பெங்களூர்: காதல் பிரச்சினைகளில் சிக்கியிருந்த நடிகை நயன்தாராவுக்கு மன அமைதி வேண்டுமானால் எங்கள் ஆசிரமத்துக்கு வரலாம் என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்கூறும் திரைப்பட நல்லுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை நயன்தாரா. அவர் வலது காலை எடுத்து வைத்த நேரமோ என்னமோ தெரியவில்லை, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக பரிணமித்தார்.

சிம்புவுடன் கிசுகிசு
இந்நிலையில் நடிகர் சிலம்பரசனுடன் காதல் ஏற்பட்டது. நயனும், சிம்புவும் உதட்டை கடித்துக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் சிம்புவுடன் காதல் திடீரென முறிந்தது. இதனால் நயன்தாரா முதன்முறையாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

நடன புயலுடன் நாட்டியம்
இந்த காலகட்டத்தில்தான் அவரது மன உளைச்சலுக்கு மருந்தாக தென்பட்டார் நடிகரும், நடன புயலுமான பிரபுதேவா. கிறிஸ்தவரான நயன்தாரா, பிரபுதேவாவுடனான காதலுக்காக மதத்தைவிட்டுக் கொடுத்து இந்துவாக மாறினார். ஆனால் பிரபுதேவா, காதலுக்காக தனது மனைவியையே விட்டுக்கொடுத்தார்.

சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ்
ஆனால் ஏனோ தெரியவில்லை, பிரபுதேவாவுடனான காதலும் முறிந்தது. கடுமையான மன உளைச்சலில் சிக்கினார் நயன்தாரா. இதன்பிறகு மீண்டும் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய நயன்தாராவுக்கு வெற்றிகள் குவிகின்றன. இதனால் கவலையில் இருந்து மீண்டு வந்துள்ளதை போல காணப்படுகிறார்.

வாங்க, பழகலாம்
இந்நிலையில், அடுத்தடுத்து வாழ்க்கையில் சோகத்தையே சந்தித்து வரும் நயன்தாராவுக்கு மகிழ்ச்சியை உருவாக்க, அவரது வாழ்க்கையின் துக்கங்களை, சந்தோஷமாக மாற்ற, நித்தியானந்தா ஆசிரமம் கருணை கூர்ந்துள்ளது. ‘வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்’ என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

மகிழ்ச்சியா எப்படி இருக்கனும் தெரியுமா?
நித்தியானந்தா ஆசிரமத்தில் யோகா, மூச்சு பயிற்சி, பிராணாயாமம், நடனம் உட்பட வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தேவையான இன்னும் பல வித்தைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்து நயன்தாராவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்புவிடுத்துள்ளதாம் ஆசிரமம்.

சர்ச்சை சாமியார்
நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா, சீடராக சேர்ந்து பணியாற்றிய நிலையில்தான், அவரும், நித்தியானந்தாவும் நெருக்கமாக இருப்பது போன்ற சர்ச்சைக்குறிய வீடியோ வெளியானது. இந்த வீடியோ போலியானது என்று நித்தியானந்தா மறுத்தாலும், அவரது பேச்சை பெரும்பாலான மக்கள் நம்பவில்லை.
எனவே, நயன்தாரா, நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்றால், விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுவரை நயன்தாரா இந்த விஷயத்தில் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார்.

Post Views: 506
நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்