ilakkiyainfo

போராட்டமும் புறக்கணிப்பும். தமிழர் தரப்பின் விடாமுயற்சி வெற்றிபெறுமா?

போராட்டமும் புறக்கணிப்பும்.  தமிழர் தரப்பின் விடாமுயற்சி வெற்றிபெறுமா?
February 11
21:04 2019

“தீர்வு குறித்து ஆராய தயாராகும் பெரும்பான்மை தலைமைகள் சமஷ்டியை ஆராயத் தயாராக இல்லை என்ற காரணியே தீர்வுக்கு பிரதான தடையாக உள்ளது”

இலங்­கையின் அர­சியல் நெருக்­கடி மற்றும் தீர்­வுக்­கான முயற்சி என்­பது இன்று நேற்று பேசப்­பட்டு வரும் விட­ய­மல்ல. கடந்த மூன்று தசாப்த கால யுத்­தத்தின் பின்னர் அவ­சி­ய­மான ஒன்­றா­கவும் அதற்கு முன்னர் இருந்தும் இதற்­கான தேவையும் நோக்­கமும் உருப்­பெற்­று­விட்­டது.

இலங்கை சுதந்­திரப் போராட்­டத்தை மட்டுமல்ல, உள்­நாட்டு யுத்­தத்­தையும் எதிர்­கொண்டு மிகச்­சி­றந்த அனு­ப­வங்­களை கொண்­டுள்­ளது. இனப்­பி­ரச்­சினை மற்றும் ஆயுதப் போராட்டம் என்­ப­வற்றை மிக நீண்ட கால­மாக எதிர்­கொண்டு அதில் இழப்­பு­க்களை பெரு­வா­ரி­யாக சந்­தித்து நாட்டின் சகல மக்­களும் வலி­களை சந்­தித்த வர­லாற்று பாடம் எமக்கு உண்டு.

கடந்த கால கசப்­ப­ான அனு­ப­வங்­களை கொண்டு அதி­லி­ருந்து விடு­பட்டு தீர்­வு­களை நோக்­கிய பாதையில் பய­ணிக்க வேண்டும் என்ற தெளி­வான சிந்­தனை உருப்­பெறத் தொடங்­கி­ய­வுடன் இந்த நெருக்­க­டி­களின் போதும் நெருக்­க­டி­களின் பின்­னரும் தீர்­வு­களை எட்ட அர­சாங்­கமும் சரி தமிழர் தரப்பும் சரி பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்­தன. இதில் சில நேரங்­களில் தீர்­வுகள் கைய­ளவில் எட்­ட­வி­ருந்த சந்­தர்ப்­பங்கள் தமிழர் தர­ப்­பி­னரால் தவ­ற­வி­டப்­பட்­டன. அதேபோல் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சிங்­களத் தரப்­பினர் தீர்­வு­களை குழப்­பியும், நிரா­க­ரித்தும் சென்­றுள்­ளனர்.

எனினும் நீண்ட கால­மாக அர­சியல் பிரச்­சி­னைகள் குறித்து எடுத்த முயற்­சி­களின் விளை­வுகள் எந்­த­ளவு வெற்றி பெற்­றன என்றால் அது கேள்­வியே. எனினும் அர­சியல் தீர்வு என்ற விட­யத்தில் புதிய அர­சியலமைப்பின் தேவை மற்றும் அதற்­கான முயற்­சிகள் என்­பதே பிர­தா­ன­மா­ன­தாகும். எப்போது சிங்­கள தேச­மெனும் தனி சிந்­தனை சிங்­கள தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்டு அதற்­கான அர­சியல் வரைவு ஒன்று உரு­வாக்­கப்­பட்­டதோ அன்றிலிருந்து நெருக்­க­டியும் முரண்­பா­டு­களும் உக்­கி­ர­ம­டைய ஆரம்­பித்­து­விட்­டன.

அர­சியலமைப்பு நாட்டின் ஜன­நா­யக பாதையின் அடிப்­ப­டை­யாகும். இனங்­களை ஒன்­றி­ணைக்க, நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப ஆரம்­பப்­புள்ளி அர­சியலமைப்பில் இருந்து தொடங்குகின்­றது. வெற்­றி­பெற்ற நாடு­களின் முற்­றுப்­பு­ள்ளியும் கூட அர­சியல் அமைப்­பே­யாகும். நாம் பல்­லின சமூகம், இதில் சிங்­க­ளவர்கள் பெரு­ம­ளவில் வாழ்­வதால் அவர்கள் பெரும்­பான்மை, தமிழ் பேசும் மக்கள் குறைந்த அளவில் வாழ்­வதால் நாம் சிறு­பான்­மை­யினர். இது எண்­ணிக்கை அடிப்­ப­டையில் கரு­தப்­ப­டு­கின்­றதே தவிர தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு உரி­மை­களை வழங்­கு­வ­திலோ சுதந்­திர பாதையை உரு­வாக்­கிக்­கொ­டுப்­ப­திலோ சிறு­பான்­மைத் ­த­ன­மாக சிந்­திக்­கக்­கூ­டாது.

எனினும் இன்­று­வரை இந்த நாட்டில் மூவி­னத்­த­வ­ரையும் ஒன்­றி­ணைக்க முடி­யாமல் போயுள்­ள­தென்றால் அதற்கு இந்த பாகு­பாடே கார­ண­மாகும் எனலாம். தொடர்ச்­சி­யாக ஒரு இனம் தம்மை மேதா­வியாகக் காட்­டிக்­கொண்டு ஏனை­ய­வர்­களை அடி­மை­க­ளாக நினைக்க தொடங்­கி­யதன் விளை­வுகள், பாது­காப்பு என்ற பெயரில் சிறு­பான்­மையினரின் உரி­மையை பறித்­தமை என்ற கார­ணிகள் மட்­டு­மல்­லாது கல்­வித்­த­கை­மையை, ஆளு­மையை திட்­ட­மிட்டு அழித்­தமை போன்ற கார­ணிகள் முரண்­பாட்­டுக்­கான பல­மான அடித்­த­ளத்தை அமைத்­தன.

எவ்­வாறிருப்­பினும், இன்­றைய அர­சியல் நெருக்­க­டிக்கு சமஷ்டி முறைமை தீர்­வாக அமையும் என்­பதே சிறு­பான்மைக் கட்­சி­களின் நிலைப்­பா­டாக இருந்து வரு­கின்­றது. அத­னையே அவர்கள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றனர். தமிழர் தரப்பு தனி அடை­யா­ள­மாக தனி அதி­கா­ரங்­களை கொண்டு செயற்­ப­டு­வது உரி­மையை பாது­காக்கும் என்­பதே அதன் அர்த்தம். ஆனால் தீர்வு குறித்து ஆராய தயா­ராகும் பெரும்­பான்மைத் தலை­மைகள் சமஷ்­டியை ஆராய தயா­ராக இல்லை என்ற கார­ணியே தீர்­வுக்கு பிர­தான தடை­யாக உள்­ளது.

எவ்­வாறிருப்­பினும் இன்று தீர்­வுகள் குறித்து பேசு­வதும் புதிய அர­சியலமைப்பின் மூல­மாக தீர்­வு­களை எட்ட நினைப்­பதும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லேதான் முதல் முயற்சி என்­றல்ல. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதிலிருந்து புதிய அர­சியலமைப்பு ஒன்றின் தேவை பல்­வேறு சந்­தர்ப்­பங்களில் அந்­தந்த அர­சாங்­கங்கள் முன்­வைத்த கார­ணி­யே­யாகும். எனினும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுமே அர­சியலமைப்பின் இறுதி வடி­வத்தை ஏதோ ஒரு காரணம் காட்டி நிரா­க­ரித்து அல்­லது தீர்வை குழப்­பி­விட்­டன.

அர­சியல் தீர்வு ஒன்­றுக்­கான முயற்­சி­யா­னது வர­லாற்றைக் கடந்த கால கசப்­பம்­சங்­களை ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்திலும் கூறியே செல்­கின்­றன. அவ்­வா­றான நிலையில் நல்­லாட்சி என ஆரம்­பிக்­கப்­பட்ட அர­சாங்­கத்தில் மீண்டும் புதிய அர­சாங்கம் என்ற முயற்சி பல­ம­டைய ஆரம்­பித்­தது. ஆனால் கடந்த கால முரண்­பா­டு­களை போல் அல்­லாது பிர­தான இரண்டு கட்­சி­களின் ஆத­ர­வுடன் ஒரு ஆரோக்­கி­ய­மான நம்­பிக்­கையை உரு­வாக்­கக்­கூ­டிய முயற்­சி­யாக நடை­போட்­டது.

புதிய அர­சியலமைப்பு குறித்து இதற்கு முன்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சி­களில் தமிழர் தரப்பு கொண்­டி­ராத அக்­கறை இம்­முறை அதா­வது 2015 ஆம் ஆண்­டிற்கு பின்னர் அவர்­களால் கையா­ளப்­பட்­டது. இன்றும் தமிழர் அர­சியல் தலை­மைகள் அதற்­கான முழு முயற்­சியை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும். குறிப்­பாக புதிய அர­சியலமைப்பு குறித்த கட்­சி­களின் முன்­மொ­ழி­வுகள் மற்றும் சிவில் அமைப்­புகள், பொது­மக்களின் கருத்­துகளை திரட்டும் முயற்சி ஆரம்­பிக்­கப்­பட்டு இன்று அவற்றை ஒன்­றி­ணைத்து பாரா­ளு­மன்ற வழி­ந­டத்தல் குழு­வினால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் பாரா­ளு­மன்ற தமிழ்ப் பிர­தி­நிதித்­துவக் கட்­சிகள் மிகவும் இல­கு­வான போக்­கினை கையாண்டு தீர்வு என்ற நோக்­கத்தை எட்ட முழு­மை­யாக முயற்­சித்து வரு­கின்­றனர் என்­பது அவர்­களின் முன்­மொ­ழி­வு­களில் தெட்டத்தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கின்­றது. புதிய அர­சியலமைப்­பினை எந்த வழி­யி­லேனும் உரு­வாக்கி அதில் தமிழர் சுதந்­திரம் உறு­திப்­படுத்­தப்­பட வேண்டும் என்ற நோக்கம் புலப்­பட்­டுள்­ளது.

அர­சியலமைப்பே இலங்­கையின் உச்ச சட்­ட­மாக இருக்கும் என்ற முதல் அங்­கீ­கா­ரத்தில் இருந்து இலங்கை அர­சாங்கம் ஓர் ஐக்­கிய, பிரிக்க முடி­யாத மற்றும் பிரிக்­கப்­ப­டாத நாட்டின் கட்­ட­மைப்­பிற்கு உள்­ளாக ஓர் சமஷ்டி அர­சாக இருக்கும், மாகா­ணங்­களின் மைய­மா­னது அர­சியலமைப்பின் ஏற்­பா­டு­களின் பிர­காரம் தமக்கு தகுதி வாய்ந்த விட­யங்­களில் பிரத்­தி­யேக அதி­கா­ரத்தை செயற்­ப­டுத்தும்.

மத்­திய அர­சாங்­கத்தை நிரா­க­ரிக்­காத அதேநேரம் மாகா­ணங்­க­ளுக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொள்ளும் நோக்கம் அவர்­களின் முன்­மொழி­வு­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதேபோல் இலங்­கையின் மதம் என்ற விட­யத்தில் இலங்கை ஒரு மதச் சார்­பற்ற நாடாக இருத்தல் வேண்டும் என்­ப­தாகும். எனினும் பௌத்த மதம் பிர­தான மத­மாக பெரும்­பான்மை தரப்பு ஏற்­றுக்கொள்ளும் பட்­சத்தில் நிபந்­தனை மற்றும் விதி­மு­றை­க­ளுக்கு அமைய அதனை கையாள முடியும் என கூறு­கின்­றனர்.

மாகாண சபை­களை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்­ளது என்­பதே உண்­மை­யாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாகா­ண­மாக அர­சாக உரு­வாக்­கப்­பட வேண்டும். அதுவும் சகல மக்­களும் சம­மாக நடத்­தப்­ப­டு­வதை உறுதி செய்­யக்­கூ­டிய போதி­ய­ளவு பாது­காப்­புகள் இருத்தல் வேண்டும் என உறு­தி­யான நிலைப்பாட்டில் அவர்கள் உள்­ளனர்.

எனினும் இந்த நிலை­ப்பாட்டிற்கு எந்­த­வொரு முஸ்லிம் அர­சியல் தரப்பும் தயா­ரில்லை என்ற கார­ணியும் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வேண்­டி­ய­தாகும். அர­சியலமைப்பு குறித்த முஸ்லிம் தரப்பின் முன்­மொ­ழி­வு­களில் இலங்­கையின் மாகா­ணங்கள் ஒன்­ப­தாக இருக்க வேண்டும் என்­பதே அவர்­களின் உறு­தி­யான நிலைப்­பா­டாகும். அத்­துடன் அவ்­வாறு இணைக்கும் முயற்­சியை எந்­த­வொரு அர­சியல் கட்­சியோ அல்­லது அமைப்­போ முயற்­சிக்­க இட­ம­ளிக்­கக்­ கூ­டாது என்­பதை அவர்­களின் முன்­மொ­ழி­வு­க­ளாக முன்­வைத்­துள்­ளனர்.

அதேபோல் ஆளுநர் விவ­கா­ரத்­திலும் மத்­திய அர­சாங்­கத்­திற்கும் மாகா­ணங்­க­ளுக்கும் மாநி­லங்­க­ளுக்கும் இடை­யி­லான சீரான தொழில்­முறை உற­வொன்றை உறுதிசெய்­வ­தற்­காக முயற்­சிக்க வேண்டும் என்­ப­துடன் மாகா­ணங்­களின் நிறை­வேற்று அதி­கார பிர­யோ­கத்தில் தலை­யி­டு­வ­தற்­கான எந்தத் தத்­து­வத்­தையும் கொண்­டி­ருத்­த­லா­காது. ஆளு­நரின் தத்­து­வங்கள் அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வாக வரை­ய­றுக்­கப்­பட்ட வேண்டும் என்ற கார­ணி­களை தமிழர் தரப்பு தெட்­டத்­தெ­ளி­வாக உய­ரிய சபையில் முன்­மொ­ழிந்­துள்­ளது.

இந்த கார­ணிகள் ஒன்றும் நாட்­டினை பங்­கு­போடும் கோட்­பா­டுகள் அல்ல. தமிழர் தரப்பு இவற்றை முன்­வைக்க முன­்னரே சிங்­கள தலை­மைகள் சர்­வ­தே­சத்­திடம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் உய­ரிய அதி­கார பகிர்­வுகள் குறித்து வாக்­கு­று­தி­களை கொடுத்­துள்­ளனர். யுத்­தத்தின் பின்னர் அதி­யுச்ச அதி­காரப் பகிர்வு பற்றி கூறி­ய­வர்கள்தான் இவர்கள். ஆனால் நிறை­வேறாத வாக்­கு­றுதி­யா­கவே அனைத்தும் நீடிக்­கின்­ற­மையே வருத்­த­ம­ளிக்­கி­றது.

தீர்வு என்ற விட­யத்தில் இன்­னமும் தமிழர் தரப்பின் வலி­களை, அவர்­களின் உணர்­வு­களை சிங்­களப் பெரும்­பான்மை சமூ­கமோ தலை­மை­களோ முழு­மை­யாக உணர்ந்­து­கொள்­ள­வில்லை என்­பதே உண்­மை­யாகும். ஒரு நாட்­டுக்குள் தமிழர் தரப்­புடன் வாழ சிங்­கள மக்­களே அச்சம் கொள்­கின்­றனர். காரணம் கேட்டால் ஆயுத வர­லாற்றை கூறு­கின்­றனர். இன்று ஜன­நா­யகம் பேசும் சிங்­கள தலை­மைகள், சுதந்­திர தின கொண்­டாட்­டங்­களில் ஈடு­படும் சிங்­கள தரப்­பினர் அவற்றை உணர்வுபூர்­வ­மா­கத்தான் கொண்டாடு­கின்­ற­னரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

தேசியவாதிகள் என்ற போர்­வையில் இன­வா­தத்தை கக்­கு­வது ஜன­நா­ய­கமாம். எது ஜன­நா­யகம்? எமது உணர்­வு­க­ளுக்கு எமது உரி­மை­க­ளுக்கு இடம்கொடுக்­காது ஒட்­டு­மொத்த இனத்­தையும் அடக்­கி­வைத்து ஆள நினைப்­பதன் பெயர் ஜன­நா­ய­கமா? எனது பசிக்கு சோறு வேண்டும் என கேட்கக் கூட எமது இனத்­துக்கு உரிமை இல்­லையா? நான், எனது மண்ணின் உற்­பத்­தியை சுயேச்­சை­யாக கையாள உரிமை இல்­லையா? இதுவா 70 ஆண்­டு­கால சுதந்­திர இலங்­கையின் ஜன­நா­யக போக்கு என்ற காத்­தி­ர­மான கேள்வி தமிழர் தரப்பில் எழுந்து­விட்­டது.

தமிழர்கள் உரி­மையை கேட்டால் தனி நாடு கேட்­கின்­றனர் என விமர்­சனம் முன்­வைக்­கின்­றனர். நாங்கள் இலங்­கை­யர்கள் எனக் கூறிக்­கொண்டுதான் இருக்­கின்றோம். அவர்கள்தான் எம்மை இலங்­கை­யர்­க­ளாக ஏற்­று­க்கொள்ள தயா­ராக இல்லை. பிரி­வி­னை­வா­திகள் பிரி­வி­னை­வா­திகள் என அவர்கள்தான் எங்­க­ளைப்­பார்த்து கூறிக்­கொண்­டுள்­ளனர்.

குறிப்­பாக பெளத்த வாதம், அறம், விட்டு­கொ­டுப்பு, அமைதி என போதித்த கௌதம புத்­தரின் சிந்­த­னையை மீறிய அடிப்­படை வாதமும் அடக்­கு­மு­றையும் இன்று விதைக்­கப்­பட்டு அதுவே ஆட்­சி­யையும் தீர்­மா­னிக்கும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தீர்­வு­களை சிந்­திக்கும் அதனை முன்­வைக்க முனையும் சகல சந்­தர்ப்­பங்­க­ளையும் தனி­நாட்டு கோரிக்­கை என சிறு­பான்மையினரின் வாய்­களை மூடி­வி­டு­கின்­றனர்.

தனி நாட்டு ஆசையை காட்­டி­யதும் சிங்­க­ளவர், வடக்கு கிழக்கு தனி அழ­காக பார்ப்­பதும் அவர்­களே. நீங்­களே எங்­களை ஒதுக்­கி­விட்டு, ஓரங்­கட்­டி­விட்­டு­ விட்டால், அப்­போது நாம் எவ்­வாறு இணைய முயற்­சிப்­பது? நினைக்­கக்­கூட முடி­யாதே என்ற கேள்வி நியா­ய­மா­னது தானே. நீங்கள் எங்­களை நண்­பர்­க­ளாக ஏற்­றுக்­கொள்­ள­வில்­லையே. பின்னர் எப்­படி நாங்கள் நேசிப்­பது என்ற கேள்வி தமிழர் மத்­தியில் எழு­வது ஒன்றும் புதி­ய­தல்­லவே?

நீங்கள் எங்­களை ஈழத்­தவர் என கூறு­வதும் தமிழர் என கூறு­வதும் தேசிய வாதம் என்றால் நாங்கள் எங்­களை தமிழர், ஈழத்­தவர் என கூறினால் பிரி­வி­னை­வா­தி­களா? அடி­வாங்கி அழும் பிள்­ளைக்கும் ஆசையில் அழும் பிள்­ளைக்கும் இடையில் வித்­தி­யாசம் உண்டு. நாம் அடி­வாங்கி அழும் பிள்­ளைகள் எமக்­குத்தான் வலி­க­ளி­னதும் சுமை­க­ளி­னதும் அர்த்தம் விளங்கும். அதனை உணர வேண்­டி­யது பேரி­ன­வாத தலை­மை­களின் கடமை. உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றோம். உணர்ந்தும் ஒரு சுயநல நோக்கத்துக்காக பேரினவாதம் காதுகளை மூடிக்கொண்டுள்ளது. நாம் பயங்கரமானவர்கள் அல்ல என்பது தெரிந்தும் எம்மை பயங்கரவாதிகளாக உருவகப்படுத்திவிட்டீர்கள்.

தமிழ்த் தலைமைகளின் நோக்கம் ஒன்றுதான். அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டும். அதற்கு புதிய அரசியலமைப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதே நிலைப்பாடு. அந்த நோக்கம் இருப்பவன் கையில் ஒருநாள் ஆட்சி கிடைக்க வேண்டும். நோக்கம் இல்லாத தலைமைகளின் கைகளில் ஆட்சி அதிகாரங்கள் தொடர்ச்சியாக சென்றடைகின்றது. தீர்வுகள் நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் போதே ஏதோ ஒரு சக்தி அதனை தடுக்கின்றது. அதனை தாண்டி எந்தவொரு அரசியல் தலைமையினாலும் செயற்பட முடியாது போகின்றமையே இன்றுவரை சாபக்கேடாக அமைந்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் புதிய அரசியலமைப்பு எப்போது உருவாவது?

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com