.  இது­தானா அபி­வி­ருத்­தியின் பிரதிப­பலன்?

கடந்த அர­சாங்­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. வெ ளிப்­ப­டுத்­தினால் தொழில் அற்­றுப்­போகும். அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களை பலாத்­கா­ர­மாக தங்கள் பக்கம் இழுத்­துக்­கொண்­டார்கள்.

ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்கம் தொடர்பில் உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்­தினால் அவர்­களின் அனுமதிப்பத்திரத்தை செய­லி­ழக்­கச்­செய்­வ­தாக பகி­ரங்­க­மாக தெரி­வித்­தனர்.

நாட்டின் சட்­டத்தை கையி­லெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தனர். நாட்டில் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தார்கள்  விரும்­பி­ய­வர்­களை விடு­வித்­தார்கள்.

அதே­போன்று நீதி­மன்­றங்­க­ளுக்கு தனக்கு தேவை­யா­ன­வர்­களை நிய­மித்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக செற்­பட்­ட­வர்­களை பதவி நீக்­கி­னார்கள்.  முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு   என்ன நடந்­தது என்ற முழு­நாட்­டுக்கும் தெரியும் .

இவ்­வாறு தான் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார். மக்கள் பீதியில்  வாழ்ந்­தனர். அன்­றி­ருந்த பயம் இன்று இருக்கின்­றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்­தி­யா­சத்தை நாட்­டுக்கு கொண்­டு­வந்தோம்.  நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்­தி­ரத்தை மீண்டும் இழக்க ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com