ilakkiyainfo

பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
March 16
15:26 2019

பொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோகச் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

jgjgjgநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக்கோரி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ஆண்டவர் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில், ஜனநாயக மாதர் சங்கத்தினரும் குறித்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பொது இடங்களில் பெண்கள் மீது, நடத்தப்படும் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

pollasiமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில், ஆதித் தமிழர் மகளீர் பேரவைச் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதேவேளை புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாளாகவும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தசாமி என்கின்ற மாணவனை, பொலிஸ் அதிகாரியொருவர் கன்னத்தில் அறைந்ததை அடுத்து அங்கு பதற்றமும் ஏற்பட்டது.

மேலும் ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குவதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com