ilakkiyainfo

பொய் கூறினாரா இலங்கை பெண்? வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்!

பொய் கூறினாரா இலங்கை பெண்? வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்!
January 08
01:52 2019

இலங்கையைச் சேர்ந்த 46 வயதான சசிகலா தன் கணவருடன் சென்று நேற்று இரவு 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார்.

ஆனால் தன்னை தரிசனம் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் சாமியை தரிசனம் செய்ததற்கான ஆதார வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலாக பல நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி தன் கணவருடன் நேற்று பம்பா வந்துள்ளார்.

சபரிமலையில் பெரும் பிரச்னைகள் இருப்பதால் கேரள போலீஸாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்போடு சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ஐயப்பன் கோவிலின் நடை இரவு 11 மணிக்கு சாத்தப்படும், சசிகலாவும் அவரது கணவரும் நேற்று இரவு 10.45 மணிக்கு இருமுடியுடன் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனை கேரள போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

1972 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி சசிகலா பிறந்ததாக பாஸ்போர்ட் விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஐயப்ப பக்தர்கள் அவரின் கணவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு வந்து சென்றுள்ளார்.

இதனால் சசிகலா தனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரம் சபரிமலை சென்று வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு தரிசனத்துக்காக ஏற்கெனவே ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து.

தன்னுடைய வயது மற்றும் மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்தாக தேவஸம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

085439_sasikala (2)

ஆனால், சபரிமலையில் தான் சாமி தரிசனம் செய்யவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

கேரள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலா “நான் ஒரு ஐயப்ப பக்தை முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன்.

நான் என்னுடைய கர்ப்ப பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன், அதற்கான மருத்துவச் சான்றும் என்னிடம் இருக்கிறது.

ஆனாலும் போலீஸாரால் நான் திருப்பி அனுப்பப்பட்டேன். 18 படிகள் மட்டுமே ஏறினேன் சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால் குற்றச்சாட்டை மறுத்த போலீஸார் சசிகலா நிச்சயமாக சாமி தரிசனம் செய்திருப்பார் என தெரிவித்தனர்.

082040_sab1

இந்நிலையில் சசிகலா சாமி தரிசனம் செய்ததற்கான ஆதாரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் சசிகலாவும், அவரது கணவரும் சாமி தரிசனம் செய்து திரும்புவது பதிவாகியுள்ளது.

தான் சாமி தரிசனம் செய்தபிறகும் ஏன் சசிகலா பொர் கூறினார் என்பது காவல்துறைக்கு தெரியவில்லை.

ஏற்கெனவே 50 வயதிற்குட்பட்ட கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள போலீசார் உதவியுடன் சபரிமலையில் இரு தரிசனம் செய்த நிலையில் தற்போது சசிகலாவும் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

வீடியோ:

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com