தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின இளைஞர்கள் நால்வரை மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று  திங்கட்கிழமை மதியம் மடுவில் இடம்பெற்றுள்ளது.

IMG-20190107-WA0007

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டியும் குறித்த நபர்கள் நிதி வசூலித்துள்ளனர்.

IMG-20190107-WA0009

தாங்கள்  அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நால்வர் மீதும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை துரத்தி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம அலுவலர்  நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.