ilakkiyainfo

பொலிஸ் கணவணை கொல்ல கோழிக்கடை முதலாளிக்கு ஒப்பந்தம் கொடுத்த மனைவி!

பொலிஸ் கணவணை கொல்ல கோழிக்கடை முதலாளிக்கு ஒப்பந்தம் கொடுத்த மனைவி!
May 02
21:42 2015

அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்­பித்த சில நிமி­டங்­க­ளி­லேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பர­வு­கி­றது.

அதா­வது பண்­டா­ர­கமை பொலிஸ் நிலை­யத்தின் வழக்குகளை கையாளும் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் ஆர். டப்­ளியூ. டப்­ளியூ. பலி­ஹ­வ­தென (53 வயது) கழுத்­த­றுக்கப்பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதே அந்த செய்­தி­யாகும்.

ஆம். உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தென பாணந்­துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெக்­கே­கம எனும் ஊரில் உள்ள அவ­ரது வீட்­டி­லேயே இவ்­வாறு கழுத்­த­றுத்து கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

“சேர்… நான் சப் இன்ஸ்­பெக்டர் பலி­ஹ­வ­தெ­னவின் மனைவி பேசு­கிறேன். சேர் அவரை யாரோ கொலை செய்து விட்­டார்கள். கட்­டிலில் சட­ல­மாக இருக்­கிறார்.

தலை­ய­ணை­யெங்கும் இரத்­தக்­கறை உள்­ளது. பய­மாக இருக்­கி­றது சேர்…” என 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதி­காலை 4.30 மணிக்கு பாணந்­துறை தெற்கு பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்த அவ­சர அழைப்பில் கூறப்­பட்­டது.

உடன் செயற்­பட்ட பொலிஸார் பாணந்­துறை பிரி­விற்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் ரத்நா­யக்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக ஸ்தலத்­துக்கு சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

ஸ்தலத்­துக்கு சென்ற பொலிஸார் உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தெ­னவின் வீட்டை குற்றப் பிரதே­ச­மாக பிர­க­டனம் செய்து தட­யங்­களை தேட ஆரம்­பித்­தனர்.

வீட்டின் இடது பக்க அறை­யொன்றில் உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தென கட்­டிலில் சட­ல­மாக கிடந்தார்.

அந்தக் கட்­டி­லுக்கு போடப்­பட்­டி­ருந்த நுளம்பு வலை பெரி­தாக கசங்கி இருக்­க­வில்லை. கொஞ்சம் அந்த நுளம்பு வலை வில­கி­யி­ருந்­தது.

சட­ல­மாக கிடந்த பலி­ஹ­வ­தெ­னவின் கழுத்தில் ஆழ­மான ஒரு வெட்டுக் காயம் மட்­டுமே காணப்பட்டது.

தலை­யணை இரத்­தத்தால் நனைந்­தி­ருக்க இறுதி நேரத்தில் போராடி இருக்­கத்­தக்க எந்த தட­யமும் அங்கு காணப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய பாணந்­துறை பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் ரத்நா­யக்க ஸ்தலத்­துக்கு மோப்ப நாய் மற்றும் பொலிஸ் தட­ய­வியல்  பிரிவை அழைத்து தடயம் சேக­ரிக்க பாணந்­துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிக்கு ஆணையிட்டார்.

அதன்­படி களுத்­துறை பொலிஸ் நிலைய மோப்ப நாயான “வூசி” ஸ்தலத்­துக்கு அழைக்­கப்­பட்­ட­துடன் சட­ல­மாக உப பொலிஸ் பரி­சோ­தகர் கிடந்த அறை­யி­லி­ருந்து தட­ய­மாக தலை­மு­டி­யொன்று பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது.

இந்­நி­லையில் என்ன நடந்­தது என அறிய சட­ல­மாக கிடக்கும் உப­பொலிஸ் பரி­சோ­த­கரின் மனைவியான ரத்ன ரஞ்­சனியின் (49 வயது) வாக்கு மூலம் ஒன்­றினை பொலிஸார் கோரினர்.

“சேர்… எனக்கு 10, 13 வய­து­களில் இரு மகன்மார் உள்­ளனர். நான் அவர்­க­ளுடன் முன் அறையில் நித்திரைக்கு சென்றேன்.

வழமை போலவே அவர் தனி­யான அறையில் நித்­தி­ரைக்கு சென்றார். அதி­காலை முதலில் நான் எழும்பி அவரை எழுப்­பு­வது வழக்கம்.

அதன்­படி இன்றும் (6 ஆம் திகதி) அதி­காலை 4.30 மணிக்கு எழுந்து அவ­ரது அறைக்கு சென்றேன். அப்பொ­ழுது தான் அவர் இரத்த வெள்­ளத்தில் கிடப்­பதைக் கண்டு பொலி­ஸாருக்கு அறி­வித்தேன்” என்று ரத்ன ரஞ்­சனி கூறி முடித்தார்.

அதனை தொடர்ந்து பொலிஸார் தட­ய­வியல் நிபு­ணர்­களின் உத­வி­யுடன் வீட்டை சல்­ல­டை­யிட்டு நபர்கள் அல்­லது கொலை­கா­ரர்கள் வீட்­டுக்குள் புகுந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கத்­தக்க வாயில் ஒன்றினை வீட்டின் மேல் தளத்தில் பொலி­ஸாரால் அவ­தா­னிக்க முடிந்­தது.

அத்­துடன் வீட்டின் கீழ் தளத்­தி­லி­ருந்த குளி­ய­லறை பக்­க­மாக மேல் மாடிக்கு ஒரு­வரால் ஏறி வரக்­கூ­டிய வச­திகள் இருப்­ப­தையும் பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

இந் நிலையில் இக் கொலைக்கு இரு சந்­தேக நபர்கள் வந்­தி­ருக்க வேண்டும் எனவும் மிகத்­திட்­ட­மிட்ட வகையில் அது செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென்­ப­தையும் பொலிஸார் அனு­மா­னித்­துக்­கொண்­டனர்.

இந் நிலையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தென ஏன் கொல்­லப்­பட்டார் ? யாரால் கொல்லப்பட்டார் ? அதன் பின்­னணி என்ன? என்­ப­தற்கு விடை காண வேண்­டிய தேவை இருந்­தது.

இதற்­கி­டையே ஸ்தலத்­துக்கு அழைத்து வரப்­பட்ட களுத்­துறை பொலிஸ் நிலைய மோப்ப நாய் வூசி மோப்பம் பிடித்து வீட்­டி­லி­ருந்து 100 மீற்­றர்­க­ளுக்கு உட்­பட்ட பற்றைக் காடு நிறைந்த இடத்தை நோக்கி சென்­றது.

அந்த சிறு காட்­டுப்­ப­கு­தியை சோதனை செய்த பொலிஸார் அதி­லி­ருந்து 18அங்­குல நீளம் கொண்ட மன்னா கத்­தி­யொன்­றினை கண்டு பிடித்­தனர்.

குறித்த கத்­தியே உப பொலிஸ் பரி­சோ­த­கரை கொலை செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கித்­தனர்.

இந் நிலையில் அந்தக் கத்­தியை “வூசி” மோப்ப நாய்க்கு மோப்பம் பிடிக்கச் செய்த பொலிஸார் விசாரணை­களில் முன்­னேற்­றத்தை எதிர்­பார்த்து முன்­னே­றினர்.

எனினும் மோப்ப நாயோ எதிர்­பா­ராத வித­மாக கொலை இடம்­பெற்ற வீட்­டி­னுள்­ளேயே சென்­ற­துடன் கொலை­யாளி நுழைந்­த­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட மேல் மாடிக்கு படி­களில் ஏறி­யது. மோப்ப நாயின் இந் நகர்வு பொலி­ஸாரை சிந்­திக்க வைத்­தது.

இந்­நி­லையில் பொலிஸார் தட­ய­மாக சந்­தே­கித்து மீட்­டி­ருந்த திறப்­பொன்­றி­னையும் “வூசி” ஊடாக மோப்பம் பிடிக்கச் செய்­தனர்.

அந்த சந்­தர்ப்­பத்­திலும் “வூசி” நேராக கொலை­யுண்ட உப பொலிஸ் பரி­சோ­த­கரின் வீட்டின் மேல் மாடிக்கே சென்­றது. இது பொலி­ஸாரின் சந்­தே­கத்தை அதி­க­ரித்­தது.

இத­னி­டை­யேதான் ஸ்தலத்துக்கு வந்த பாணந்­துறை நீதிவான் ருச்­சிர வெலி­வத்த விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்டார்.

அதன் பிர­காரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­க­கோனின் ஆலோ­ச­னைக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு பணிப்பாளர்,  உப பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான மக­துங்க தெல்­வத்த, ரத்­ன­வீர உள்­ளிட்ட சிறப்புக் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

இந்த சிறப்புக் குழு­வுக்கு மேல­தி­க­மாக மேலும் 5 பொலிஸ் குழுக்­களும் விசா­ர­ணை­களில் ஈடுபட்டிருந்தன.

இந் நிலையில் பிர­தான பொலிஸ் விசா­ர­ணையை பாணந்­துறை தெற்கு பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து பொறுப்­பேற்ற இந்த சிறப்பு பொலிஸ் குழு அது­வரை இடம்­பெற்­றி­ருந்த விசா­ர­ணை­களை அப்­ப­டியே தொடர்ந்­தது.

மோப்ப நாய் வூசி யின் செய்­கை­களால் உப பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தெ­னவின் கொலை­யுடன் ஏதோ ஒரு வகையில் அவ­ரது வீட்டில் இருந்த ஒரு­வ­ருக்கு தொடர்பு இருக்க வேண்டும் என சிறப்பு பொலிஸ் குழு சந்­தே­கித்­தது.

அது குறித்து ஆராய்ந்த போது கொலை இடம்­பெற்ற இரவு வேளையில் இவ்­வீட்டில் உப­பொலிஸ் பரி­சோ­த­கரும் அவர் மனைவி ரத்ன ரஞ்­சனியும் இரு பிள்­ளை­க­ளுமே இருந்­துள்­ளமை தெரிய வந்­தது.

இந் நிலையில் தான் சிறப்புப் பொலிஸ் குழுவின் சந்­தேகம் மனைவி ரத்ன ரஞ்­சனி மீது விழுந்­தது. எனினும் சிறப்புப் பொலிஸ் குழு அதனைக் காட்டிக் கொள்­ள­வில்லை.

ஏப்ரல் 8ஆம் திகதி புதன்­கி­ழமை உப பொலிஸ் பரி­சோ­த­கரின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்று முடியும் வரையில் விசா­ர­ணை­களில் எவ்­வித முன்­னேற்­றமும் இல்­லா­ததைப் போன்றே பாவனை செய்து கொண்டு சிறப்புப் பொலிஸ் குழு தனது நட­வ­டிக்­கை­களை தொடர்ந்­தது.

பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­க­ரவின் தக­வல்­க­ளின்­படி இக்­காலப் பகு­தியில் சிறப்பு பொலிஸ் குழு ரத்ன ரஞ்­ச­னியின் தொலை­பேசி இலக்­கத்தை வைத்து அறி­வியல் தட­யங்­களை சேக­ரித்­தி­ருந்­த­துடன் அவற்றை பகுப்­பாய்வு செய்து வந்­துள்­ளது.

அதன்­ப­ய­னா­கவே உப பொலிஸ் பரி­சோ­த­க­ரான பலி­ஹ­வ­தெ­னவின் கொலையின் பின்­ன­ணி­யினை கண்­ட­றிந்து சந்­தேக நபர்­களை கைது செய்ய முடிந்­த­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர சுட்­டிக்­காட்­டு­கிறார்.

இந்­நி­லை­யி­லேயே உப­பொலிஸ் பரி­சோ­த­கரின் கொலை­யா­னது ஒப்­பந்த அடிப்­ப­டையில் செய்யப்பட்டது என்­பதை சிறப்பு பொலிஸ் குழு வெளிப்­ப­டுத்­தி­யது.

அறி­வியல் உள்­ளிட்ட தட­யங்கள் ஊடாக உப­பொலிஸ் பரி­சோ­த­கரின் மனைவி ரத்ன ரஞ்­சனி இந்த கொலை­யுடன் ஏதேனும் ஒரு தொடர்பை கொண்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கித்த குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு அவ­ரது இரு மகன்­மா­ரையும் உற­வினர் ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைத்து விட்டு அவரை கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட அவ­ரிடம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் கொலையாளியின் மர்ம முடிச்­சுக்கள் அவிழ்ந்­தன.

“சேர்…. எனது கணவர் எனக்கும் பிள்­ளை­க­ளுக்கும் சொல்­லொணா சித்­தி­ர­வ­தை­களை செய்தார். ஒழுங்காக உண்டு மகி­ழவோ உடுக்­கவோ அவர் விட­வில்லை.

அவ­ரது இன்­னல்­களை பொறுக்க முடி­யா­ம­லேயே நான் அவ்­வாறு அவரை தீர்த்­துக்­கட்­டினேன்..”என ரஞ்­சனி கூறி முடிப்­ப­தற்குள் பொலிஸார் அடுத்­த­டுத்து கேள்­வி­களை தொடுத்து கொலை தொடர்பில் அனைத்து விப­ரங்­க­ளையும் சேக­ரித்­தனர்.

“நானும் பிள்­ளை­களும் ஒவ்­வொரு நாளும் கஷ்­டப்­பட்டோம். அவர் எனது சொத்­துக்கள் அனைத்­தையும் அவ­ரது பெய­ருக்கு மாற்­றிக்­கொண்டார். எல்லா விதத்­திலும் நாம் கஷ்­டங்­களை அனு­ப­வித்தோம்.

குறைந்­த­பட்சம் உண்ணவோ உடுக்கவோ எமக்கு சுதந்­திரம் இருக்­க­வில்லை. நான் காலையில் இருந்து இரவு வரை கடையில் கஷ்­டப்­பட்டேன். (கொலை செய்­யப்­பட்ட உப­பொலிஸ் பரி­சோ­தகர் பாண­ந்துறை நகரில் சில்­ல­றைக்­க­டை­யொன்­றுக்கு உரி­மை­யாளர்.

காலை முதல் மாலை வரை ரஞ்­ச­னியே அதனை நிர்­வ­கித்­துள்ளார். அதன் பின்னர் இரவு 10.00 மணி­வரை வேலை விட்டு வரும் உப­பொலிஸ் பரி­சோ­தகர் நிர்­வ­கித்­துள்ளார்.) முட்­டை­களை கூட எண்ணி பதுக்­கினார்.

அரிசி மூடை­களை அடை­யாளமிட்டே வைத்தார். இந்த அட்­டூ­ழி­யங்­களை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே அவரை கொலை செய்ய தீர்­மா­னித்தேன்.

அது தொடர்பில் வீட்டின் அருகே உள்ள கோழிக்­கடை முத­லாளி பலந்­த­விடம் ஒப்­பந்தம் செய்தேன். 10000 ரூபாவை செலுத்­தினேன்.

வேலை முடிந்­ததும் 50000 ரூபா தரு­வ­தாக கூறினேன்” என ரத்ன ரஞ்­சனி விட­யங்­களை வெளிப்­ப­டுத்த சிறப்பு பொலிஸ் குழு கோழிக்­கடை முத­லாளி பலந்­தவை கைது செய்­தது.

இந்த கைதைத் தொடர்ந்து கொலை எப்­படி நடந்­தது என்­ப­தையும் ஏனைய சந்­தேக நபர்­க­ளையும் புல­னாய்வு பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு அடுத்­த­டுத்து கைது செய்­தது.

10000 ரூபாவை கொடுத்து ரஞ்­சனி கோழிக்­கடை முத­லாளி பலந்­த­விடம் தனது கண­வரை கொலை செய்ய ஒப்­பந்தம் கொடுத்த பின்னர், பலந்­தவே இந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த சிலாவத்துறையைச் சேர்ந்த தனது பங்­கா­ளி­யான இந்­திக பஸ்­நா­யக்­கவை சேர்த்­துக்­கொண்­டுள்ளான்.

அத்­துடன் உப­பொலிஸ் பரி­சோ­த­கரை கொலை செய்ய ரஞ்­ச­னியின் மாமி­யா­ரான 78 வய­து­டைய டீ.எம். சந்­­ரா­வ­தியும் பங்­க­ளிப்பு செய்­துள்­ளதை கண்­ட­றிந்த பொலிஸார் அவ­ரையும் கைது செய்­தனர்.

தனது கணவர் மீது ஆத்­தி­ரத்தில் இருந்த ரஞ்­சனி அவரை கொலை செய்யும் திட்­டத்தை முதலில் மாமி­யா­ரான சந்­ரா­வ­தி­யிடம் கூறி­யுள்ளார்.

உப­பொலிஸ் பரி­சோ­த­க­ருடன் ஏற்­க­னவே கோப­மாக இருந்­துள்ள சந்­ரா­வதி பழி­வாங்க சந்­தர்ப்பம் பார்த்து கொலை குறித்து ஆலோ­சனை வழங்கி கோழிக்­கடை முத­லா­ளிக்கு ஒப்­பந்தம் கொடுக்கும் வரை ஒத்­தாசை செய்­துள்ளார்.

இந்­நி­லையில் தான் கடந்த 5ஆம் திகதி ஞாயி­றன்று கடையை மூடி விட்டு வீட்­டுக்கு வந்த உப­பொலிஸ் பரி­சோ­தகர் உடல் அலம்பி விட்டு இரவு உணவை உட்­கொண்­டுள்ளார்.

இந்த உணவில் தூக்க மாத்­தி­ரை­களை ரஞ்­சனி கலந்­தி­ருந்­ததால் அவர் சாப்­பிட்டு சிறிது நேரத்­தி­லேயே ஆழ்ந்த நித்­தி­ரைக்கு சென்­றுள்ளார்.

இந்த தூக்க மாத்­திரை யோச­னையை சந்­தேக நப­ரான இந்­திக பஸ்­நா­யக்­கவே ரஞ்­ச­னிக்கு சொல்­லிக்­கொ­டுத்­துள்­ள­துடன் அவரே அம்­மாத்­தி­ரை­களை வாங்­கியும் கொடுத்­துள்ளார்.

இந்­நி­லையில் அன்று இரவு கத்­தி­யுடன் உள் நுழைந்த இந்­திக்­கவும் பலந்­தவும் எவ்­வித சிர­மமும் இன்றி ஆழ்ந்த உறக்­கத்தில் இருந்த உப­பொலிஸ் பரி­சோ­தகர் பலி­ஹ­வ­தெ­னவை கழுத்­த­றுத்து கொலை செய்து விட்டு கத்­தியை அருகில் உள்ள புதர் காட்­டுக்குள் வீசி விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

பொலிஸார் அந்த கத்­தியை ஏற்­க­னவே மீட்ட நிலையில் இந்­திக்க பஸ்­நா­யக்­கவை மன்­னாரில் வைத்து சிறப்பு பொலிஸ் குழு கைது செய்தது.

இந்நிலையில் கைதான நால்வரையும் கடந்த 23 ஆம் திகதி பாணந்துறை நீதிவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார் இந்திக்கவிற்கு எதிராக 48 மணி நேர தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.

ஏனையோரை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். 48 மணி நேர தடுப்புக்காவல் விசாரணையின் பின் இந்திக்கவும் மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மனைவியும் அவர் மாமியாரும் சேர்ந்து கதைத்து முடிவெடுத்து கோழிக்கடை முதலாளிக்கும் அவர் நண்பருக்கும் ஒப்பந்தம் கொடுத்து உபபொலிஸ் பரிசோதகர் பலிஹவதென கொலை செய்யப்பட்டதாக சாட்சியங்கள் ஊடாக நிரூபணமாகியுள்ளன.

வழக்கு தொடரும் நிலையில் உறவினர்கள் வசம் இருந்த ரஞ்சனியின் பிள்ளைகள் இருவரும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விட்டுக்கொடுப்புகளும் புரிந்துணர்வும் இல்லாத இல்லற வாழ்க்கை எவ்வளவு அபாயகரமானது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. தந்தை இறக்க தாய் சிறையில் வாட பிள்ளைகள் இங்கே காப்பகத்தில் அநாதைகள் ஆகின்றனர். சதி செய்பவர்கள் வாழ்வில் விதி விளையாடுகின்றது.

-எம்.எம்.எம். பஸீர்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com