மகள், பேரக்குழந்தைகள் என 4 பேருக்காக 180 சீட் கொண்ட விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்

180 இருக்கைகள் கொண்ட விமானத்தை தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ. 20 லட்சத்திற்கு வாடகைக்கு ஒரு தொழில் அதிபர் எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஊர்டங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.
மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கி கொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏ-320 விமானத்தை வாடகைக்கு எடுத்தார். 180 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் வாடகை சுமார் ரூ. 20 லட்சம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானம் திங்கட்கிழமை டெல்லியில் இருந்து போபாலுக்கு வந்தது. பின்னர் போபாலில் இருந்து அந்த நான்கு பேரையும் ஏற்றி டெல்லிக்கு சென்றது. மற்ற விவரங்களை விமான அதிகாரிகள் வெளியிடவில்லை
There are no comments at the moment, do you want to add one?
Write a comment