மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்: ஜெ. அறிக்கை
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அவர் மேலும், ‘அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
தனது உடல்நலம் குறித்து அவர்,’மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்.
இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை’ என்றுள்ளார்.
அதிமுகவின் தொண்டர்களுக்கு அவர், ‘அன்பு மிகுதியால் கழகத்தினர் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கிறது. வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அதிமுகவினரின் உழைப்பு விசுவாசமும் பயன்பட வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.
‘வாக்காளர்களை நேரில் சந்திக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. எண்ணமும், இதயமும் மக்களுடனேயே இருக்கிறது.’ என்றும் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment