ilakkiyainfo

பொது உடன்பாட்டில் 5 தமிழ்த் கட்சிகள் ஒப்பம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியது

பொது உடன்பாட்டில் 5 தமிழ்த் கட்சிகள் ஒப்பம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியது
October 15
07:05 2019

மாணவர்கள் முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 16ஆம் திகதி நடக்கவுள்ளது. தமிழ்க் கட்சிகளில் அதிபர் வேட்பாளரில் யாரை ஆதரிப்பது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும், கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து, ஒருமித்த குரலாகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அதிபர் வேட்பாளர்களிடம் முன்வைக்கும் முயற்சியை ஆரம்பித்திருந்தன.

கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பொது அறையில் தமிழ்க் கட்சிகளுடனான முதலாவது சந்திப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன.

TNA-1024x639கட்சிகள் சம்மதம்

தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ்க் கட்சிகளிடையிலேயே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறியது.

இந்தச் சந்திப்பின் பின்னர் தொடர்ச்சியாக கடந்த 7ஆம் திகதியும், 10 ஆம் திகதியும், 13ஆம் திகதியும் சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.

இந்தச் சந்திப்புக்களின் வழியாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் 5 தமிழ்க் கட்சிகள் ஒப்பமிட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி,ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒப்பமிடவில்லை.

 

5 தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டுள்ள இந்த ஆவணத்தை சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கையளிப்பது என்றும், அதற்கு இணக்கம் தெரிவிக்கும் வேட்பாளருக்கு தமிழ் மக்களின் ஆதரவை வழங்கக் கோருவது என்றும் சந்திப்பில் கலந்துகொண்ட தரப்புக்கள் தீர்மானித்துள்ளன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com