ilakkiyainfo

பொலிஸாருக்கு பொய் தகவல்களை வழங்கி வரவழைத்து தாக்குதல்; சம்பவத்துக்கு திட்டமிட்டவர் பிரபல போதைப் பொருள் வர்த்தகர்: பொலிஸ் கான்ஸ்டபிள் பலி; இரு பொலிஸார் உட்பட ஐவர் காயம்

பொலிஸாருக்கு பொய் தகவல்களை வழங்கி வரவழைத்து தாக்குதல்; சம்பவத்துக்கு திட்டமிட்டவர் பிரபல போதைப் பொருள் வர்த்தகர்: பொலிஸ் கான்ஸ்டபிள் பலி; இரு பொலிஸார் உட்பட ஐவர் காயம்
May 11
11:38 2017

பிலி­யந்­தலை பகு­தியில் போதைப் பொருள் சுற்றி வளைப்­புக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் மிகத் திட்ட­மிட்டு போலி­யாக தகவல் வழங்கி நடத்­தப்­பட்ட தாக்­குதல் என ஆரம்பக் கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் ஆலோ­ச­னை­க­ளுடன் நான்கு சிறப்பு குழுக்கள் முன்­னெ­டு­கத்து வரும் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ளது.

மோட்டார் சைக்கிள் சிக்­கி­யது

அத்­துடன் தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றுக் காலை தெஹி­வளை – மஹ­ர­கம பிர­தான வீதியில் வர்த்­தக நிலையம் ஒன்றின் அருகே கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்ப்ட்­டுள்­ளது.

இந் நிலையில் இந்த தாக்­கு­த­லா­னது பிர­பல போதைப் பொருள் வர்த்­தகர் ஒரு­வ­ரினால் மிகத் திட்­ட­மிட்ட சம்­பவம் என பொலிஸ் உள­வுத்­து­றைக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

அத்­துடன் இந்த தாக்­கு­தலின் பின்னால் தெற்கின் பிர­பல பாதாள உலகத் தலை­வனும் களுத்­துறை சிறைச்­சாலை பஸ் வண்டி மீது நடத்தப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கிக்­கப்­படும் பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரு­மான மதூஷ் என்­ப­வரின் குழு­வி­ன­ருக்கு தொடர்­புள்­ள­தா­கவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பிலி­யந்­தலை மொறட்­டுவ பிர­தான வீதியின் மக்கள் வங்­கிக்கு அருகில் மேற்­கொள்­ளப்­பட்ட. துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான (4946) அபே­விக்­ரம உயி­ரி­ழந்தார் எனவும் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ, பொலிஸ் கான்ஸ்­டபிள் (67055) சமிந்த ஆகியோர் காய­ம­டைந்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

சிறுமி, சிறுவன், சிவி­லியன் காயம்

இந்தச் சம்­ப­வத்தில் 8 வய­தான சிறுமி, 15 வய­தான சிறுவன், ஒரு சிவி­லியன் ஆகியோர் காய­ம­டைந்து களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் 8 வயது சிறு­மியின் நிலைமை கவலைக் கிட­மா­க­வுள்­ள­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்ட தகவல்

சுமார் 10 கிலோ வரை­யி­லான போதைப் பொருள் வர்த்­தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இந்­நி­லையில் அது தொடர்பில் உடன் செயற்­பட்­டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிர­தா­னி­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் ஆலோ­ச­னையைப் பெற்று செயற்­பட்­டுள்­ளது.

அதன்­படி அது தொடர்­பி­லான சுற்­றி­வ­ளைப்­புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மையில் குழு பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டுள்­ளது.

மோட்டார் சைக்­கிள்­களில் வந்த பாதாள உலகக் குழு­வினர்

இந்­நி­லையில் இக்­கு­ழு­வினர் சுற்­றி­வ­ளைப்­புக்­காக பிலி­யந்­த­லையை அடைந்­த­போது இவர்கள் மீது பிலி­யந்­தலை மக்கள் வங்­கியை அண்­மித்து நடு வீதியில் வைத்து துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் அதி­கா­ரிகள் பய­ணித்த வாக­னத்தை முந்திச் செல்­வது போன்று வந்­துள்ள மோட்டார் சைக்­கிள்­களில் வந்­துள்ள பாதாள உலகக் குழு­வினர் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் பொலி­ஸாரின் வாகனம் மீது சர­மா­ரி­யாக வேட்­டு­களைத் தீர்­த­துள்­ளனர்.

இதன் போது பொலிஸ் ஜீப் வண்­டியை செலுத்திச் சென்­ற­தாக நம்­பப்­படும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே உயி­ரி­ழந்­துள்ளார். ஜீப்­பி­லி­ருந்த ஏனையோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

வாக­னங்கள் சேதம்

இதனை விட இந்த துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­படும் போது அப்­ப­கு­தி­யி­லி­ருந்த வர்த்­தக நிலையம் ஒன்றும் துப்­பாக்கிச் சன்­னங்­களால் துளைக்­கப்ப்ட்­டுள்­ளன.

இதன் போதே அந்த வர்த்­தக நிலையம் அருகே இருந்த இரு சிரு­வர்­களும் மற்­றைய சிவி­லி­யனும் காய­ம­டைந்­துள்­ளனர். இத­னை­விட பொலிஸ் ஜீப் வண்­டிக்கு மேல­தி­க­மாக அப்­ப­கு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று வாக­னங்­களும் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் சேத­ம­டைந்­துள்­ளன.

துப்­பாக்கிச் சூட்­டை ­ய­டுத்து உட­ன­டி­யாக பாதாள உலக உறுப்­பி­னர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ள நிலையில் காய­ம­டைந்­த­வர்கள் முதலில் பிலி­யந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்ப்ட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான குற்றம் மற்றும் போக்குவரத்து விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் 11 சிறப்பு குழுக்கள் விசாரணை களை முன்னெடுக்கின்றன.

இதேவேளை, மேற்படி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் சார்ஜன்டாக பதவி பொலிஸ்மா அதிபரால் நேற்றைய தினம் பதிவி உயர்தப்பட்டுள்ளார்,

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com