நீங்கள் பார்க்கும் “ரௌடி″ புத்த பிக்குவானர்… புத்த பெருமானின் போதனையை பின்பற்றுபவர் அல்ல. மாறாக பொதுபலசேனாவின் போதனையை பின்பற்றி ரௌடியிசத்தை கடிப்பிடிக்கும் ஒரு புத்த பிக்குவாகும். சிங்களத்தில் சரமாரியாக படுதூசணம் பேசுவதாக இக்காணொளியை பார்த்த சிங்களம் தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
காவியுடையை அணிந்து கொண்டால் இலங்கையில் பொலிசாருக்கு எதிராகவோ, சட்டத்தை நிலைநாட்டுபவாகளுக்கு எதிராகவோ, மக்களுக்கு எதிராகவோ எதையும் செய்யலாம் என்பது இலங்கையில் இப்பொழுது நிலவும் புதிய சட்டமாகும்.
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியின் அடாவடித்தனம் தொடர்பில் இரண்டாவது ஆதாரமும் தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு விகாராதிபதி அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர், கொழும்பிலிருந்து சென்ற மின்சார சபையின் அதிகாரியை தாக்கியதுடன், மிகவும் கேவலமான வார்த்தைகளையும் பிரயோகித்திருந்தார்.
குறித்த செய்தியை ஆதாரத்துடன் இணையத்தளம் ஒன்று வெளியிட்டதையடுத்து, பல ஊடகங்களிலும் பிரசுரமாகின.
குறித்த தேரரின் அடாவடித்தனம் தொடர்பில் தற்போது இரண்டாவது காணொளியும் வெளியாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் முன்னிலையில் இடம்பெற்ற இச்சம்பவம், பௌத்த பிக்குகளின் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பௌத்த விகாரையில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.
இவர்களோடு சென்ற பொலிஸாருடன் சம்பவத்தினை பார்த்துக் கொண்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமா என மின்சார சபை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ஜனாதிபதி மகிந்தவையும் மின்சக்தி எரிசக்த அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியையம் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
How many times he said ‘Huththika putha’ and then ‘ammata huha’ in front of a female police officer?